Saturday, March 14, 2026

ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர்

ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர்

 மா. செந்தமிழன் 

(ஒலி வடிவ உரையின் எழுத்து வடிவ கட்டுரை)


ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர்
 [பகுதி 1] - 
ஆசான் ம.செந்தமிழன்

ஒவ்வொரு நாளும் புத்துடல் பெறுவீர் எனும் தலைப்பில் ஆசான் மா செந்தமிழன் சிதம்பரத்தில் 27 .02.2021 அன்று நடைபெற்ற செம்மை வாழ்வு நிகழ்வில் உடல் நலத்துக்கான வழிகாட்டல்களை வழங்கி ஆற்றிய நல உரை
செம்மை நலம் உரையின் முதல் பகுதி 

அனைவருக்கும் வணக்கம்

நம்முடைய செம்மை வாழ்வு என்ற ஒரு கருத்து ஏற்கனவே உங்களில் பலருக்கு அறிமுகமாகி இருக்கும். இந்த வகுப்பில் செம்மை வாழ்வு என்ற கருத்துடைய சில நடைமுறை ஒழுங்குகளை பற்றி உங்களுக்கு கற்றுத் தர விரும்புகிறோம்.
செம்மை வாழ்வு என்பது நோயற்ற வாழ்வு அல்ல. நோயற்ற வாழ்வு என்று எதுவுமேயில்லை.
உடலென்றால் நோய் எனும் ஒரு பகுதி இருக்கும். நலம் என்பது இன்னொரு பகுதி. இந்த இரண்டும் இணைந்திருப்பது தான் உடல்.
இதை வெற்றி பெற முயற்சிப்பதும், நோய்களை எல்லாம் வெற்றி பெற்று விடுவேன் என்று நம்புவதும் தான் சிக்கல்.
நோய் மிகும் போது அதை எப்படி தணிப்பது? என்பது தான் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பாடம்.
நோய் மிகும். அவ்வாறு மிகுந்தால் உடலில் செயல்பாடுகளில் குறை ஏற்படும். அது வலியாக இருக்கலாம். மயக்கமாக இருக்கலாம். உதிரப் போக்காக இருக்கலாம். பசியின்மையாக இருக்கலாம். மந்தம், சோர்வு ஆகியவையாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் இந்த சிக்கல்களை எப்படித் தணிப்பது என்பது தான் அடிப்படையில் மருத்துவம்
நோயே இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்பது பேராசை. அப்படி ஒன்று இல்லை. என்றும் இல்லை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. எல்லா உயிரினங்களுக்குமே இது பொருந்தும்

இதை ஏன் தொடக்கத்திலேயே கூறுகிறோம் என்றால் இந்த செம்மை வாழ்வு என்ற கருத்தை நீங்கள் கற்கும் போது உங்களுடைய அறிவு, ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஏதேனும் மருந்து இருக்குமா? என்பதைத் தேடிக் கொண்டே இருந்தால் நான் எதிரில்தான் இருப்பேன் உங்களுக்குத்தான் பேசுவேன். ஆனால் என் பேச்சு உங்களுக்குப் புரியப் போவதில்லை.
இது போல எண்ணற்ற வகுப்புகளை நாம் நடத்தி இருக்கிறோம். பல ஆயிரம் பேரிடம் இதுவரை உரையாடி இருக்கிறோம்.
எவ்வளவு தான் உரையாடினாலும், நாம் என்ன கூறினோம்? என்பதிலிருந்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் அல்லது பலர் அப்படி கேட்க மாட்டார்கள்
என்ன காரணம் என்றால், ஒருவருடைய உரையைக் கேட்கும்போதே தன் நோக்கத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருப்பது. அவர்களுக்கு ஏற்கனவே சில கேள்விகள் இருக்கும் . அந்தக் கேள்விகளுக்குச் சில பதில்களும் அவர்களிடம் இருக்கும். அதைப் பற்றிப் பேசுகிறார்களா? இல்லையா? என்ற நோக்கத்திலேயே எதைக் கேட்டாலும், யார் பேசினாலும் அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாது.
ஆகவே ஒன்றை முதலில் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
நோயில்லாத வாழ்வு என்பது ஒரு வாசகம்.அது உண்மையற்ற ஒரு வாசகம்.
நோய் இருக்கத்தான் செய்யும். அது மிகாமல் எப்படித் தணித்துக் கொண்டே இருப்பது என்பதுதான் வாழ்வியல் .
நம்முடைய மரபு வாழ்வியல் என்பது மிகும் நோயை தணிப்பது எவ்வாறு என்பதை ஒரு வடிவமைப்பு ஆக்கிய வாழ்வியல் .
நம்முடைய வாழ்க்கை முறை மரபு வாழ்வியலில் நோய் தணிக்கும் வழி முறைகள் இருக்கின்றன. 

