Wednesday, December 16, 2020

ஆரோக்கியத்திற்கு ஒரு செக் லிஸ்ட்

 ஆரோக்கியத்திற்கு ஒரு செக் லிஸ்ட்

ஆரோக்கியமாக ஒவ்வொருவரும் வாழ இந்த உலகில் நாம் கடைப்பிடிக்க  வேண்டிய பல நல்ல விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுகவனமாக  வாசித்து ஆம் அல்லது இல்லை என்பதில் ‘டிக்’ செய்து கொள்ளவும்இறுதியில்  பதிலளித்தவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு உங்களின் வாழ்க்கையில்  ஆரோக்கியத்தின் நிலையை சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

எண்

கேள்விகள்

ஆம்

இல்லை

1

நீங்கள் நலமாக இருப்பதாக நம்புகிறீர்களா?

 

 

2

நீங்களும், உங்களைச் சுற்றியுள்ளவர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டு சங்கல்பம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?

 

 

3

பிரார்த்தனையுடன் சாப்பிட ஆரம்பிக்கிறீர்களா ?

 

 

4

சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவிக் கொள்கிறீர்களா?

 

 

5

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு வேளையாவது பசி எடுத்த பிறகே சாப்பிடுகிறீர்களா?

 

 

6

உணவை வாயை மூடி நன்கு மென்று கூழ் போலாக்கி விழுங்குகிறீர்களா?

 

 

7

உணவை ரசித்து ருசித்து உண்ணுகிறீர்களா?

 

 

8

சாப்பிடுகிறேன் என்ற முழு நினைவோடும், கவனத்தோடும் சாப்பிடுகிறீர்களா?

 

 

9

உண்பதை உப்பில் ஆரம்பித்து இனிப்பில் முடிக்கிறீர்களா?

 

 

10

சாப்பிடும்போது டி.வி பார்ப்பதை தவிர்த்து விட்டீர்களா?

 

 

11

சாப்பிடும்போது புத்தகம் படிப்பதில்லையா ?

 

 

12

யாருடனும் அதிகம் பேசாமல் சாப்பிடுகிறீர்களா?

 

 

13

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், பின்னும் / இடையில் தேவையின்றியும் தண்ணீர் குடிக்காமலிருக்கிறீர்களா?

 

 

14

நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தொங்க விடாமல் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களா?

 

 

15

ஸ்பூன் போன்றவைகளை உபயோகிக்காமல் உணவைக் கையால் எடுத்து சாப்பிடுகிறீர்களா?

 

 

16

சாப்பிட்டால் பிறகு சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து குளிக்கிறீர்களா? ஒரு வேளை குளித்து விட்டால் சுமார் 45 நிமிடம் கழித்து சாப்பிடுகிறீர்களா?

 

 

17

கூடுமானவரை ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, வீட்டு உணவுகளையே சாப்பிடுகிறீர்களா?

 

 

18

முடிந்தவரை உங்கள் உணவில் அவ்வப்போது ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொள்கிறீர்களா?

 

 

19

வயிறு நிரம்ப, வயிறு புடைக்கும் அளவிற்கு மூச்சு முட்ட உண்பதைத் தவிர்த்து விட்டீர்களா?

 

 

20

கோபமான / கவலையான / பயம் மிகுந்த மனநிலையில் உண்பதைத் தவிர்க்கிறீர்களா?

 

 

21

அசைவ உணவுகளைக் கூடுமானவரைத் தவிர்க்கிறீர்களா? ஒரு வேளை உண்டு விட்டால், உண்ட உணவு செரிக்கும் அளவிற்கு உடலுக்கு வேலை தருகிறீர்களா?

 

 

22

உழைப்பிற்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ற உழைப்பு என்று கடைப்பிடிக்கிறீர்களா?

 

 

23

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் இனிப்பான பழங்களை உணவோடு சேர்த்துக் கொள்கிறீர்களா?

 

 

24

வடக்கு நோக்கி உட்கார்ந்து உண்பதை தவிர்க்கிறீர்களா?

 

 

25

மருந்து, மாத்திரைகளைப் படிப்படியாகக் குறைத்து விட்டீர்களா? அல்லது நிறுத்தி விட்டீர்களா?