அவற்றை இந்த சூழலுக்கேற்ப பொருத்தி முன்னெடுத்துக் கற்றுத் தருகிறோம்.
இதே இந்த மடத்தில் அறுபத்தி மூவர் நாயன்மார் மடத்தில் பல ஆயிரம் பேருக்கு உடல் நல வழி காட்டுதல்களை செய்திருக்கிறோம். பல முறை இங்கு பாடங்கள் நடத்தி இருக்கிறோம்.
அவ்வளவு பேரும் நோயில்லாமல் இருக்கிறார்களா? அல்லது நோயச்சம் இல்லாமல் இருக்கிறார்களா? என்றால் ஏதேனும் ஒரு சிக்கல் வந்தால் அச்சத்திற்கு ஆட்படுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். 
ஒரு சிக்கல் வந்தால் நாம் அதைஎப்படி புரிந்து கொள்வது ? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது தான் கல்வியே தவிர சிக்கலே வராத வகையில் ஏதாவது ஒரு கல்வியைக் கூறுங்கள் என்று யாரிடமாவது கேட்டால் அது கல்வியே அல்ல.
ஆனால் இவ்வாறான ஆசைகளைத் தூண்டி விட்டு அல்லது இதை எல்லாம் செய்தால் சிக்கலே வராது என்று கூறுவது ஒரு வணிகம். இது மிகவும் எளிது.
மனிதர்களில் பெரும்பகுதியினர் அந்த ஆசைகளுக்கு ஆட்படுகிறார்கள். ஆனால் நாம் எல்லா தளங்களிலும் முன்வைப்பதைப் போல உடல் நலம் அல்லது வாழ்வியல் என்ற தளத்திலும் எது உண்மையோ அதை மட்டுமே உரைக்க வந்திருக்கிறோம்.
அந்த உண்மை நோயில்லாத உடல் என்று எதுவுமில்லை என்பதுதான்.
இப்பொழுது நாம் நோயைத் தணிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டாலே போதும் என்பது தான் பாடத்தின் சுருக்கம்
அதற்கான சில ஒழுங்குகளையும், நடைமுறைகளையும் இந்தப் பாடத்தில் நான் உங்களுக்கு முன் வைக்கிறேன்.
இதன் பிறகு இந்த ஒழுங்குகளைப் பற்றிய நடைமுறை விளக்கங்தள், வீட்டு மருந்துகளின் செய்முறைகளை எல்லாம் உங்களுக்கு கற்றுக் தருவோம். இந்த இரண்டு நாட்களிலேயே உங்களுக்கு கற்றுக் தருவோம். வீட்டு மருந்துகளை எல்லாம் செய்து காட்டுவோம்
இந்த இரண்டு நாட்கள் எனப்படும் காலம் இப்பொழுது கற்பிக்கப்படும் பாடத்தின் கருத்துக்கு மிகவும் குறுகிய காலம். அதாவது இந்த இரண்டு நாட்களில் இவ்வளவு கற்பிக்கவே இயலாது. ஆனாலும் இதை நீட்டித்து
 பல நாட்கள் வகுப்பாக நடத்துவதற்கான வாய்ப்பில்லை. இரண்டு நாட்களிலேயே கற்றுத் தர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆகவே நீங்கள் எவ்வளவு ஆழமாக இதை உள்வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். குறிப்பாக என்னுடைய பாடத்தை நான் ஒன்றரை மணி நேரம் அல்லது மிக மிக கூடுதலாக இரண்டு மணி நேரம். இது தான் நான் பேசும் நேரம் பொதுவாகவே . அந்த நேரத்தை Pங்கள் எவ்வளவு உள்வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு நடைமுறைகளின் மீது ஆளுமை இருக்கும்.
வீட்டு மருந்துகளைக் கற்றுக் கொண்ட பிறகு எந்த மருந்தை எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்று புரிதல் வேண்டும். நீங்கள் பலருமே கேள்விப்பட்ட செய்திகளை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சித்த மருந்துகள் அல்லது சித்த மருத்துவ செய்முறைகளை அந்த மருத்துவத்தை முன்னெடுப்பவர்கள், முன்னோடிகள் கமுக்கமாக வைத்திருந்தார்கள், அதை வெளியில் சொல்லவில்லை என்ற செய்தியை கிட்டத்தட்ட எல்லோருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தொடக்கத்தில் அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள், எனக்கும் கோபம் இருந்தது.
எல்லாவற்றையுமே சொல்லிக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணம் எனக்கும் இருந்தது
ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த துறையில் நான் இருப்பவன் என்ற வகையில் பலரை சந்தித்திருப்பவன் என்ற முறையில் எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது.
இந்த உடல் நலம் குறித்த செய்திகளை உடல் நலத்திற்கான தீர்வு தரும் பொருட்களை அனைவருக்கும் கற்றுத் தருவதற்கு வாய்ப்பேயில்லை என்று நான் இப்பொழுது புரிந்து கொண்டேன்.
இப்பொழுது இந்தப் பாடத்தில் மட்டுமல்ல, நம்முடைய எல்லா வகுப்புக் ளிலும் அனைத்தையும் நாம் கற்றுத் தருவதே இல்லை.. எனன்றால் ஒரு பாடத்தை எந்த ேநாக்கில் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள் என்பதிலிருக்கிறது அவர்களின் புரிதலின் ஆழம்.
ஒரு சான்றாக இங்கு உங்களுக்கு பூண்டுப்பாகு என்ற ஒரு வீட்டு மருந்தினைக் கற்றுத் தருவோம். இந்தப் பூண்டுப்பாகு என்ற அந்த வீட்டு மருந்து ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. அதை நாம் ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் அவ்வாறான ஒரு மருந்தை உணர்ந்தோம்.
இதைத் தேவைப்பதகிறது என்பதை உணர்ந்து அதை நாமே வடிவமைத்த ஓரு மருந்து அது.
இது தீவிரமான உடல் வலி, செரிமானமின்மை, நெஞ்சு வலிப்பது போன்ற நிலை ஆகியவற்றிற்கெல்லாம் உடனடியாக விடுவிப்புக் கொடுக்கிறது. . உடனடியாக சிக்கலைத் தீர்க்கிறது. ஆனால் மிகவும் எளிமையான மருந்து. யார் வேண்டுமானாலும் செய்யலாம் .மிக எளிதாக கற்றுக் கொடுத்து விடலாம்.
இந்தப் பூண்டும் பாகை பற்றி. இன்னும் ஒரு சில மாதங்களில் சமூகத்தில் என்ன செய்திகள் புழங்கும் என்று ஓரளவிற்கு எனக்கும் புரிகிறது.
10.00 :
நீங்கள் இன்னும் ஒரு சில மாதங்கள் கழிந்து நீங்களே பார்ப்பீர்கள். உங்களுக்கே யாராவது வந்து நீங்கள் இங்கு நேரடியாக வந்து நம்மிடம் வந்து அதைத் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கே வந்து பூண்டுப் பாரு மாரடைப்புக்கு மருந்து என்று சொல்வார்கள். இது ஏன் நிகழ்கிறது என்றால் உடலைப் பற்றியும், உடல் நோய் தணிக்கும் முறைகள் பற்றியும் ஆழமான புரிதல் எனக்கு வேண்டாம் என்ற மனிதர்களுடைய பிடிவாதம்.
ஒரு வகையில் அது ஒரு பேராசை. நான் எதையும் ஆழமாக கற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் எனக்குத் தீர்வு வேண்டும் என்ற ஒரு பேராசை.
ஏற்கனவே நிலவேம்பு இப்படித்தான் எந்தக் காய்ச்சல் இருந்தாலும் நிலவேம்புக் கசாயம் குடிப்பது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
பல உரைகளில் குறிப்பிட்டது போல இஞ்சி, சுக்கு ஆகியவை எல்லாம் உடல் நலனைக் கெடுக்கும் அளவுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மிளகு பற்றிய புரிதல்கள் அவ்வாறே இருக்கின்றன. சீரக நீர் என்று ஒன்றை நாம் அறிமுகப்படுத்தியிருந்தோம். அந்த சீரக நீர் இப்பொழுது படாத பாடு படுகிறது. எதற்கு சீரக நீர் குடிக்க வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? என்ற புரிதல் இல்லை.
நாம் ஒரு சிலருக்குத் தானே கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் அந்த ஒரு சிலரிடமிருந்து இந்த தகவல் எப்பர பரவுகிறது? கல்வியால் பரவுகிறதா? என்றால் இல்லை. அது ஒரு தகவலாகப் பரவிக் கொண்டே இருக்கிறது
ஒரு பாடம் தகவலாகி விட்டால் என்ன செய்வது? பாடம் என்றால் அது பல பரிமாணங்களைக் கொண்டது. அதனுடைய ஆழம் என்ன? எந்தச் சூழலில் எதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பாடம். ஆனால் தகவலுக்கு இதெல்லாம் தேவையில்லை.
தகவலென்றால் ஒரு செவி வழியாக பரவிக் கொண்டே இருக்கலாம். இதைச் செய்தால் அதற்கு நல்லது. அதைச் செய்தால் இதற்கு நல்லது என்று.
ஒரு வயதான பெண், ஒரு 65 வயது பெண், எனக்கு நெருங்கிய தோழியினுடைய தாய். அவர் வாழ்வில் நடந்ததைப் பார்த்ததும் இவ்வாறான என்னுடைய எச்சரிக்கை உணர்ச்சிக்கு ஒரு காரணம். அவருக்கு மூச்சுத் திணறல் அவ்வப்போது ஏற்பட்டது. அவ்வளவுதான். அவருக்கு வந்த சிக்கல் அவ்வளவுதான். மூச்சு விடுவதில் அவ்வப்போது திணறல் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் மருத்துவத் துறையை நாடுகிறார்கள். நாடும் பொழுது அவர்கள் வசச் சொல்லி ஆய்வு செய்து ஒரு கட்டி இருக்கிறது. அது ஒரு புற்று நோய் கட்டி என்று சொல்லி விட்டார்கள்.
அவருக்கு கட்டி இருப்பது வயிற்றில், அதாவது கருப்பைக்கு அருகே வயிற்றில் அந்த கட்டி இருக்கிறது. இவருக்கு எழும் சிக்கல் மூச்சுத் திணறல்.
இந்த இண்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகக் கூறி அல்லது தொடர்பு இருக்கலாம் என்று கூறி புற்று நோய் சிகிச்சைக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த நிலையில் நாம் மூச்சுத் திணறல்தான் இருக்கிறது என்றால் மூச்சுத் திணறலுக்கு என்ன உண்டோ அதைச் செய்யுங்கள் என்று சில வழி காட்டுதல்களை வழங்கினோம். ஒரு சில நாட்கள் அவற்றை அவர் கடை பிடித்து ஓரளவிற்கு விடுபட்டார். மூச்சுத் திணறல் ஏறத்தாழ இல்லை அல்லது வந்தாலும் குறைந்த நேரம் இருக்கிறது என்று சொன்னார்கள். அதாவது ஏழு அல்லது எட்டு நாட்களிலேயே அவர் நிம்மதியாக உட்கார்ந்திருக்கும் அளவிற்கு வந்து விட்டார், மிக எளிமையான வழிகாட்டல்களின்படி.
காம் அங்கு செல்லும் போதே அந்தப் பெண்ணை சந்திக்க செல்லும் போதே அதன் பிறகுதான் சந்திக்கச் செல்கிறோம். தொலைவில் இருந்தே வழிகாட்டல்களை எல்லாம் சொல்லி விட்டோம். முன்னேற்றம் டைந்து கொண்டிருக்கிறார். நலமடையவில்லை. நேரில் சந்திக்கலாம் என்று செல்லும்போதே அவர் புற்று நோய்க்கான இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் இப்படி எந்த சொல் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தீர்வுகளைப் பற்றி அவர் படித்து கொண்டிருக்கிறார். அவருக்கு வந்த தகவல்களைப் படித்துக் கொண்டு அவற்றில் ஒரு சிலவற்றை செய்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து நாம் அப்போதே கூறினோம்.
இவற்றில் கூறப்பட்டுள்ளவைகள் எல்லாமே தவறான தகவல்கள். இயற்கை மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவம் என்றால் என்ன? இந்த தகவல்களை எல்லாம் நீங்கள் பின்பற்றக் கூடாது என்று நாம் கூறினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு எல்லா மருத்துவ முறைகளுக்கும் சென்று அவர் மரணமடைந்தார். அது ஒரு பெரிய இழப்பு, அந்தக் குடும்பத்தினருக்கு. தனிப்பட்ட முறையில் எனக்கும் அது மிகுந்த வருத்தத்தைக் கொடுத்த மரணம். இது போல பல சான்றுகளை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
 எல்லோருடைய கைகளிலும் தகவல்கள் இருக்கின்றன.
எலுமிச்சம் vழத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? தேன் எவற்றுக்கெல்லாம் மருந்து என்று ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
15.00
நம்முடைய குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் குன்றியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பக்கம் வலது கை வலது கால் திடீரென செயல்படவில்லை சில நிமிடங்கள். அதன் பிறகு செயல்பட்டு நலமுடன் இருக்கிறார். 
நம்முடைய கொள்கையை பின்பற்றுபவர்களல்ல. ஆனாலும் இந்த முறை நான் சொன்ன ஒழுங்கு முறைகளை எல்லாம் கடைபிடித்தார்கள். நலமுடன் வீடு திரும்பி விட்டார்கள்.
இந்த சிக்கல் ஒரு பக்கம் ஒரு கை ஒரு கால் சரியாக செயல்படவில்லை. இதைக் கேள்விப்பட்டு வந்து செல்பவர்கள் சொல்லும் மருத்துவர் குறிப்புக்கள் என்னை வியப்படைய வைக்கின்றன.
3வ்வொருவரும் ஒரு ஐந்து மருத்துவக் குறிப்புக்களை சொல்கிறார்கள். இங்கு எல்லோருமே மருத்துவர்கள் என்பதைத் தான் புரிந்து கொண்டேன். மருத்துவம் தெரியாத யாருமே இல்லை. இதற்கு தேர்வெல்லாம் தேவையேயில்லை. தேர்வு தேவையில்லை, கல்லூரி தேவையில்லை, நூல்கள் எதுவுமே தேவையில்லை. இங்கு எல்லோருமே மருத்துவர்கள் என்பதைத் தான் புரிந்து கொண்டேன்.
இந்தச் சூழலில் இருந்துதான் சித்தத்தை உணர்ந்தவர்கள் ஏன் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது புரிந்தது.
எல்லாவற்றையும் வெளியே கற்றுக் கொடுக்கத் தொடங்கி விட்டால் என்ன ஆகும் என்றால் இதுதான்.
மனிதர்கள் தன்னுடைய தேவைக்காக ஒரு அறிதலை கற்றுக் கொள்கிறவர்கள் ஒரு நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கு மேல் எதுவும் தேவையில்லை.
எனக்கு இது தேவை என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ஒரு நிலை .இவர்கள் தான் பெரும்பான்மையினர்.
அடுத்த நிலையில் இருப்பவர்கள் அதன் ஆழத்தை கற்க விரும்புகிறேன். எனக்கு நோயில்லை. ஆனால் இந்த துறை மீது எனக்கு விருப்பம் இருக்கிறது என்பார்கள் இரண்டாவது பிரிவினர். இவர்கள் மிகச் சிலர் இவர்கள் கற்றுக் கொள்வதற்காகவே காத்திருப்பவர்கள். விருப்பத்தில் இருப்பவர்கள்
இந்த இரண்டாவது பிரிவினரில் ஒரு சிலருக்கு பாடத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை தேர்ச்சியடையச் செய்வதே ஒரு ஆசானுக்கு வாழ்நாள் பணி.
நாம் அறிந்தவரை ஆசான் திருமூலருக்கு 12 சீடர்கள் தான். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி பேருமே சித்தர்களுடைய சீடர்கள்தான். 7 கோடி சித்தர்கள் இருக்கிறார்கள் என்று கூடச் சொல்லலாம். எல்லோருமே சித்தர்களின் சீடர்கள் அல்லது அவர்களில் பலர் சித்தர்கள் .இங்கு அறியாமையில் இருப்பவர் யாருமே இல்லை. எல்லோருக்குமே அறிவு உண்டு. அவருடைய அறிவு எது? பரப்பப்படும் சில தகவல்கள் அவ்வளவுதான். சில தகவல்களை அவர்கள் கேள்விப்படுகிறார்கள், படிக்கிறார்கள். அதைத் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு முடக்குவாதம் என்றால் என்ன என்று தெரியும். மூளை நரம்பு சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்று தெரியும். அவ்வளவுதான்.
ஆக ஒரு கல்வியைக் கற்பதற்கு என்ன பக்குவம் வேண்டும் என்பதற்கும், தேவைக்கு ஒன்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு இங்கே இல்லை. இதனால் உன்னதமான பல உடல் நல கருத்துக்கள் சிதைந்து போகின்றன.
உங்களில் எத்தனை பேர் ஆழமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கிறது.
ஏனென்றால் இந்த மரபு வழிப்பட்ட உடல் நல அறிவியல் இருக்கிறதே அதுதான் மனித குலம் வாழும் வரை மனிதர்களை காக்கும் அறிவியல்.
எவரையும் சார்ந்திராமல் வீட்டில் உள்ள பொருட்கள் வழிகளால் மட்டுமே உடலின் எல்லா சிக்கல்களையுமே தணித்துக் கொள்ளும் அறிவியல் நம்முடைய மரபு வழியில் இருக்கிறது.
இது எவ்வளவு பெரிய வரம்
இந்த வரத்தை தன்னலத்திற்காகவோ, பேராசைக்காகவோ தொடர்ந்து சுரண்டிக் கொண்டே இருந்தால் ஒரு நிலையில் இது சிதைந்து போகும். அப்படித்தான் இன்று சிதைந்து கிடக்கிறது.
இதை பீட்டெடுத்து ஒரு சிலருக்கு இதை விளங்கச் செய்வது ஒரு பெரும்பணியாக இருக்கிறது.
ஆகவே நீங்கள் நேரில் வந்திருக்கிநீர்கள் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடு வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறான உரைகளை எல்லாம் இணையத்தில் ஏத்தி விட்டாலே போதும். நேரில் யாரையும் வரச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் ஏன் நேரில் சந்தித்து இவற்றைக் கற்றுக் கொடுக்கிறோம் என்றால் முறையாகக் கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் , முறையாக நாமும் பாடம் நடத்த வேண்டும். வருவோரும் முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் ஐயம் இருந்தால் கேட்டுத் தெளிவுற வேண்டும் என்பதற்காகத்தான். 
இவற்றை எல்லாம் கற்றுக் கொள்வதுதான் ஒழுங்கு.
உடல், வாழ்க்கை முறை ஆகிய .இரண்டிற்கும் இடையில் உள்ள உறவு எது என்று புரிந்து கொள்வதுதான் ஒழுங்கு.
உடலுக்கும், வாழ்க்கை முறைக்கும் உள்ள உறவு தான் நோய் அல்லது நலம் ஆகிய .இsண்டு கூறுகளையும் ஆக்கி வைத்திருக்கின்றது.
மருந்துகள் எனப்படுபவை உடல் நலத்திற்கு துணை செய்பவை .
அதாவது நோய் மிகுந்து எழுந்து துன்புறுத்தும்போது அந்த துன்பங்களை தணிப்பதற்கு மருந்துகள் இருக்கின்றன.
துன்பங்களை தீர்ப்பதெற்கென்று எந்த மருந்துகளும் எந்த முறைகளிலும் இல்லை. தீர்த்தலென்பது என்ன? அது இல்லாமல் செய்வதுதானே.
ஒன்று இருக்கிறது அதை இல்லாமல் செய்து விட்டால் அது தீர்ந்து விடுதல்.
அவ்வாறு நோயை தீர்ப்பதற்கு மருந்து இல்லை. ஆனால் நோயைத் தணிப்பதற்கு மருந்து உண்டு.
நோயை எது தீர்க்கும் என்றால் உங்களுடைய ஒழுங்கு, உங்களுடைய வாழ்க்கை முறை, உங்களுடைய மனநிலை ஆகியவை எல்லாம் நோயைத் தீர்க்கும்.
மீண்டும் சொல்கிறேன். மருந்து நோயைத் தணிக்கும், உங்களுடைய ஒழுங்கு அல்லது மனநிலையும் வாழ்க்கை முறையும் நோயை தீர்க்கும்.
மருந்துகளை முதன்மையாகக் கருதிக் கொண்டு அவற்றைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டே இருந்தால் உங்களால் ஒரு போகம் நோயைத் தீர்க்க இயலாது.
அது இருந்து கொண்டே இருக்கும் அல்லது அது எந்த நிலையிலும் எழுந்து விடும், மிகுந்து விடும் என்ற நிலையிலேயே இருக்கும், அச்சுறுத்தலாகவே இருக்கும்.
நோய் என்றால் அது தணிந்த நிலையில் அடங்கி இருக்க வேண்டும். 
உடலில் இருக்கும் ஏதாவது ஒரு உறுப்பில் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டேதான் இருக்கும்.
மருந்துகளை தொடர்ந்து நாடினால், உடல் தன்னுடைய ஒழுங்கமைவைக் குறைத்துக் கொள்ளும். சிதைத்துக் கொள்ளும்.
ஒரு சிக்கல் எழும் பொழுது உடனடியாக அதற்கென்று ஒரு மருந்தை நீங்கள் பயன்படுத்தத் தொடங்கினால் உடலுடைய எதிர்ப்பாற்றல் தன்னுடைய திறனைக் குறைத்துக் கொள்ளும்.
நான் கூறுவது நவீன மருந்துகளைப் பற்றியல்ல. நான் கூறுவது மரபு மருந்துகளைப் பற்றித்தான்.
நீங்கள் என்ன புரிதலில் இருக்கிறீர்கள் என்றால் நம்முடைய மரபு மருந்துகள் பக்க விளைவுகள் அற்றவை என்ற புரிதலில் இருக்கிறீர்கள். இதெல்லாம் ஒரு வேடிக்கையான கருத்து இது ஒரு ......... கருத்து .
மருந்து என்றால் என்ன? உணவு என்றால் என்ன? என்று நாம் ஏற்கனவே ஒரு உரையில் குறிப்பிட்டுள்ளோம்
23.00
பலர் புதியவர்களாக இருப்பதால் அதை நாம் சுருக்கமாக அதன் இலக்கணமாக கூறுகிறோம்
விரிவின் செறிவு உணவு, செறிவின் விரிவு மருந்து.
அதாவது விரிவாக இருக்கும் பல பொருட்கள் செறிவாக மிகச் சிறு துளிகளாக உடலுக்குள் அமைந்தால் அது உணவு. நிறையப் பொருட்கள் இருக்கின்றன வெளியே. அந்த எல்லாப் பொருட்களையும் விரிவு என்று கொள்ளுங்கள். விரிவுதானே, விரிந்து கிடக்கின்றன.
எங்கோ ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் எவ்வளவோ காய்கறிகள் இருக்கின்றன. பருப்பு, புளி ஆகியவை எல்லாம் விரிவு பொது கிடக்கின்றன.
அவை எல்லாம் ஓரளவிற்கு சுருங்கி உங்களுடைய தட்டில் இருக்கின்றன. இவற்றை நீங்கள் வாய் வழியாக 2ண வாக்குகிறீர்கள். மேலும் அது சுருக்கமடைகிறது. செரிமாணத்தின் போது இவ்வளவு விரிவும் சில துளிகளாகி விடுகின்றன. அதாவது விரிவாக உள்ள பல பொருட்கள் உடலுக்குள் சென்று சில துளிகளாகி விட்டால் அது செறிவு. இது தான் உணவு. 
அப்வளவு விரிவில் இருந்த திறன் எல்லாப் பொருட்களுக்குமே திறனுண்டு புளிக்கு திறனுண்டு. காய்களுக்கு திறனுண்டு. புலால் உணவு பொருட்களுக்கு திறனுண்டு. அரிசிக்கு திறனுண்டு அல்லவா? இந்த திறன் யாவும் உங்களுடைய உடலுக்குள் சில துளிகளாக மாற்றமடைகின்றன. அந்தத் துளிகளுக்குள் இந்த எல்லா திறன்களுமே இருக்கின்றன. அதுதான் சத்து . உணவு சத்தாகின்றது என்றால் விரிவு செறிவாகி விட்டது என்று பொருள்.
இதற்கு நேர் எதிராக செறிவின் விரிவு மருந்து. மருந்து எனப்படுவது சில துளிகள் எந்த மருந்தாக இருந்தாலும் சில துளிகள், அந்த சில துளிகள் உடலுக்குள் சென்று உடல் முழுவதும் விரிவடைகின்றன.
உடல் முழுவதும் எந்த மருந்தாக இருந்தாலும் உடல் முழுவதும் அது பரவும், கலக்கும். அவ்வாறு செறிவான பொருட்கள் உடலில் விரிவடைந்தால் அது மருந்து. இதுதான் வேறுபாடு
இந்த உடலுக்கு உணவுதான் அடிப்படை. மருந்தல்ல. சில துளிகளை மட்டுமே வாய் வழியாக உள்ளே அனுப்பி அது விரிவடைந்துதான் உடல் இயங்குகிறது என்பது ஒரு கற்பனையல்லவா?
ஏராளமான பொருட்கள் சில துளிகளாக உடலில் இருந்தால் அது சத்து . அந்த சத்துதான் உடலை செயல்படுத்துகிறது. ஆனால் செறிவான ஒரு சில பொருட்கள் உடலுக்குள் எப்பொழுது செல்கின்றன? இந்த உடலால் செயல்பட முடியாத நிலையில் இந்த செயல்பாட்டைத் தூண்ட வேண்டும் என்பதற்காக சில துளிகள் அதாவது வெளியில் ஏற்கனவே................................
...............செறிவாக உள்ள சில துளிகளை உள்ளே அனுப்பி உடலைத் தூண்டுகிறோம். அதுதான் மருந்து.
இவ்வாறு தூண்டும் நிலை ஏன் ஏற்பட்டது? ஏற்கனவே இந்த உடலில் சத்து குறைபாடு இருக்கிறது. அது எந்த நோயாக இருந்தாலும் இதுதான் அடிப்படை .
ஏதோ ஒரு குறிப்பிட்ட சத்து இந்த உடலில் குறைவாக இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை வாதம், பித்தம், கபம் இந்த மூன்றில் ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது. மிகக் குறைவாக இருக்கிறது. இந்த மிகக் குறைவாக இருக்கும் ஒன்றை தூண்டுவதற்கான ஒன்று வெளியே இருக்கிறது .
இவ்வாறு உடலில் சத்து மிகக் குறைவாக இருக்கும் போது அதைத் தூண்டும் சத்து வெளியிலிருந்து அனுப்பப்படுகிறதே அதற்கு பெயர்தான் மருந்து.
இது வாழ்க்கையில் மிகக் குறைவாக நிகழ வேண்டும். மிகக் குறைவாக, அரிதாக இதைக் கொடுத்தால்தான் எழுப்ப முடியும் என்ற நிலை. மிகக் குறைவாக நிகழ வேண்டும். இது ஒரு அன்றாடப் பழக்கமாய் ஆகி விடக் கூடாது.
இன்றைய நிலை எப்படி இருக்கிறதென்றால் காலை எழுந்தது முதல் அடங்குவது வரை என்ன மருந்து? என்ன சத்து 7 எந்தப் பொருளில் எது இருக்கிறது? என்ற அறிதல்கள் மிகுந்து விட்டன. இது உங்கள் உடலின் இயல்பான எதிர்ப்பாற்றலை சிதைத்து விடும். சிதைத்துக் கொண்டிருக்கிறது. அது எந்த மருந்தாக இருந்தாலும் சரி
நவீன மருந்துகளில் தீமைகள் மிகுதி. நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அவற்றை எல்லாம் பக்க விளைவுகள் என்று சொல்லக் கூடாது. எதிர் விளைவு என்று சொல்ல வேண்டும். பக்க விளைவு என்றால் ஒரு நன்மை நடக்கிறது. அதோடு சேர்த்து சில தீமைகள் நடக்கின்றன என்றால் அது பக்க விளைவு.
ஒரு நன்மையும் நடக்கவில்லை. நன்மை போன்ற ஒரு தோற்றம்தான் இருக்கிறது. ஆனால் நேர் எதிரான விளைவுகள் செரிமானச் சிக்கலுக்காக ஒரு மருந்தை உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்றால் அது பக்க விளைவா? அது எதிர் விளைவு. நேர் எதிரான விளைவு. இது நவீன மருத்துவத்துடைய சிக்கல். அதே வேளை மரபு மருந்துகளில் எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று கருதுவது ஒரு கற்பனை. ஏன் நம்முடைய இலக்கணம் என்ன?
ஏற்கனவே செறிவாக உள்ள ஒரு பொருள் உடலில் விரிவடைந்தால் அது மருந்து. ஏற்கனவே செறிவாக உள்ள ஒரு பொருளை உடல் எப்படி தொடர்ந்து ஏற்கும்? உடலுடைய அடிப்படை வேலை என்ன?
விரிவை செறிவாக்குவது தான் உடலின் ஒழுங்கு, நீ ஏற்கனவே ஒரு செறிவை உடலுக்குள் அனுப்பிகிறாய். அதைத் தொடர்ந்து அனுப்புவாயென்றால் உடல் தன்னுடைய இயல்பிலிருந்து விலகத்தானே செய்யும்.
நீங்கள் எதை சத்து என்று கருதுகிறீர்களோ அதனை உடல் செரிக்கவில்லை என்றால் அதுதான் நஞ்சு. 
நஞ்சும் சத்தும் வேறு வேறு அல்ல. ஒரு நிலையில் அது நஞ்சு. 
அடுத்த நிலையில் அது சத்து.

தேள், பாம்பு போன்ற உயிரினங்களில் இருப்பது நஞ்சா ? சத்தா? என்று கேட்டால் அந்தப் பொருளை உள்வாங்கும் மனிதருடைய உடலின் திறனைப் பொறுத்தது.
தேள் கடித்தும் ஏதும் ஆகாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் இருக்கிறோம். செம்மை வனத்தில் தேள் கடி வாங்காதவர்ள் இல்லை. செம்மை வனத்தில் குடியுரிமை பெறுபவர்கள் என்று கூட அவர்களைக் குறிப்பிடலாம். வந்து தங்குவார்கள். ஒரு சில நாட்களில் தேள் கடிக்கும். அவர் இங்கு சேர்ந்து விட்டார் நம்முடைய சங்கத்தில் சேர்ந்து விட்டார் என்று பொருள்.
அதற்கு என்ன செய்வோம் என்றால் எதுவுமே செய்ய மாட்டோம். புதிதாக வந்திருப்பவர்களுக்கு தேள் கடித்தால் சில இலைகளை பறித்து மெல்லச் சொல்வோம். எதிர்ப்பாற்றலைத் தூண்டும், அவ்வளவுதான். அதன் பிறகு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பி விடுவார்கள். முதலில் இருந்த அச்சம் அதன் பிறகு அவர்களுக்கு இருக்காது.
ஆனால் தேள் கடித்து மயக்கமடைந்தோர், வலிப்பு வந்தோர் எத்தனை பேர்? வாயில் நுரை தள்ளியவர் ஏன் இறந்து போகின்றவர்கள், போனார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
இதிலிந்து என்ன புரிகிறது என்றால், தேளிலிருப்பது நஞ்சா ? அல்லது சத்தா? என்று கேட்டால் அதில் ஒரு பொருள் இருக்கிறது அது உனக்கு நஞ்சா ? அல்லது உனக்கு சத்தா? என்பது உன் உடல் மற்றும் உன் மனநிலையைப் பொறுத்தது.
சில பாம்புகளில் உள்ள நஞ்சு உடனடியாக மரணத்தை விளைவிக்கிறது. அது யாருக்கு அந்த கடி ஏற்பட்டாலும் உடனடி மரணம்தான். அதற்கு என்ன பொருள்? பாம்பில் நஞ்சு இருக்கிறது என்பது மட்டுமா இல்லை. அந்த பாம்பில் ஒரு பொருள் இருக்கிறது. அதை செரிக்கும் அளவிற்கு மனித உடலில் திறன் இல்லை.
ஒரு வேளை யாராவது ஒருவருக்கோ அல்லது ஒரு சிலருக்கே அதை செகரிக்கும் திறன் இருந்தால் அவர் கறக்கு அது மருந்து. அவ்வாறானோரும் இருக்கிறார்கள் ஒரு சிலர். அவர்களை நான் முன் மாதிரியாக காட்ட மாட்டேன். அது உங்களுக்கு ஒரு மூட நம்பிக்கை வளர்த்திடும். அதாவது பாம்புகள் கடித்தாலும் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையாக அது மாறக் கூடாது.
மனித உடலுடைய ஒழுங்கு சில பூச்சிகளுடைய பொருட்களை செரிக்க இயலாத அளவிற்கு உள்ளது என்பது ஒழுங்கு.
சில மருந்துகள் இருக்கின்றன. நம்முடைய மருத்துவத்திலேயே சில மருந்துகள் இருக்கின்றன. அந்த மருந்துகளை நீங்களே அந்த மருந்துகளை நீங்களே காய்ச்சி நீங்களே அதைப் பருகினாலும் உடல் நலிவுற்றுப் போகும் அல்லது முடங்கிக் கூடப் போகும். அவ்வாறான சில இவைகள் உங்களைச் சுற்றியே இருக்கின்றன. உங்களுடைய வீடுகளில் அல்லது உங்களுடைய தெருக்களில் அவ்வாறான பல தாவரங்கள் இருக்கின்றன. அதே தாவர இலைகளை அல்லது வேரை எடுத்து முறை அறிந்து ஒரு சில துளிகளாக உட்கொண்டால் நீண்ட காலமாக இருக்கும் பல நோய்கள் உடனடியாக விலகி விடும். இதே தாவரம் மனிதரை முடக்கவும் செய்யும். முறையறிந்து பயன்படுத்தினால் எழுந்து நடமாடவும் செய்யும். இந்த இரண்டும் உள்ளது.
இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவை எல்லாம் மூலிகைகள். இவை எல்லாம் நஞ்சுகள் என்ற பிரிவினை படைப்பில் இல்லை. எது நஞ்சோ அதுதான் மருந்து. எது மருந்தோ அதுவே நஞ்சு.
எருக்கம் இலைகளை நஞ் சென்று கூறுவதா ? அல்லது மருந்தென்று கூறுவதா? .
எருக்கம் பால் நல்லதா? கெட்டதா?
எருக்கம் பால் அற்புதமான மருந்து. அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? அதன் திறனை எப்படி தணிக்க வேண்டும்? யாருக்கு எந்த ......... எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று தெரிந்தால் அது மருந்து.
சில சிக்கல்களுக்கு எருக்கம்பால் மருந்து என்று போகிற போக்கில் நான் சொல்லி விடுகிறேன், நான் சொல்ல மாட்டேன். அப்படி சொல்லி விடுகிறேன் என்று வைத்துக் . கொள்ளுங்கள் என்ன ஆகும்?
எருக்கம்பாலை உட்கொண்டு தீவிரமான நோயாளிகளாக மாறி விடுவார்கள். சிலர் இறர் து கூடப் போகலாம். கடைசியில் பழியும் பாவமும் யாருக்கு போய் சேரும் ? எருக்கம் பாலுக்குப் போய் சேரும். அது பல கோடி ஆண்டுகளாக இருந்து பல விலங்கினங்களுக்கும், பல உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் மருந்தாகவும், உணவாகவும் இருக்கிறது.
33.33
ஒவ்வொரு பொருளிலும் நஞ்சும் உண்டு, அமுதமும் உண்டு. முறையறிந்து கற்றுக் கொண்டு முறையறிந்து பயன்படுத்தும்போது அது மருந்தாகவோ அல்லது சத்தாகவோ மாற்றமடைகிறது. ஆகவே நீங்கள் ஒரு பக்குவப்பட்ட நிலைக்கு வர வேண்டும். நாம் நம்முடைய உடல் ஒழுங்குகளைப் பேணுவோம். உடலில் சக்கல் ஏற்படும் போது அழைத் தணிப்பதற்காக அடிப்படை வீட்டு மருந்துகளை முறையாக கற்றுக் கொள்வோம். அவ்வளவுதான்.
எனக்கு இதற்கு மேல் ஆசையில்லை என்ற இடத்திற்கு நீங்கள் வர வேண்டும்.
நீங்கள் தயவு செய்து அப்படி ஒரு இடத்துக்கு வந்து விட்டு பாடத்தைக் கவனியுங்கள்.
இந்த ஒழுங்கு உங்களிடம் இருந்தால் வீட்டு மருந்துகளை நன்கு புரிந்து கொண்டு, உங்களுடைய குடும்பத்தினர், உங்களுடைய உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கெல்லாம் நீங்களே வழிகாட்டல்களை செய்து விடலாம். ஒவ்வொன்றிற்கும் என்னையோ, என் போன்றோரையோ எதிர்பார்க்க தேவையில்லை.
இந்த இரண்டு நாள் வகுப்பில் நாம் கற்றுத் தரப் போகும் வீட்டு மருந்து செய்முறைகளை பொறுத்தவரை ஏறத்தாழ உங்களுடைய மிகப் பெரும்பான்மையான உடல் சிக்கல்களுக்கான தீர்வுகளை எல்லாம் கற்றுக் தருகிறோம்.
ஏதேனும் விதிவிலக்காக அரிதாக நிகழும் சில உடல் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் மிகப் பெரும்பான்மையாக என்ன சிக்கல்கள் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாம் இங்கு கற்றுத் தருகிறோம்.
ஆகவே நீங்கள் பொறுமையாக, பொறுப்புடன் பாடங்களை புரிந்து கொள்ளுங்கள்.
உடலைப் புரிந்து கொள்வதற்கான எளிமையான வழிதான் முப்பொருள் கொள்கை. அதாவது வாதம், பித்தம், கபம் என்ற கொள்கை. இந்த முப்பொருள் கொள்கையில் எது தலைமையானது என்றால் வாதம், காற்று.
இன்றைக்கு உள்ள எண்ணற்ற உடல் சிக்கல்களுக்கு நேரடி காரணியாக இருப்பது கபம். கபம் என்றால் என்ன? உடலில் நீர் திரிந்த நிலை. நீர் இருக்கிறது. நீர் என்றால் நீரல்ல. நீர்மம். அதாவது குருதி, சளி, கோழை பிற சுரப்புக்கள். ஏராளமான சுரப்புக்கள் இருக்கின்றன அல்லவா? அமிலம் என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றில் அமிலம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்
36.20
வாயில் உள்ள எச்சில். அந்த எச்சிலும் ஒரு நீர்மம்தான். நீர்மம் எது நீர்த்திருக்கிறதோ அது நீர்மம். இந்த நீர்மம் திரிந்து போயிருந்தால் அது கபம்.
திரிதல் என்றால் என்ன? அந்த இயல்பில் அது இல்லை. இயல்பிலிருந்து சற்று விலகினாலே அது திரிதல் தான். பால் திரிந்து விட்டது என்று கூறுவீர்கள். பால் திரிந்து விட்டது என்றால் என்ன பொருள்? அது அதனுடைய இயல்பில் இல்லை. அவ்வளவுதான். அடுத்த இயல்புக்கு சென்று விட்டது. அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. அதுதான் திரிதல்.
உடலில் உள்ள நீர்மம் திரிந்து போனால் அது கபம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே உடல் நலத்தின் பெயரை, கருத்தைத் தாங்கிய சொர்களல்ல. வாதம் என்பதும் நோய். பித்தம் என்பதும் நோய். கபம் என்பதும் நோய். நம்முடைய மரபில் ஒரு மருத்தவக் கொள்கைக்கு பெயர் வைக்கிறார்கள். எப்படி பெயர் வைக்கிறார்கள்? மூன்றுநோய் நிலைகளைத்தான் பெயராகவே வைத்திருக்கிறார்கள். வாதம் என்றால் காற்று திரிந்து விட்டது. பித்தம் என்றால் வெப்பம் திரிந்து விட்டது. கபம் என்றால் நீர் திரிந்து விட்டது. ஆகவே இயல்பிலிருந்து இந்த மூன்று பொருட்களும் திரிந்து விட்டால் அதுவே நோய் என்று திரிந்த நிலையைத்தான் பெயராகவே வைத்திருக்கிறார்கள்.
கபம் எல்லோருடைய உடல்களிலும் இருக்கும். இந்த வாதம், பித்தம், கபம் பிறந்த குழந்தைக்கும் இருக்கும். அதாவது குழந்தை பிறந்து வரும் போது அது நோயுடன்தான் வருகிறது. பழைய அல்லது முதிய மருத்துவர்கள் எல்லாம் நம்முடைய மரபு மருத்துவர்கள் எல்லாம் என்ன உடம்பு ? என்றுதான் கேட்டார்கள். உடம்புக்கு என்ன என்று கேட்க மாட்டார்கள். என்ன உடம்பு என்று கேட்டால், பித்த உடம்பு என்று நோயாளியாக செல்பவர் சொல்ல வேண்டும். இன்றைக்கு மருத்துவ அறிக்கைகளை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள் அல்லவா? அது போல நமது மரபில் ஒரு மருத்துவரை புதிதாக சென்று சந்திக்கும் போது உனக்கு என்ன உடம்பு ? என்று அவர் கேட்பார். எனக்கு பித்த உடம்பு என்று சொல்ல வேண்டும், பித்த உடம்பாக இருந்தால் . அதன் பிறகு அவர் அறிகுறிகளை கேட்பார். நாடி பார்ப்பார். இது பித்த உடம்பு. இந்த பித்த உடலுக்கு இந்த நாடி எப்படி இருக்கிறது? இந்த அறிகுறிகள் என்ன சொல்லுகின்றன? என்று பார்த்து மருந்து கொடுப்பார். வாத உடம்புக்காரர்கள் வாத உடம்பு என்று சொல்லுவார்கள். இதன் பொருள் என்ன? அந்த காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய உடல் எந்த உடல் என்று தெரிந்து வைத்திருந்தார்கள்.
39. 06.
ஒரு குடும்பத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள் என்றால் மூன்று பேருக்கும் மூன்று வகையான உடல்கள் இருக்கும். இது ஒரு அடிப்படை ஒருவருக்கு மிகுதியாக இருமல் இருக்கிறது. இந்த மிகுதியான இருமல் பித்த உடம்புக்காரருக்கு என்ன செய்யும்? வாத உடம்புக்காரருக்கு என்ன செய்யும்? கப உடம்புக்காரருக்கு என்ன செய்யும்? வேறுபடுமல்லவா?
பித்த உடம்புக்காரருக்கு இருமல் இருந்தால் அவருக்கு ஒற்றைத் தலைவலி உடனே வந்து விடும். இது ஒரு அறிகுறி. இது போல பல அறிகுறிகள் உண்டு. நான் உங்களுக்கு புரியவைப்பதற்காக ஒரு சான்று கூறுகிறேன்.
பித்த உடம்புக்காரர்களுக்கு சளி பிடித்தாலே அது தலைவலியாக வரும். அதில் பித்தம் கூடுதலாக இருந்தால் வலது பக்கம் வலிக்கும். பித்தம் சற்று தணிவாக இருந்தால் இடது பக்கம் வலிக்கும். இடது பொட்டில் வலிக்கும். கப உடல்காரர்களுக்கு சளி பிடிக்கிறதென்றால் உடனே தலைவலியே வராது.சில நாட்களுக்குப் பிறகு முன் நெற்றியில் வலிக்கும். அதன் பிறகு முகம் முழுவதும் வலிக்கும். பொருட்படுத்தாமல் விட்டால் பின் மண்டை வலிக்கும், இது கப உடல்காரர் . சளி ஒன்று தான். இரண்டு பேருக்கு சளி வந்தது. ஆனால் அது பித்த உடலில் எவ்வாறு செயல்படும்? இந்த கப உடலில் எவ்வாறு செயல்படும் என்பது வேறுபாடு. இந்த வேறுபாடுகள் எல்லாம் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு காலத்தில் தெரிந்திருந்தது. அதுதான் சிறப்பு. அதனால் தான் அவர்கள் என்ன உடம்பு என்று கேட்டார்கள்.
காய்ச்சல் கூட இன்றைக்கு பொத்தாம் பொதுவாக காய்ச்சல் என்று கூறும் வழக்கம் இருக்கிறது அல்லது கிருமிகளின் பெயரால் காய்ச்சலை அழைக்கிறீர்கள். ஆனால் மரபில் காய்ச் எப்படி அழைக்கப்பட்டது தெரியுமா? வாதசுரம், பித்த சுரம், வாத பித்த சுரம், கப சுரம் என்று இந்த முப்பொருள் கொள்கையின் அடிப்படையில் தான் காய்ச்சலை அழைக்கப்பட்டது.
ஒருவருக்கு வந்திருப்பது வாத சுரம், அவர் வீட்டிலேயே இன்னொருவர் இருக்கிறார்கள். அவருக்கு பித்த சுரமாக இருக்கலாம். ஊர் முழுவதும் காய்ச்சல் இருக்கும். இன்றைக்கு ஒரு கிருமியின் பெயரால் .அதை அழைத்து .வருவீர்கள். எல்லோருக்கும் ஒரே மருந்து கொடுப்பீர்கள். அன்று அப்ற இல்லை. அதாவது நம் முன் ய மரபில் அப்படி இல்லை. ஊர் முழுவதும் காய்ச்சல் இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அது என்ன ஒரு புதிய நுண்ணியிரி மனிதர்கள் மீது ெதாற்றுகிறது என்பதில் எந்த தவறும் இல்லை. அதெல்லாம் தவறு, பொய் என்று நாம் கூறவில்லை. தொற்றுகிறது. அவ்வாறு தொற்றும் பொழுது யாருடைய உடலில் என்ன விளைவை அது ஏற்படுத்துகிறது ? 
41. 37 பித்த உடல்காரருக்கு பித்த உடல் கொண்டவருக்கு அதே றுண்ணிய ரி காய்ச்சலை கொண்டு வந்தால் அது பித்த காய்ச்சல், பித்த சுரம். வேறு ஒருவருக்கு என்றால் அதுவாதசுரம் அல்லது கப சுரமாக இருக்கலாம். வாத, பித்த சுரமாக இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இவ்வாறு பல கூறுகளாக மனித உடலைப் பற்றி புரிந்து கொண்டு அவற்றுக்கான வீட்டு மருந்துகள் அல்லது மூலிகை மருந்துகள் எல்லாம் கற்றுக் கொடுத்த மரபு நம்மிடம் இருந்திருக்கிறது. இந்த மரபை மீட்டெடுப்பதற்கு நாம் விரும்புகிறோம். அதைச் செய்து கொண்டே இருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு தேவை என்றால் இந்த மரபின் இயல்புகளை நான் உங்களில் உணர்கிறேன். நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்குள் இந்த மரபு பொதிந்திருக்கிறது. ஏனென்றால் நீங்கள் இந்த நிலத்தில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மரபு மறைவாக உள்ளது. உங்கள் அனைவர்களுக்குள்ளும் இந்த மரபை உங்கள் உடலிலிருந்து உங்களுடைய சிந்தனை வழியாக மீட்டெடுக்க வேண்டுமென்று உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் 2ங்கள் தனிப்பட்ட எந்த அடையாளத்துடனும் உரையாடவில்லை. அதாவது நீங்கள் என்னை பார்க்கிறீர்கள் தலையசைக்கிறீர்கள். ஆனால் நான் உங்களோடு பேசவில்லை. நான் உங்களுக்குள் பொதிந்திருக்கும் மறைவான இயல்பை வெளிப்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். Aங்கள் உங்களை அறியாமலே உடலைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு தடையாக இருப்பது உங்களுடைய அறிவு. நீங்கள் ஏற்கனவே படித்தது ஏற்கனவே கேள்விப்பட்டவை ஆகியவை எல்லாம் எனக்கும், உங்கள் இயல்புக்கும் இடையே ஒரு குறுக்கீடாக இருக்கின்றன. அவை எல்லாம் தடுக்கின்றன. அர்த இயல்புகளை 2ங்களிடமிருந்து மீண்டெழும் போது நீங்கள் உங்கள் உடலை நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் உடலில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் பதட்டம் அடைய மாட்டீர்கள். அல்லது அக்கறையில்லாமல் திரிய மாட்டீர்கள். இந்த இரண்டுமே தவறு.