 

 

26

மாலை வேளையில் எந்தவித நொறுக்குத் தீனிகளும் அதிகம் சாப்பிடாமல் இருக்கிறீர்களா? (இது இரவு உணவிற்கான பசியைத் தள்ளிப் போட்டு விடும்)

 

 

27

காற்றடைக்கப்பட்ட பாக்கெட்களில் வைத்து விற்கப்படும் (PACKED FOOD ITEMS) தின்பண்டங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கிறீர்களா? (ம்:குர்குரே)

 

 

28

அஜினோமோட்டா போன்ற ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்ட் புட் வகை உணவுகளைத் தவிர்க்கிறீர்களா?

 

 

29

பிராய்லர் கோழிசிக்கன் உணவுகளை முற்றிலுமாக ஒதுக்கி விட்டீர்களா?

 

 

30

இரவு 9 மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்கிறீர்களா?

 

 

31

இரவு உணவாக எளிதில் ஜீரணமாகும் கஞ்சி, பழங்கள் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்கிறீர்களா?

 

 

32

பெரிய ஷோரூம்களில் விற்கப்படும் பளபளப்பான, விதை நீக்கம் செய்யப்பட்ட பழ வகைகளை ஒதுக்கி, நாட்டுப் பழங்களை மட்டுமே உண்ணுகிறீர்களா?

 

 

33

அனாடமிக் தெரபியை முழுமையாக கடைப்பிடிக்க ஆரம்பிக்கும்போது இது வரை தங்கியிருந்த கழிவுகள் காய்ச்சல், வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சளி, தூக்கம் போன்றவை மூலம் வெளியேற்றப்படுவதைக் கண்டு பயப்படாமல், தொந்தரவுகளாக கருதாமல், சிகிச்சை நடைபெறுவதாக புரிந்து கொள்வீர்களா?

 

 

34

தாங்க முடியாத தலைவலி போன்றவை ஏற்படும் பட்சத்தில் ஆங்கில மருத்துவம் செய்து கொள்ளாமால், முத்ரா, அகுபிரஷர், அகுபங்சர் போன்ற மரபு வழி மருத்துவத்தை மட்டுமே நாடுகிறீர்களா?

 

 

35

அஸ்கா என்னும் வெள்ளைச் சர்க்கரை உபயோகிப்பதை முழுமையாக நிறுத்தி விட்டீர்களா?

 

 

36

இனிப்புச் சுவைக்காக இரசாயனங்கள் கலக்காத நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பபட்டி போன்றவற்றை உபயோகிக்கிறீர்களா?

 

 

37

உங்கள் உணவுகளில் கம்பெனி வகை பிராண்டட் எண்ணெய்களை முழுமையாகத் தவிர்த்து உங்கள் நம்பிக்கைக்குரியவர் மூலம் (வாங்கிய) செக்கில் ஆட்டிய எண்ணெய்களை உபயோகிக்கிறீர்களா?

 

 

38

உங்கள் சமையலறையிலிருந்து கம்பெனி வகை பிராண்டட் அயோடின் கலந்த உப்பு வகைகளை வெளியேற்றி விட்டீர்களா?

 

 

39

உப்புச் சுவைக்காக, வெயிலில் உலர்த்தி, லேசாக வறுத்து அயோடின் நீக்கம் செய்த சாதாரண கல் உப்பை  அல்லது இந்துப்பை உபயோகிக்கிறீர்களா?

 

 

40

இரசாயனங்களை நஞ்சாகக் கருதி கூடுமானவரை இரசாயனங்கள் கலவாத இயற்கை விவசாய உணவுப் பொருட்களையே உபயோகிக்கிறீர்களா?

 

 

41

உங்கள் சமையலுக்குத் தேவையானப் பொடி வகைகளை நீங்களே தயார் செய்து உபயோகித்துக் கொள்கிறீர்களா?

 

 

42

மது, புகை போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்த்துள்ளீர்களா?

 

 

43

ஒரு நாளைக்கு இரு முறை மலம் எளிதாகக் கழிக்கிறிர்களா?