அடுத்ததாக உங்களுடைய உடலை நீங்களே வாழ்க்கை நெறிமுறைகள் வழியாகவும், வீட்டு மருந்துகள் வழியாகவும் சீராக்கி விடுவீர்கள். இந்த இரண்டுமே நிகழ்ந்து விட்டால் உங்களுடைய அடுத்த தலைமுறை இருக்கிறதல்லவா? அது நோய் பற்றிய அச்சம் ம இல்லாத தலைமுறையாக & ண்ட காலம் நெடிய ஆயுளுடன் இங்கு வாழும். 
44.33
இது தான் நம்முடைய விருப்பம். மீண்டும் ஒரு பின்னடைவை. மருத்துவப் பின்னடைவை, நோய்கள் மீதான அச்சத்தை ஒரு பெரிய மருத்துவ வணிகத்தை நம்முடைய இனம் , நம்முடைய தலைமுறை சாதிக்கக் கூடாது. இப்பொழுது உள்ள இந்த நிலைமை இப்படியே கொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் மக்கள் நவீன மருத்துவத்துறையை நோக்கி ஓட ஆரம்பித்து விடுவார்கள். அது இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்ற எயரில் நடக்கும் கூத்துகள் இப்படியே தொடர்ந்தால் மக்களுக்கு வெறுப்பு வந்து விடும். இவர்களே பானையைத் தூக்கிக் கொண்டு ஆடுவார்கள். இவர்களே அந்தப் பானையை தூக்கிப் போட்டு உடைப்பார்கள். இது நிகழக் கூடாது. இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் இந்த மரபில் உள்ள வாழ்வியல் மற்றும் உடல் ஒழுங்குகள் மீது புரிதல் வேண்டும் என்பதுதான் கருத்து .உடல் ஒழுங்கு என்றால் என்ன? அதற்கும் வாழ்வியலுக்கும் என்ன உறவு இருக்கிறது? என்று பார்ப்போம். உடல் ஒழுங்கு என்பது வளர்ச்சி, சிதைவு ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரு விகிதம் . உடல் வளர்ச்சி அடைகிறது அதே வேளை சிதைந்து கொண்டு இருக்கிறது. இல்லையா ? வளர்ச்சி, சிதைவு இரண்டும் உண்டு. இந்த இரண்டுக்கு மான ஒரு விகிதம் எவ்வாறு இருக்கிறது என்பது தான் உடல் ஒழுங்கு .
ஒருவர் திடீரென உடல் பருமனாகிறார். இன்னொருவரோ மெலிந்து போகிறார். ஒருவர் திறன் மிகுந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். இன்னொருவரோ சோர்வடைந்து கொண்டே இருக்கிறார். அவருக்கு பதட்டம் ஏற்படுகிறது. கை கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது. ஒருவருக்கு கவு ஆனாலே அல்லது அந்தப் பொழுது ஆனாலே உறக்கம் வருகிறது. இன்னொருவருக்கு ஏன் இரவு வருகிறது என்ற கவலை வருகிறது. பலர் பகலில் நன்கு தூங்குகிறார்கள். இரவில் விழித்திருக்கிறார்கள். இவையெல்லாம் என்ன ? இவையெல்லாம் வளர்ச்சி மற்றும் சிதைவில் உள்ள விதித கேடுகள். இந்த விதிதத்தில் ஏதோ ஒரு கேடு இருக்கிறது.
இரவு இளைப்பாறுதல் என்பது உடல் தன்னை முற்றும் முழுவதாக சீரமைத்துக் கொண்டு தன்னை இந்த விகிதத்தில் .நிலை நாட்டுவதற்கான வாய்ப்பு அல்லது அது தான் அடிப்படையான பொழுது என்று புரிந்து கொள்ளுங்கள்.
இரவுப் பொழுதுதான் உடலின் எல்லா
ஒழுங்குகளும் நிகழும் பொழுது, பகலல்ல. ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது என்று கூட எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி நேரடியாகவே சொல்லலாம். இரவு நிலைநாட்டப்படும் இந்த ஒழுங்கு பகலில் செயலாற்றப்படுகிறது. இரவுதான் உறுதி செய்யும். இந்த உடல் ஒழுங்குடன் இருக்கிறது என்பதை உறுதி செய்யும் பொழுதுதான் இரவு. இந்த இரவு ............ ஓய்வு பெறும் வகையிலும் இருக்க வேண்டும். ஒய்வு இல்லையென்றாலோ வெளிச்சம் இருக்கிறது, மிகுதியான வெளிச்சம் இருக்கிறது என்றாலோ உடலின் ஒழுங்கு நிலைநாட்டப்படாது. இதன் பொருள் என்ன? வளர்ச்சி மற்றும் தேய்வு சிதைவு ஆகியவற்றுக்கான விகிதத்தில் குறைவுதற்படும். இரவு ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லை என்றால் பசியின்மை, செரிமானமின்மை, உடல் பருமன் அல்லது மெலிவு ஏதோ ஒன்று இந்த நடுங்குகுலைந்து கொண்டே இருக்கும்.
இது ஒரு ஒழுங்கு, அடிப்படையான ஒழுங்கு . இரவு என்ன செய்ய வேண்டும்? இவு எதுவும் செய்யக் கூடாது இரவு என்பது இளைப்பாறுதலுக்கானது. இளைப்பாற வேண்டும், அது உறக்கம், புணர்ச்சி ஆகிய இrண்டும் இளைப்பாறுதல். இந்த இரண்டுக்குத்தான் இரவு வேறு எதற்குமே இல்லை.இது ஒரு அடிப்படையான ஒழுங்கு . இவ்வாறு இரவு இளைப்பாறுதலுக்கு உரியதாக இருக்க வேண்டும் என்றால் இந்த இளைப்பாறுதலுக்கு முந்திய அந்திப் பொழுது எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருந்தால் இரவு இளைப்பாறுதலுக்கு உரியதாக இருக்கும். அந்திப் பொழுது மகிழ்ச்சிக்குரியது. மனமகிழ்ச்சிக்கு உரியது. இரவு அமைதி, அதற்கு முன்பு மகிழ்ச்சி.
மாலை என்றழைக்கப்படும் அந்திப் பொழுது, உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ அதைச் செய்வதாக இருக்க வேண்டும்.
50.00
உறுதியாக வேலை செய்யக் கூடாது. அதாவது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மகிழ்ச்சியாக இருந்த என்னவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று கேட்டால் எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. உங்களைப் பார்த்து எனக்கும் எதுவும் தெரியாது. ஆனால் இது நடக்குமா ? நடக்காதா? என்று தெரியாமல் வழக்கமாகவே நான் சொல்வேன். எது மன மகிழ்ச்சி? அந்திப் பொழுதில் மனமகிழ்ச்சிக்குரியவை எவை
 என்றால் விளையாடுதல், ஏதேனும் ஒரு விளையாட்டு. அது வெளியில் விளையாடுவதாக இருக்கலாம் அல்லது அமர்ந்து விளையாடுவதாக இருக்கலாம். மன மகிழ்ச்சி.போட்டியில்லாமல் இருக்க வேண்டும். விளையாட்டு என்றாலே போட்டியற்றது. யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற கருத்தெல்லாம் இருக்கக் கூடாது.
விளையாட்டு, இசை, கதையடித்துக் கொண்டிருத்தல், உரையாடிக் கொண்டிருத்தல் அல்லது வேறு ஏதேனும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அதைச் செய்தல்.
51 .02 மிதிவண்டியை எடுத்துக் கொண்டு எங்காவது செல்வது, கோவில்களுக்குச் சென்று வருவது, ஏதேனும் படிப்பது. எது உங்களுக்கு மன மகிழ்ச்சி, பொருளற்றதாக இருக்க வேண்டும். அதாவது இதைச் செய்வதால் என்ன நடக்கும் என்று கேட்டால் எதுவும் நடக்காது என்று சில செயல்கள் இருக்கின்றன அல்லவா? விளைவில்லாமல், விளைவு நோக்கமல் எதையாவது செய்வது என்றால் என்னவெல்லாம் செய்வோம், விளையாடுவோம், இசையைக் கேட்போம் அல்லது இசைப்போம்' ஊர் சுற்றுவோம், அரட்டை அடிப்போம், ஏதோ ஒன்று செய்வோம். இதிலெல்லாம் எந்த விளைவும் இல்லை அல்லவா? இவ்வாறு விளைவு நோக்காமல் எதையாவது செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி வந்துவிடும். அதுதான் மகிழ்ச்சி. அைளவுக்காக எதைச் செய்தாலும் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. அதாவது அச்சம் இருந்து கொண்டே இருக்கும். மகிழ்ச்சி வரும், தோற்றுவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் இருக்கும் இது எந்த அச்சமுமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அதெப்படி மாலைப் பொழுதில் அன்றாடம் மாலைப் பொழுதில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? என்று நீங்கள் நினக்கிறீர்கள்.அப்படி நினைக்காதீர்கள். முதலில் அந்த எண்ணத்தை முதலில் அழியுங்கள். இது வாய்ப்பற்றதல்ல. உங்களால் வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு அறிவுரை இது. நீங்கள் மின் இந்த வாய்ப்பை மறுக்கிறீர்கள். இது ஏன் இயலாது? உங்களுடைய தலைக்கு மேலே பெரிய கடன் சுமை இருக்கிறதா? இருக்கட்டும்
அது பகலில் இருக்கிறது. அந்தியில் இருக்கிறது. இரவும் இருக்கிறது. தூங்கி எழுந்த பிறகும் இருக்கப் போகிறது அல்லவா?. அது இருக்கட்டும். அந்திப் பொழுது ஒரு மூன்று மணி நேரத்திற்கு அதைப் பற்றி நினக்காதீர்கள்.அதைப் பற்றி நினக்காதீர்கள். அது இருக்கிறது தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. ஒன்று அந்தக் கத்தியை எடுத்து கழுத்தில் செருகிக் கொண்டு செத்து விட வேண்டும். இல்லையென்றால் கத்தியை அறுத்துத் இச்சி வீசத் தெரிய வேண்டும். இந்த இரண்டுமே தெரியவில்லையென்றால் கத்தி இருப்பதையே மறந்து விட வேண்டும். ஆனால் கத்தி இருக்கிறது என்பது மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறது. அதை எடுத்து செருகிக் கொள்வதற்கும் இயலவில்லை. அறுத்துத் தூக்கி எறியவும் இயலவில்லை. இப்பொழுது நான் சொல்லும் இந்த ஒழுங்குகளை கடைப்பிடித்தால் அந்தக் கத்தியை அறுத்து எடுத்து உங்கள் இடுப்பில் செருகிக் கொள்வீர்கள். அது எப்படிப்பட்ட கத்தியாக இருந்தாலும் சரி. பெரிய கடன் சுமை கத்தியா? அைத எடுத்து விடலாம். அதை எடுத்து கையில் வைத்துக் கொள்ளலாம். உறவுகளில் சிக்கலா? அதெல்லாம் ஒரு சிக்கலே இல்லை என்ற நிலைக்கு நீங்கள் வருவீர்கள். வேறு எதுவாக இருந்தாலும் நோய் குறித்த சிக்கலா? இருக்கட்டும். அந்த கத்தி அப்படியே தொங்கிக் கொண்டு இருக்கட்டும். நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது உடலின் ஒழுங்குகளை மட்டுமே பின்பற்றுபவது. உடல் ஒழுங்கு எனப்படுவது அக ஒழுங்கின் விளைவுதான். உடலுக்கென்று தனி , உறுப்புக்கென்று தனி ஒழுங்கு கிடையாது.
54.00
மனிதன் ஒழுங்குதான் உறுப்பின் ஒழுங்காக விளையும். உங்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கிறதோ அதுவே உறுப்புகளை வடிவமைக்கிறது. ஆகவே நீங்கள் மாலைப் பொழுது மகிழ்ச்சிக்குரியது என்பதை முதலில் நடைமுறைப்படுத்துங்கள். எந்தக் கவலையும் இருக்கட்டும். ஒதுக்கி வைத்து விட்டு எது பிடித்திருக்கிறதோ எது எந்த விளைவையும் குறித்து அச்சத்தை ஊட்டாதிருக்கிறதோ அதைச் செய்யுங்கள். இவ்வாறு ஒரு மூணு மணி நேரம் அமைந்து விட்டால் அதன் பிறகு இரவில் நீங்கள் இளைப்பாறியே தீருவீர்கள். இவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும் அந்திப் பொழுதிலேயே இரவு உணவு, இரவுக்கான உணவு அது இgவு என்று அழைக்கக் கூடாது. இரவுக்கான உணவு. அது அந்தப் பொழுதிலேயே முடிந்துவிடும். உங்களுக்கு பசி எடுக்கும். மகிழ்ச்சியாக இருந்து பாருங்கள். அவ்வளவு பசிக்கும். மகிழ்ச்சியான பொழுதுகளில் நன்கு பசிக்கும். உணவு உட்கொண்ட பிறகு உடனே செரிந்து உடனே செரித்து விடும்.
ஏன் செரிமானம் சிக்கலாக இருக்கிறது? மகிழ்ச்சி இல்லையே. எந்த நேரமும் சோர்வு, பதட்டம், கவலை இருந்தால் எப்படி செரிக்கும், பசிக்காது. அதன் பிறகு செரிக்காது. அந்திப் பொழுதிலேயே உணவு உட்கொண்டு அதுவும் செரிமானம் அடைந்த பிறகு இரவு 9 மணியே உங்களுக்கு ஒரு நள்ளிரவு போலாகி விடும். அப்படி தூக்கம் வரும். அமைதி அதுதான். மகிழ்ச்சிக்குப் பிறகு அமைதி. அமைதியாக நீங்கள் உறங்கச் சென்று விடுங்கள். எல்லாச் சிக்கல்களும் விழித்திருக்கட்டும். எது தொடர்ந்து விழித்திருக்கிறதோ அது சிதைந்து போகும். நீங்கள் விழித்திருந்தால் நீங்கள் சிதைந்து போவீர்கள். உங்களுடைய சிக்கல்களெல்லாம் விழித்துக் கொண்டே உங்களை பார்த்துக் கொண்டிருந்தால் சிக்கல்களெல்லாம் சிதைந்து போகும். சிக்கல்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும் நான் இப்படி இருக்குகிறேன். இது இப்படி தூண்டுகிறதே என்று சிக்கல் சளுக்கெல்லாம் கோபம் வருவதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இரவில் நன்கு உறக்கம் வந்து விட்டால் உறக்கம் வராதவருக்கு வரும் கோபம் எப்படிப்பட்டது. இதில் யாருக்கு சிக்கல் விழித்திருப்பவருக்குத்தான். யாராக இருந்தாலும் இரவு விழித்திருப்பது சிக்கலை வளர்த்தெடுப்பது நீங்கள் இவ்வளவு தொல்லைகள் இருக்கும் போது எப்படி தூங்க முடியும்? என்று கேட்கிறீர்கள்
5 6.34
நானென்ன சொல்கிறேன். Rங்கள் னங் கினாலே தொல்லைகளை அழித்து விடலாம். உங்களுக்கு சக்தி கிடைக்கும் மகிழ்ச்சி, அமைதி இந்த இரண்டும் நிறைவடைந்த பிறகு இன்பம். அதுதான் விழிப்பு, காலையில் புத்துணர்ச்சியோடு நீங்கள் விழிக்கிறீர்கள் அல்லவா? எல்லோருமே பலமுறை அப்படி விழித்திருப்பீர்கள். இப்போது இல்லையென்றாலும் உங்களுடைய இளமையில் நீங்கள் சிறாராக இருந்த பொழுது அப்படித்தான் விழித்திருப்பீர்கள். புத்துணர்ச்சியோடு விழித்திருப்பீர்கள். அது மகிழ்ச்சி அல்ல. இன்பம். தூங்கி எழும் பொழுது சிரித்துக் கொண்டு எழுந்தவர் யாருமில்லை. அப்படி எழ மாட்டார்கள்.

... அப்படி எழ மாட்டார்கள். புத்துணர்ச்சி ஒரு பரவசத்தை கொடுக்கும். உண்மையிலேயே அது இன்பம். உயிரோடு இருக்கிறோம் என்பதை அது உறுதிப்படுத்துகிறது. அப்பற பிணம் போல தூங்க வேண்டும். அமைதியாக தூங்கினால் பிணம்தான். அமைதியான இரவுப் பொழுது ஒரு வகை மரணம் . மரணமடைந்து மீண்டும் உயிர்த்தெழுதல். இதற்குள் உங்களுடைய உடல் தன்னுடைய எல்லா இழந்த ஒழுங்குகளையுமே நிலைநாட்டி இருக்கும். எல்லா ஒழுங்குகளுமே நிலைநாட்டப்படும்.
செரிமானச் சிக்கலா? சீராகி இருக்கும். மூட்டுகளில் வலி, தசைகளில் வலி சீராகி இருக்கும். கருப்பை சூடாகி இருக்கிறது, சீராகி இருக்கும். இது ஒரு நாளில் அல்ல. இதுவே உங்களுடைய வாழ்க்கை நடைமுறை ஆகி விட்டால் உடல் ஒழுங்குகளில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும் அது சீராகி விடும். இன்பமான அந்த விழிப்பு அதிகாலையில் நிகழும் பொழுது உங்களுடைய சிந்தனை இந்த உடல் என்ற எல்லையெல்லாம் கடந்து மனமாகிய அந்தப் பெருவெளியோடு உறவாடும். அதிகாலை நேரம் நாம் எற்கனவே சில உரைகளில் எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறோம். அதிகாலை காற்று, அதாவது ஒரு நான்கு முதல் ஐந்து மணி வரை வீசும் காற்று எண்ணற்ற கருத்துக்களை வைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறோம். அந்த காற்றில் அவ்வளவு செய்திகள் உள்ளன. அவ்வளவு கருத்துக்கள் உள்ளன. நீர் ஒன்றே செய்ய வேண்டாம். தூங்கி எழுந்த போதும். புத்துணர்ச்சியோடு எழுந்தால் போதும். அந்தக் காற்றில் அவ்வளவு கருத்துக்கள், மெய்யறிவு உள்ளது. காற்றில்தான் உள்ளது. காற்றில்தான் காலம் இருக்கிறது. காற்றின் வழியாகத்தான் மனிதர்களுக்கு மெய்யறிவு கிடைக்கிறது. நீரின் வழியாகக் கிடைப்பதில்லை.
59. 18