 

 

44

வாரம் இரு முறை நல்லெண்ணெய்க் குளியல் செய்கிறீர்களா?

 

 

45

வருடம் இரு முறையாவது பேதி மருந்து சாப்பிட்டுக் குடல் சுத்தம் செய்து கொள்கிறீர்களா?

 

 

46

மல,ஜலத்தை அடக்கி வைக்காமல் அவ்வப்போது வரும் போது போகிறீர்களா?

 

 

47

ஐந்து நாள் பயிற்சியில் கற்று கொண்ட கண், மூ்க்கு கழுவுதல், அஹிம்சா எனிமா ஆகியவற்றை அவ்வப்போது மேற்கொண்டு கழிவுகளை நீக்கிக் கொள்கிறீர்களா?

 

 

48

வடக்கு அல்லது தெற்கு நோக்கி மட்டுமே உட்கார்ந்து மல,ஜலம் கழிக்கிறீர்களா?

 

 

49

குளிர்சாதனப் பெட்டியின் உபயோகத்தை கூடுமானவரைத் தவிர்த்துக் கொள்கிறீர்களா?

 

 

50

உங்கள் சமையலறையில் பிளாஸ்டிக் பாட்டில், டப்பாக்கள் உபயோகத்தைக் குறைத்து விட்டீர்களா? பாத்திரங்கள் துலக்க இராசாயன சோப் பவுடர்களைத் தவிர்க்கிறீர்களா ?

 

 

51

தாகம் எடுக்கும் போது மட்டுமே தண்ணீர் அருந்துகிறீர்களா?

 

 

52

மினரல் வாட்டர், ஃபில்டர் வாட்டர், ஐஸ் வாட்டர் போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்தி விட்டு மண் பானை () செம்புக் குடத்தில் ஊற்றி வைத்த சாதாரணக் குழாய் நீரைக் குடித்து வருகிறீர்களா?

 

 

53

கொதிக்க வைத்த நீரை குடிப்பதில்லைதானே?

 

 

54

அன்ணாந்து மடமடவென ஒரு செம்பு நீரையும் ஒரே மூச்சில் குடிக்காமல், மிடறு மிடறாக உதடு நனையும் வகையில் தண்ணீரைச் சப்பிக் குடிக்கிறீர்களா?

 

 

55

சிறுநீர்க் கழித்தால் உடனே தண்ணீர் குடித்துக் கொள்கிறீர்களா?

 

 

56

பிளாஸ்டிக் / சின்டெக்ஸ் டேங்க்கைப் பயன்படுத்தாமல், சாதாரண சிமெண்ட் தொட்டியை மேல்நிலைத் தொட்டியாகப்  பயன்படுத்துகிறீர்களா?

 

 

57

மேல்நிலை நீர்த் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்கிறீர்களா?

 

 

58

ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்என்ற நிபந்தனைகளை மனதில் கொண்டு தாகமில்லாத போதும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா?

 

 

59

டீ, காப்பி போன்ற பானங்கள் குடிப்பதை விட்டு விட்டீர்களா?

 

 

60

பாக்கெட் பால் உபயோகத்தை உங்கள் வீட்டில் முற்றிலுமாக  நிறுத்தி விட்டீர்களா?

 

 

61

பன்னாட்டுக் கம்பெனிகளால் தயாரிக்கப்படும் இரசாயனத்தால் ஆன குளிர்பானங்களைக் குடிக்காமல் தவிர்க்கிறீர்களா?

 

 

62

அவசியமானால் மோர், இளநீர், தேங்காய்ப் பால், காய்கறி சூப் போன்ற பானங்களை அருந்துகிறீர்களா?

 

 

63

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வசிக்கிறீர்களா?

 

 

64

படுக்கை அறையில் ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டுப் படுத்துத் தூங்குகிறீர்களா?

 

 

65

கொசுவர்த்தி, லிக்விடேட்டர் போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்தி விட்டீர்களா?

 

 

66

நல்ல காற்று உள்ளே வந்து கெட்ட காற்று வெளியேறும் வகையில் உங்கள் வீட்டின் அமைப்பு உள்ளதா?