(ஆகஸ்டு 13, 2021 ல் ஒலி வடிவிலிருந்து எழுத்து வடிவிற்கு மாற்றியது)




தடுப்பூசிகளைத் திணிக்காதீர்

தடுப்பூசிகளைத் திணிக்காதீர்

 ம. செந்தமிழன்

ஏற்பு மருந்துகளே நம் மரபிற்குரியன! தடுப்பூசிகளைத் திணிக்காதீர்! தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்!


பெருந்தொற்றுக்கான ஒரே தீர்வு என தடுப்பூசிகள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒருசார்பான, பிழையான கருத்து. ஆங்கில மருத்துவத்தினைப் பின்பற்றுவோருக்கு இது பொருந்தலாம். அதனைப் புறக்கணித்து வாழவிரும்புவோருக்கு இதில் எள்ளளவும் ஏற்பில்லை. ஆங்கில மருத்துவத்தினை மட்டுமே குடிமக்கள் பின்பற்ற வேண்டும் என்பது வன்கொள்கை. தமிழர்களின் மரபில் பல்லாயிரம் ஆண்டுகளாக உடல்நலக் கொள்கைகள் செழிப்படைந்து வந்துள்ளன. அவற்றின் பயன்களாகத்தான், நிலவேம்பு, கபசுரக் குடிநீர், வேம்பு ஆகிய மருந்துகள் இன்றும் மக்களைக் காக்கின்றன. இவ்வாறான மரபினை ஒதுக்கிவிட்டு அயல்நாட்டு கொள்கையினைக் குடிமக்கள் மீது திணிப்பது எவ்வகையிலும் முறையல்ல.


தொற்றுகளுக்கு மரபு முன்வைக்கும் தீர்வு, ஏற்பு மருத்துவம். ஆங்கில மருத்துவம் கூறுவது தடுப்பு மருத்துவம். இவ்விரண்டும் நேர் எதிரானவை.


ஏற்பு மருத்துவம் என்பது, ஒரு நோய்த் தொற்றினை இயற்கையாக ஏற்றுக்கொண்டு அத்தொற்றினை உடல் தன்வயப்படுத்துவதற்கான நெறிகளைப் பின்பற்றுவதாகும். அதாவது, தொற்றும் நுண்ணுடலிகளைத் தடுக்கும் வாய்ப்பே இல்லை என்பதனை ஏற்றுக்கொண்டு, அவை உடலில் பெருகிவிடாவகையில், உடலைத் தகவமைப்பது நம் மரபுக்கொள்கை. இவ்வாறு செய்கையில், தொற்று நேரிட்டாலும், உடல் தன்னை அத்தொற்றினைச் செரித்து அதன் பெருக்கத்தினை வரையறுக்கும் அளவுக்கு தகவமைவு அடைகிறது.

குப்பைமேனி, மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு, பூண்டு, மிளகு ஆகியன மிகவும் இன்றியமையா ஏற்பு மருந்துகள். இவற்றை முறையாக உட்கொள்ளும் வழிமுறைகளை மக்களுக்குக் கற்றுக்கொடுத்தால், தொற்றுகளை உடலில் ஏற்றும் நலத்துடன் வாழ்வியலும்.

நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகியன இவ்வாறு ஏற்பு மருந்துகளாகவே மக்களைக் காத்து வருகின்றன. இவை தடுப்பு மருந்துகள் அல்ல.


தடுப்பு எனும் கருத்தே இயற்கையைப் புரிந்துகொள்ளாதவர்களின் வெளிப்பாடுதான். நுண்ணுடலிகளைத் தடுக்கவே இயலாது என்பதுதான் மெய்மை. நுண்ணுடலிகளைப் பற்றி பயின்றோர் அனைவரும் இதனை அறிவர்.


தடுப்பு மருந்துகளால் எப்பயனும் இல்லை என்பது நம் கருத்தல்ல. தடுப்பு ஊசிகள், மருந்துகள் பல நோய்களைத் தடுத்தும் தணித்தும் இருக்கின்றன, ஆனாலும், அவற்றினால் விளையும் எதிர் விளைவுகள் முறையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதே நம் கருத்து. ஆகவே, தடுப்பு மருந்து எனும் ஒரு வழிமுறையினைப் பின்பற்றுவோருக்கு, அவற்றின் எதிர் விளைவுகளைப் பற்றிய அறிவிப்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

இப்போதுள்ள பெருந்தொற்றிற்காக தடுப்பூசிகள் அரசினாலும் பிற அமைப்புகளாலும் வற்புறுத்தப்படுகின்றன. இவ்வூசிகளின் எதிர்விளைவுகளுக்கு அரசும், பிற அமைப்புகளும் எவ்வகையிலும் பொறுப்பேற்பதில்லை என்பதுதானே உண்மையான நிலை! இவ்வாறு விளைவுகளுக்குப் பொறுப்பேற்காதபோது, தடுப்பூசிகளை வற்புறுத்துவதில் என்ன நியாயம், நேர்மை உள்ளது?


பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் எனும் பெருங்கூட்டம் தடுப்பூசிகளைக் கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பது இன்றைய நிலையாக உள்ளது. இதற்காக பல்வேறு நெருக்கடிகளை அரசும் அதன் அங்கத்தவரும் ஏற்படுத்துவதைக் காண்கிறோம்.


இப்போதுள்ள தடுப்பூசிகளின் கட்டாயமானவை அல்ல என்பது சட்டம். ஆனால், அரசே அச்சட்டத்தினை மீறுவது எவ்வகையில் ஏற்புடையது! இப்பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகளைப் புறக்கணிக்க வேண்டும் என ஆங்கில மருத்துவ வல்லுனர்கள் நூற்றுக் கணக்கானோர் ஆய்வறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். தமிழக அரசு இவற்றைப் படித்துள்ளதா, இல்லையா?


தடுப்பூசிகளுக்கு எதிராக ஆய்வு செய்வோரும், அவற்றை எதிர்ப்போரில் மிகப் பெரும்பான்மையானோரும் ஆங்கில மருத்துவர்களே அன்றி, மரபுவாதிகள் அல்லர். இதனைத் தமிழக அரசு நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.


பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் எனும் அரசின் முனைப்பு போற்றத்தக்கது. ஆயினும், ஆங்கில மருத்துவத்தின் ஒரு பிரிவினரும் சில மருந்து நிறுவனங்களும், மருத்துவ வணிகர்களும் தீட்டும் திட்டங்களை மட்டுமே மக்கள் மீது திணிக்கும் அரசின் செயல்கள் மிகுந்த வருத்தத்திற்குரியன.


தடுப்பூசிகளால் ஏற்பட்டு வரும் எதிர்விளைவுகளைப் பற்றிய நேர்மையான, வெளிப்படையான ஆய்வுகளும் அறிக்கைகளும் தமிழகத்தில் இல்லை. இதனைச் செய்வதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லை. இந்நிலையில், அத்தடுப்பூசிகளை மக்கள் மீது திணிப்பது மட்டும் நிகழ்ந்தால், கண்மூடித்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் அரசு நடந்துகொள்கிறது என்றுதான் பொருள்படும்.


ஏற்பு மருந்துகள் எனும் நம் மரபுக்கொள்கையினை மேம்படுத்தி அவற்றையும் மக்களுக்குக் கற்றுத் தர வேண்டும். தடுப்பூசிகளை நம்புவோருக்கான வாய்ப்புகளும் அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டும்.


இவ்விரு வழிமுறைகளையும் அரசு திறந்து வைத்து, இரண்டினைப் பற்றிய நேர், எதிர் கருத்துகளையும் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். தனது உடலில் எந்த மருந்து செலுத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. அதனைப் பறிப்பது பெரும் பாவம். இது இயற்கைக்கு எதிரான செயல். நம் இறையியல் வகுத்த கொள்கைப்படி, 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் எனும் விடுதலைக் கருத்தியலுக்கும் எதிரானது.


நம் மரபு இறையியல் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வளர்ந்துள்ளது. நம் இறையியல் முன்னோடிகளாகிய சித்தர் பெருமக்கள், நோய்களை ஆய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை உணர்ந்து மக்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். ஆகவே நம் மரபு, கண்மூடித்தனமான நம்பிக்கைகளை எதிர்த்து வளர்ச்சியடைந்துள்ளது.


தடுப்பூசிகளின் மீது இன்றைக்கு மூடநம்பிக்கைதான் வளர்த்தெடுக்கப்படுகிறது. அதனைக் கேள்வி கேட்பதே அறிவியல் அல்ல என்ற வாதம் வளர்ந்துள்ளது. எதையும் கேள்வி கேட்டுத் தெளிவதுதான் அறிவு.


கேள்விகளின் வழியாக விளக்கங்களை அடைவதுதான் அறிவியல்.


வேம்பு, நிலவேம்பு, துளசி ஆகியன குறித்த கேள்விகளுகெல்லாம் தமிழர் மரபு விளக்கம் அளிக்கிறது. கபசுரக் குடிநீர் குறித்த கேள்விகளுக்கு விளக்கங்கள் உள்ளன. ஆகவேதான் அரசு இவற்றை ஏற்றுள்ளது. ஆனால், தடுப்பூசிகளினால் விளையும் எதிர்விளைவுகளைப் பற்றிய கேள்விகளுக்கு முறையான விளக்கம் இதுவரை இல்லை. ஆகவே, அறிவியலின் மீது பற்றுகொண்டோர் தடுப்பூசிகளின் நம்பகத்தினைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.


மீண்டும் கூறுகிறோம். தடுப்பூசிகளினால் பயனே இல்லை என்பது நம் கருத்தல்ல. அவற்றினால் விளையும் எதிர்விளைவுகளைப் பற்றிய மதிப்பீட்டில் வணிக நோக்கங்களும், அரைகுறையான பரப்புரைகளும் உள்ளன என்பதுதான் நம் கருத்து.


தடுப்பூசிகளே வேண்டும் என்போர் அவற்றை ஏற்றுக்கொள்வதில் நமக்கு எச்சிக்கலும் இல்வை. அவை வேண்டாம் என்போரை அரசு ஏன் வற்புறுத்துகிறது?


தடுப்பூசி வேண்டாம் என்போர் அரசின் வற்புறுத்தலால் அவற்றைச் செலுத்திக் கொண்ட பின்னர், அவர்களுக்கு நேரும் சிக்கல்களுக்கு யார் பொறுப்பு?


இந்தக் கேள்வி அரசுக்குச் சங்கடத்தை அளிக்கலாம். ஆனாலும், இதனை இன்று புறக்கணித்துவிட்டால் எதிர்காலத்தில் எழப்போகும் சங்கடங்களும் இன்னல்களும் பேரழிவிற்கு ஒப்பானவையாக இருக்கும். ஆகவே, தமிழக முதல்வர் இச்சிக்கலை ஆழ்ந்து நோக்கி, தமிழ்ச் சமூகத்தினைக் காக்கும் அரணாக இருக்க வேண்டும்!


நம் கோரிக்கைகள்,


1. பெருந்தொற்றினை மரபு வழிப்பட்ட ஏற்பு மருந்துகளின் வழியாகத் தணித்து மக்களைக் காக்கும் வழிமுறைகளை மேம்படுத்துக. மரபு உடல்நலவியல் என்பது தொற்றினைத் தடுப்பதல்ல, ஏற்றுச் செரித்து, அத்தொற்றினை உடலின் தகவமைப்பாக்குவது என்பதனைப் புரிந்துகொள்க. தமிழகத்தில் உள்ள சிறந்த சித்த மருத்துவ முன்னோடிகள் இதனை நன்கு அறிவர்.


2. தடுப்பூசிகளின் எதிர்விளைவுகளைப் பற்றிய ஆங்கில மருத்துவ வல்லுனர்களின் ஆய்வறிக்கைகளை நன்கு உள்வாங்கி, அவற்றின் மீதான கொள்கை முடிவு மேற்கொள்க.


3. தடுப்பூசிகளின் நன்மை, தீமைகளை வெளிப்படையாக அறிவித்து அவற்றை விரும்புவோருக்கு மட்டும் செலுத்துக.


4. அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், மாணவர்கள் போன்றோரை வற்புறுத்தி தடுப்பூசி செலுத்துவதைக் கைவிடுக!


இவையே நம் கோரிக்கைகள். இவற்றைத் தமிழக முதல்வர் நிறைவேற்றக் கோருகிறோம்.


இதற்கு முன்பு பல தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கும் இப்போதுள்ள பெருந்தொற்று தடுப்பூசிகளுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. இப்போதுள்ளவை, போதிய கால அளவில் சோதிக்கப்பட்டவையே அல்ல. மனிதர்கள் மீது இவ்வூசிகள் சோதிக்கப்படுகின்றன. இவற்றின் விளைவுகளைத் தமிழக அரசு சுமக்க வேண்டிய தேவையே இல்லை. இவற்றின் எதிர் விளைவுகளை எந்த மருந்து நிறுவனமும் சுமக்கப் போவதில்லை. வற்புறுத்தல் வழியாக இவ்வூசிகளைச் செலுத்தினால், இறுதிக்கும் இறுதியாக தமிழக அரசும் அதன் தலைவர்களும்தாம் இவ்வூசிகளின் விளைவுகளைச் சுமக்க நேரிடும்.


அம்மையப்பர் அருள் நிறைவதாக!


அன்புடன்,

ம.செந்தமிழன்

செம்மை அறக்கட்டளை

நிறுவன அறங்காவலர்


செய்மை அறக்கட்டளை மின்னஞ்சல்: sermimavanam@gmail.com


ஆச்சாம்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம். இணையம்: www.semmaivanam.org


நாள் : செப்டம்பர் 1, 2021



Saturday, February 28, 2026

இயற்கைப் பிரசவங்கள் - ஹீலர் பாஸ்கர்

 

ஹீலர் பாஸ்கர் விடுவிக்கப்பட வேண்டும்
இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்
!

.செந்தமிழன்
 





நண்பர்களே,

வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில் நிகழும் தவறுகளைப் போகிறபோக்கில் கடந்து செல்வது மன்னிக்க இயலாத செயல். பேறுகாலம், பிரசவ நேரம், குழந்தை வளர்ப்பு ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கல்விமுறை, அலோபதி மருத்துவத்தின் கீழ் இல்லாமல், மரபு வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இதுவே என் கருத்து.

 

நவீன மருத்துவத்திற்கெதிராக விழிப்புணர்வை உருவாக்கி வரும், ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அவரது எல்லாக் கொள்கைகளையும் நான் வழிமொழியவில்லை. எனக்கு மாற்றுக் கருத்துகள் பல உள்ளன. அதைப் பற்றிப் பொதுவெளியில் பேசியதும், எழுதியதும் இல்லை. இனியும் அவ்வாறு செய்யமாட்டேன். ஏனெனில், எவருடைய தனித்தன்மையையும் கேலி செய்யவோ, கேள்விக்குள்ளாக்கவோ கூடாது என்பது நான் கடைபிடிக்கும் கொள்கை.

 

வீட்டுப் பிரசவம் குறித்த அவரது கொள்கைகளிலும் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையைத் துளியும் ஒப்புக்கொள்ள இயலாது.

 

வீட்டுப் பிரசவம் குறித்த பயிற்சி நடத்துவதாக அவர் அறிவித்திருந்தார். இதை ஒட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி இந்த வழக்கினை எதிர்கொண்டு, மீண்டு வர முடியும்.

 

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தின் பொதுமனம் மாற்றம் பெற்றுள்ளது. மரபுகளை நோக்கிய சிந்தனை வெகுவாக வளர்ந்துள்ளது. இயற்கை வாழ்வியலை மக்கள் விரும்புகிறார்கள். ஏறுதழுவல் போராட்டத்தின்போது கோடிக்கணக்கானோர் ஆதரவளித்தது, இம்மாற்றத்தின் வெளிப்பாடுதான். நவீன வாழ்க்கை முறையின் குரூரத்தைச் சகிக்கவியலாமல் நிகழும் மாற்றம் இது.

 

சமூகத்தின் மிகச் சிறுபான்மையினராக உள்ள நவீனப் பகுத்தறிவாளர்களும் நாத்திகர்களும், இம்மாற்றத்தைக் கண்டு சினம் கொள்கின்றனர்.

 

அலோபதி மருத்துவமனைகளைத் தங்கள் ஆலயமாகக் கருதுவது பகுத்தறிவாளர்களின் குணம். உலகெங்கும் அலோபதி மருத்துவத்துறையின் சீர்கேடுகள் அம்பலமாகின்றன. முறையான தரவுகளோடும், சான்றுகளோடும் அலோபதியை அம்பலப்படுத்துபவர்களில் பெரும்பகுதியினர் நன்கு கற்றறிந்த அலோபதி மருத்துவர்கள்தான்.

 

சர்க்கரை ஒரு நோயல்ல, பற்றாக்குறை. வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் வழியாகவே இதைச் சீராக்கலாம்என்ற கருத்தினை பிரிட்டன் சுகாதார அமைப்பு, உலக சுகாதாரம் அமைப்பு, அமெரிக்க சுகாதார அமைப்பு ஆகியன வெளிப்படையாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில், எந்த மருத்துவமனையும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்துவதில்லை.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக சுகாதாரத் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. ‘காய்ச்சலுடன் வரும் மக்களுக்கு உடனடியாக ஆண்டி பயாடிக் மருந்துகளை அளிக்காதீர்கள்என்பது அவ்வறிக்கையின் சாரம். இந்த மருந்துகள் உருவாக்கும் தீமைகள் கட்டுப்படுத்த முடியாதவை என்பதால் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது.

 

அலோபதி மருத்துவமுறையின் சிக்கல்களிலிருந்து தப்புவதற்காகத்தான், ஓகக் கலையை மக்கள் நாடிச் செல்கின்றனர். இந்திய அரசு கொள்கை அளவில் ஓகத்தை நோய்த் தடுப்பிற்கும், நோய் எதிர்ப்பிற்குமான வழிமுறையாக அறிவித்துள்ளது. இவை எல்லாம் எதைக் காட்டி நிற்கின்றன? நவீன மருத்துவத் துறையினால், சமூகத்தில் உருவாகும் சிக்கல்களைக் களைவதற்கான வழிமுறைகள் தேவை என்பதைத்தானே!

 

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி, ‘ஒவ்வொரு குடிமகனுக்கும் / குடிமகளுக்கும் மரபுவழிப்பட்ட வாழ்வியலைக் கடைபிடிக்கவும், தமக்குத் தேவையான மருத்துவ வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு’.

 

எல்லோரும் அலோபதி மருத்துவமுறையில்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்என வாதிடுவது அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது.

 

பகுத்தறிவுவாதிகளுக்கும் வேறு சிலருக்கும் தேவை என்றால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லட்டும். அவர்களை எவரும் தடுக்கப் போவதில்லை. வீட்டுப் பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், கட்டாயப்படுத்தப்பட்டால் அது குற்றம். அவர்களே விரும்பி அவ்வழியைத் தேர்ந்தெடுத்தால், அதில் என்ன குற்றம் இருக்க முடியும்?

 

அரசு மருத்துவமனைகளில், மரபுவழி பிரசவத்திற்கான பயிற்றுனர்கள் வேண்டும். மருந்தில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை அவர்கள் மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும். இதுதான் தீர்வாக அமையும்.

 

எனக்கு எந்த மருந்தும் வேண்டாம். அறுவை சிகிச்சை வேண்டாம்என ஒரு பெண் விரும்பினால், அது குற்றமா? மூடநம்பிக்கையா?

 

எந்த மருந்தும் இல்லாமல் நான் வாழ்வேன். குழந்தை பெற்றுக்கொள்வேன்என ஒரு பெண் சுயமாக முடிவெடுத்தால் அதுதான் உண்மையான விடுதலை. அவ்வாறு விடுதலை பெற்ற பெண்கள் இப்போது அதிகரிக்கிறார்கள். அவர்களுடைய இந்த விருப்பம் நிறைவேறுவதற்கான சூழல், அரசு மருத்துவமனைகளில் இல்லை. அங்கு அலோபதி மருந்துகள் மட்டும்தான் ஒரே தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. ஆகவே, சரி செய்யவேண்டியது அரசு மருத்துவத்துறையைத்தானே தவிர, பெண்களின் மனநிலையை அல்ல.

 

சிசேரியன் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களின் வாழ்க்கை, வலிமிகுந்ததாக இருக்கிறது. சிசேரியனால் எந்தத் தீய விளைவும் இல்லை என அலோபதி மருத்துவமுறையும் கூறவில்லை. ‘எல்லா விளைவுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்  என கையொப்பம் வாங்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

 

குறிப்பிட்ட ஜாதக அமைப்பில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, நாள் நட்சத்திரம் பார்த்து சிசேரியன் செய்யும் மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதை, எந்தப் பகுத்தறிவாளரும் அறிந்ததில்லையோ! பேருந்துகளின் பின்புறம், ‘2 இலட்சம் ரூபாய் பிரசவகால பேக்கேஜ் (package)’ என்று விளம்பரம் செய்யும் மருத்துவமனைகளைப் பற்றிப் பேசுவோர் யார்?

 

மந்திரமாவது நீறுஎன்று தேவாரம் பாடி நோய் தீர்க்கும் முறை, இந்த நாட்டில் இன்னும் உள்ளது. இதை மூடநம்பிக்கை என்று தூற்றுவோரைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. பகுத்தறிவாளர்களிடம் சான்றிதழ் பெறுவதல்ல, வாழ்க்கையின் நோக்கம். அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் பங்கேற்று, இறந்துபோனோர் பட்டியலை ஆய்வு செய்த வரலாறு உண்டா? இனியாவது செய்வார்களா? ஒருகாலத்திலும் அந்த நேர்மையும் துணிவும் அவர்களுக்கு வராது. ஏனெனில், பகுத்தறிவு என்றால், தமிழ் மரபுகளைக் கேலி செய்வது என்ற தெளிவில் இருக்கிறார்கள் அவர்கள்.

 

வீட்டுப் பிரசவம், இயற்கை வாழ்வியல், மரபு வாழ்வியல் ஆகிய சிந்தனைகளை எந்த நாத்திகவாதமும் அசைக்க முடியாது.