 

 

67

உங்கள் வீடு முழுவதும் காற்றும், வெளிச்சமும் ஓரளவிற்காவது சம விகிதத்தில் இருக்கிறதா?

 

 

68

உங்கள் படுக்கை இடைஞ்சலாக இல்லாமல் நன்கு தாராளமாக உள்ளதா?

 

 

69

வெறும் தரையில் படுக்காமல் பாய் அல்லது இலவம் பஞ்சு மெத்தையில் படுக்குகிறீர்களா/

 

 

70

உங்கள் படுக்கையறைக்குள் ஃப்ரிட்ஜ் போன்ற ரேடியேஷன் வெளிப்படும் பொருட்கள் இல்லாமல் இருக்கிறதா?

 

 

71

உங்கள் படுக்கையின் தலைமாட்டில் செல்போனை வைத்துக் கொள்ளாமல் தூங்குகிறீர்களா?

 

 

72

குறைந்தது 6 மணி நேரமாவது தூங்குகிறீர்களா? அல்லது ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா?

 

 

73

தூக்கத்திற்கும், ஓய்விற்குமான வித்தியாசத்தை அறிந்து கொண்டு தூக்கம் வராதபோது அதற்காக கவலைப்படாமல் வெறுமனே ஓய்வு மட்டும் எடுத்துக் கொள்கிறீர்களா

 

 

74

நேரத்திலேயே இரவு படுத்து, அதிகாலையிலேயே எழுந்து கொள்கிறீர்களா?

 

 

75

இரவு 10 மணிக்குள் தூங்கி விடுகிறீர்களா? இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்களா?

 

 

76

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பற்களைத் துலக்கிக் கொண்டுப் படுப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளீர்களா?

 

 

77

.சி அறையில் உறங்கினாலும் அறையின் வெப்பநிலை, உடலின் வெப்பநிலைக்கு இணையாக இருக்கும்படி அதாவது குளிரும் இல்லாமல், புழுக்கமும் இல்லாத வகையில் அறையின் வெப்ப நிலையை வைத்துக் கொள்கிறீர்களா

 

 

78

படுக்கும் போதும், படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும் ஒருக்களித்தவாறு ஒரு பக்கமாக கை ஊன்றி படுக்கவும், எழவும் செய்கிறீர்களா?

 

 

79

வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் படுத்துத் தூங்குகிறீர்களா ?

 

 

80

மார்பிள், கிரானைட், போன்றவை கொண்டு செய்யப்படாத  தரைப்பகுதியுள்ள வீட்டில் நீங்கள் வாழ்கிறீர்களா?

 

 

81

உங்கள் சக்தி வீண் விரயமாகாமல் இருக்க படுக்கையிலோ அல்லது பயணத்திலோ உங்களுக்கு நேராக (ஃபேன்) காற்று அடிக்காதவாறு படுத்துக் கொள்கிறீர்களா? அல்லது உட்காருகிறீர்களா?

 

 

82

காலையில் மல, ஜலம் கழித்ததும் உடல் மூட்டுக்களுக்கு அசைவு கொடுக்கும் சிறு,சிறு உடற்பயிற்சிகளையாவது குறைந்த பட்சம் செய்கிறீர்களா?

 

 

83

மூச்சுப் பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை தினமும் செய்கிறீர்களா?

 

 

84

மிருதுவான, காலுக்கு இதமான செருப்புக்களை அணிந்து நடப்பதை தவிர்க்கிறீர்களா அல்லது அவ்வப்போது வெறும் காலில் நடப்பதையே செயல்பாட்டில் வைத்துள்ளீர்களா?

 

 

85

குளிப்பதற்கு நன்கு சூடான சுடுதண்ணீர் உபயோகிக்காமல், வெதுவெதுப்பான, விளாவிய அல்லது குளிர்ந்த நீரையே உபயோகிக்கிறீர்களா?

 

 

86

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விடுகிறீர்களா?

 

 

87

சோப், ஷாம்பூ உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டீர்களா?

 

 

88

பல் துலக்க பேஸ்ட் உபயோகிப்பதை நிறுத்தி விட்டு நீங்களே தயார் செய்த அல்லது உள்ளூர் தயாரிப்பு பற்பொடிகள் அல்லது வேப்பங்குச்சி, மிஸ்வாக் குச்சி போன்ற ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துகிறீர்களா?

 

 

89

தலைக்கு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயையே தேய்த்துக் கொள்கிறீர்களா?

 

 

90

டி.வி.யில் விளம்பரம் செய்யப்படும் உணவுப் பொருள்களையும், போஷாக்கு பானங்களையும், காஸ்மெடிக்ஸ் பொருட்களையும், மருத்துவப் பொருட்களையும் உங்கள் பயன்பாட்டிலிருந்து முடிந்தவரை விலக்கி விட்டீர்களா?

 

 

91

தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதிலிருந்து நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் முற்றிலுமாக விலகி விட்டீர்களா?

 

 

92

புத்தி, மனசு இரண்டும் செயல்படும் வித்தியாசத்தைப் புரிந்து கொண்டீர்களா?

 

 

93

வாரம் ஒரு நாளாவது தினசரி வழக்கமான வேலைகளிருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா?

 

 

94

உங்கள் எண்ணம், பிரார்த்தனை ஆகியவை நேர்மறையாக (பாசிட்டிவாக) இருக்கிறதா?

 

 

95

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் (நெகட்டிவ்) உங்களைச் சந்தித்துப் பேசினால் / செயல்பட்டால் அங்கிருந்து நகர்ந்து விலகி விடுவீர்களா?

 

 

96

உங்கள் பாசிட்டிவ் எண்ணங்களை மற்றவர்களிடம் அவர்கள் நலனுக்காகவும், உங்கள் நலனுக்காகவும் வெளிப்படுத்துவீர்களா?

 

 

97

உடம்புக்கு வேலை கொடுக்கும் விதத்தில் பணிகளை மேற்கொள்கிறீர்களா?                    (-ம்: நடப்பது, படி ஏறுவது )

 

 

98

ஹீலர் பாஸ்கர் நடத்தும் ஐந்து நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐந்து நாள் பயிற்சி வகுப்பின் முழு வீடியோ தொகுப்பையும் முழுமையாக பார்த்துப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

 

 

99

அகுபங்சர், அகுபிரஷர், வர்மா, முத்ரா, சித்தா போன்ற மரபு வழி மருத்துவ முறைகள் ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது அதற்கான ஆர்வத்தில் இருக்கிறீர்களா?

 

 

100

இனம், சாதி, மதம் கடந்து நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்களா?

 

 

மேலே உள்ள கேள்விகளுக்குஆம்என விடையளித்திருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து இப்பொழுது நீங்கள் இருக்கும் ஆரோக்கியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

 “ஆம்என பதிலளித்திருப்பவற்றின் எண்ணிக்கை

உங்கள் ஆரோக்கியத்திற்கான நிலை

90  க்கும் அதிகமாக இருந்தால்

முழு ஆரோக்கிய வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் ஆனந்தமடைந்து கொள்ளலாம்.

70 க்கும் அதிகமாக இருந்தால்

முழு ஆரோக்கிய வாழ்க்கையை நோக்கி வந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் முயற்சிக்க வேண்டும்


50 – 70 கேள்விகளுக்கு எனில்

நீங்கள்இல்லைஎன்று பதிலளித்த விஷயங்களில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நீங்கள் அவசியம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

50 க்கு குறைவாக இருந்தால்

முழுமையான ஆரோக்கிய வாழ்க்கையை நாடி நீங்கள் வரவில்லை, மேலும் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியக் குறைபாடு இருக்கும் என்றும் பொருள்.

நீங்களும்இல்லைஎன்று பதிலளித்தவற்றில் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நீங்கள் அவசியம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்


மேலே குறிப்பிட்டுள்ள நல்ல விஷயங்களையும், இன்னும் இதில் குறிப்பிடப்படாத ஆரோக்கியத்திற்கான நல்ல விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்தால் அவற்றையும், அவற்றில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நீங்கள் கடைப்பிடித்து,. அதன் மூலம் அனைவரும் ஆரோக்கியத்தை முழுமையாக பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

வாழ்க வையகம்வாழ்க வளமுடன் !!

No comments:

Post a Comment