 

இது மரபுகளுக்குத் திரும்பும் காலம். அரசு இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அலோபதியின் கொடுமைகளைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், வீட்டுப் பிரசவத்தின்போது நிகழும் மரணங்களும் தொடர் கதையாகிவிடும். அலோபதி மீதான அச்சமும் அருவெறுப்பும்தான் மக்களை பீதியடையச் செய்கின்றன. இதன் விளைவாகத்தான், முறையான வழிகாட்டுதல் இல்லாமல், பிரசவ மரணங்கள் நிகழ்கின்றன.

 

வீட்டுப் பிரசவம் குறித்துப் பேசுவோர், எழுதுவோரை எல்லாம் சிறையில் அடைக்கத் துடிக்கும் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபுறம்இந்த அரசாங்கமே மோசமானது. இது பொம்மை அரசாங்கம்எனக் கேலி செய்கிறார்கள். மறுபக்கம், ‘மரபுகளைப் பற்றிப் பேசுவோரை எல்லாம் சிறையிலடைக்க வேண்டும்என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

 

இந்த நிலத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நிலத்தின் மரபுகளையும், வாழ்வியலையும், வழிபாட்டு முறைகளையும் இறுகப் பற்றிக்கொள்ளும் உரிமை உண்டு.

 

இறை, இயற்கை, மரபு ஆகிய சிந்தனைகளின் ஆயுள், நாத்திகம் எனும் பச்சிளம் குழந்தையைக் காட்டிலும் பல்லாயிரம் ஆண்டு தொன்மை மிக்கது.

 

ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது, ஒரு தனி மனிதருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. அலோபதி, நவீனம், பெருநிறுவனங்கள், பகுத்தறிவுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுவோருக்கான எச்சரிக்கை. தமிழக அரசுக்கு இந்த உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அவர் கைதினைக் கொண்டாடுவோருக்கு இவைதான் உள்நோக்கங்கள்.

 

மீண்டும் கூறுகிறேன். இயற்கைப் பிரசவம் நம் உரிமை. அதைப் பற்றிய முறையான கல்வியை வழிகாட்டலை வழங்க வேண்டியது அரசின் கடமை. வீட்டுப் பிரசவங்களில் நிகழும் ஏராளமான தவறுகளை நான் தொடர்ந்து கண்டித்து வருகிறேன். முறையான வழிகாட்டல் இல்லாமல் வீட்டில் பிரசவம் பார்க்க நினைத்த பலரை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளேன்.

 

இயற்கைப் பிரசவங்களை அரசு முறைப்படுத்த வேண்டும். அலோபதி எனும் ஒற்றை முறையை நோக்கி எல்லா மனிதர்களையும் விரட்டுவது, அறமற்ற செயல். அரசுக்கு அறமே காவல்.

 

எனது இந்தப் பதிவிற்கு எதிராகவும் அவர்கள் இழிவாக, கண்ணியமற்றவகையில் செயலாற்றுவார்கள். மரபுவழிகளில் பிடிப்புகொண்டோர் அவர்களிடம் விவாதம் செய்து நேரத்தை விரயமாக்காதிருங்கள். நமது கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். நமது நியாயங்களை அரசுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

 

உண்மையில் நமது எண்ணிக்கை மிகவும் பெரிது. நமக்கெதிராக வசைபாடுவோர் மிகச் சிறுபான்மையினர். அவர்களுக்கு ஊடகங்களைக் கையாளும் கலை தெரிகிறது. அவ்வளவுதான். நமது எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்க மாட்டார்கள். எந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகவும் பரப்புரை செய்ய மாட்டார்கள். எந்த அற்புதச் சுகமளிக்கும் கூட்டத்திற்கும் சென்று கேள்விகேட்க மாட்டார்கள். பகுத்தறிவின் பலவீனங்கள் இவை.

 

நாம் மரபுகளின் செழுமையில் வாழ்கிறோம். தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், வேர்களிலிருந்து வலிமை பெறவும் நம்மால் மட்டுமே முடியும்.

 

ஹீலர் பாஸ்கர் கைதினை ஆதரிப்பவர்களிடம் ஒரு நொடியைக்கூட வீணடிக்காதீர்கள். அவர்களது சொற்களிலிருந்து பகுத்தறிவின் கண்ணியக்குறைபாட்டினை நீங்கள் கண்டுகொள்ளலாம். ஒரே ஒரு விவாதத்தைக்கூட கண்ணியமாக நடத்த முடியாதவர்கள் அவர்கள். நீங்கள் இந்தச் சகதிக்குள் இறங்காதீர்கள்.

 

ஹீலர் பாஸ்கர் விடுவிக்கப்பட வேண்டும்.

இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்.

 

இந்த இரண்டு செய்திகளை மட்டும் இயன்றவரை எடுத்துச் செல்லுங்கள்.

 

 

 ஹீலர் பாஸ்கர் என்ற சாதனையாளர்               August 5, 2018 -  நாகூர் ரூமி

ஹீலர் பாஸ்கர் அவர்கள் என் நண்பர். ஆங்கிலத்தில் eye-opener என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவர். மிகமிக எளிமையானவர். திறந்த மனதுக்குச் சொந்தக்காரர். மனித உடலின் மகத்துவம் பற்றி அனாடமிக் தெரபி என்ற பெயரில் பல உண்மைகளை எளிமையாகப் புரிய வைத்தவர். (இந்த பெயரில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறுவிஷயம். இதற்குசெவி வழி தொடு சிகிச்சைஎன்று சொதப்பலான  தமிழாக்கம் வேறு!).

 

ஆண்டவன் படைத்த உடல் எவ்வளவு அறிவுப்பூர்வமாகச் செயல்படுகிறது, எப்படி  ஒரு நோயை அதுவே தீர்த்துக்கொள்கிறது, அதற்கு உதவி செய்யும் பொருட்டு நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மருந்துகள் மாத்திரைகள், உடல் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்குதல் போன்ற செயல்கள் நம் உடலுக்கு எப்படி எந்த அளவுக்கு ஊறு விளைவிக்கும், உடலே உடலை  எப்படி குணப்படுத்திக்கொள்கிறதுஇப்படிப் பல விஷயங்களை அவர் தனது ஆடியோ வீடியோக்கள் மூலம் உலக மக்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

 

எல்லாமே அவரது அனுபவம் சார்ந்தவையாகவும் இருப்பது அவற்றின் சிறப்பு. அவரது எல்லாக் கருத்துக்களையும், எல்லாச் செயல்பாடுகளையும் நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேபோல என் கருத்துக்களிலும் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

 

ஆனால் நாங்கள் அனைவருமே உண்மை என்று உணர்ந்து கொண்டதைத்தான் எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் மக்கள் மத்தியில் பகிர்ந்துவருகிறோம்.

 

சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்துக்கொள்வது எப்படி என்று ஒரு நிகழ்வை அவர் நிறைவேற்ற இருந்ததை அறிந்துகொண்ட அலோபதி உலகம் தொடர்ந்து அப்படி நடக்குமானால் அது தங்களது வணிகத்தை பாதிக்கும் என்பதால் முறையான தகுதி இல்லாமல் அவர் அக்காரியத்தில் இறங்கியுள்ளதாகச் சொல்லி அவரைக் கைது செய்ய வைத்துள்ளனர்.

 

கைது செய்யப்படுபவர்களெல்லாம் தவறு செய்தவர்களுமல்ல. சுதந்திரமாக உலவிக்கொண்டு இருப்பவர்களெல்லாம் உத்தமர்களும் அல்ல என்பது நமக்குத் தெரியும்.

 

அதோடு தடுப்பூசி போடுவதைத் தடுக்கிறார்கள் என்ற குரலும் எழுந்துள்ளது. தடுப்பூசி கட்டாயமில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். தடுப்பூசி  கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு பிறந்த குழந்தைகளெல்லாம், நம் தாத்தா பாட்டிகளெல்லாம், நம்மைவிட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதுதான் நிஜம். போகட்டும்.

 

கைது செய்யத் தூண்டியவர்கள் அல்லது அதன் பின்னால் இருந்தவர்கள் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்ததால் ஏற்பட்ட ஒரு சில மரணங்களைக் காரணம் / உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் எத்தனையோ பிரசவ மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. அதற்காக எந்த மருத்துவரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லையே?! ‘அம்மாவையோ அல்லது குழந்தையையோ, இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்என்று எத்தனை திரைப்படங்களில் சீரியல்களில் நாம்டயலாக்கைக் கேட்டிருக்கிறோம்!

 

வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் அதற்காக அப்படிச் செய்வது குற்றம் என்று என்னால் சொல்லமுடியவில்லை. அவசர காலத்தில் இன்றைய ஆங்கில மருத்துவ உலகத்தின் உதவி உயிரைக் காப்பாற்றக் கூடியதாக உள்ளதை  நான் மறுக்கவில்லை. எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே ஒருவர் ஆங்கில மருத்துவ உதவியை நாடாமல் இருக்க முடியும். ஒரு குழந்தை சீரியஸான நிலையில் இருக்கும்போது ஒரு ஹீலரை அழைத்துடச்கொடுக்கலாம் என்று எந்த தாயும் / தகப்பனும் நினைக்க முடியாது.

 

ஒரேயடியாக ஆங்கில மருத்துவ உலகின் உதவி தேவையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் மாத்திரை மருந்துகள் ஊசிகள் அறுவை சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை என்பதுதான் என் கருத்தும்.

 

ஆங்கில மருத்துவம் தோன்றாத, வளராத ஒரு காலகட்டம் இருந்தது. அதில் வாழ்ந்தவர்களெல்லாம் நம்மை விட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். மருந்து மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்கள் உடலுக்கு நன்மை செய்வதே இல்லை, மாறாகப் பெரும் தீங்கைத்தான் விளைவிக்கின்றன என்று உலகப்புகழ் பெற்ற மருத்துவர்களான டாக்டர் பி.எம்.ஹெக்டே, டாக்டர் தீபக் சோப்ரா போன்றவர்களே விலாவாரியாகப் பேசியும் எழுதியும் உள்ளனர்.

 

ஐந்து ஆண்டுகள் ஆங்கில மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஆண்டு மருத்துவமனை அனுபவம் பெற்றுவிட்டால் மனித உடலை முற்றிலுமாக அறிந்துவிட்ட ஒரு மருத்துவ ஞானியாக, ஒரு ஹிப்பாக்கிரேடஸாக, ஒரு இப்னு சீனாவாக யாரும் மாறிவிடுவதில்லை. மாறாக நமக்கு மருந்துகளைக் கொடுத்து பரிசோதித்து பரிசோதித்துத்தான் அவர்கள் அனுபவம் பெறுகிறார்கள்! இதுதான் நிதர்சனம்.

 

எனவே ஹீலர் பாஸ்கரை கைது செய்ய வைத்தது தொழில் ரீதியான பொறாமையின் விளையேயன்றி வேறில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஹீலர்கள் வந்துவிட்டார்கள். டாக்டர் என்று சொல்லப்படுவதையே வெறுப்பதனால்தான் அவர்கள் தங்களை ஹீலர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்!

 

மனசாட்சியும் விபரமும் தெரிந்த மனிதர்கள் ஹீலர் பாஸ்கருக்கு உதவட்டும். அவர் விரைவில் வெளிவந்து தன் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

 

 

 

 

அதிகரிக்கும் வீட்டுப் பிரசவங்கள்   சிக்கல்களும்தீர்வுகளும்

- அக்கு ஹீலர்..உமர் பாரூக் -

 

கடந்த வாரத்தில் தமிழகத்தில் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது திருப்பூரில் நடந்த பிரசவ மரணம் பற்றிய செய்தி. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, கல்வி அறிவு பெற்ற குடும்பத்தில் யூ டியூபைப் பார்த்து பிரசவ முயற்சி செய்த போது, கூடுதலான உதிரப் போக்கால் தாய் மரணமடைந்தார் என்று பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிந்திருப்போம்.

இப்படி செய்தது சரியா? தவறா? இது அறியாமையில் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்ட குற்றமா? இனி இப்படிப்பட்ட முயற்சிகளை நாம் அனுமதிக்கலாமா? என்பது போன்ற கேள்விகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, இதன் பின்புலத்தை புரிந்து கொள்ள முயல்வோம்.

இதைச் செய்தவர்கள் மருத்துவ வசதி கிடைக்காத தூரத்தில் இல்லை. அருகிலேயே அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் சூழ்ந்திருக்கும் நகரத்தில் இருப்பவர்கள் தான். அதே போல, அவர்கள் கல்வியறிவு பெறாதவர்களும் இல்லை. படித்த குடும்பம் தான். பிரசவத்தில் மரணமடைந்த தாய் ஆசிரியராகப் பணிபுரிபவர். அவருடைய உடன்பாடு இல்லாமல் இந்த முயற்சியே நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது வெளிப்படையானது.

அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளும் முடிவை வலி வந்த பிறகு எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், கர்ப்பம் தரித்த ஐந்து மாதத்திற்குள் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பத்தை பதிவு செய்து கர்ப்ப எண் (ஆதார் போல) பெற வேண்டும் என்பது கட்டாயச் சட்டம். கர்ப்பகாலப் பதிவு கட்டாயம் என்பது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்திதான். அப்படியே அவர்கள் பதிய தவறியிருந்தாலும், நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் அரசு மருத்துவப் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் யார் கர்ப்பமாக உள்ளதாகக் கேள்விப்பட்டாலும் உடனடியாக பணியாளர் அவர்கள் வீட்டிற்கே சென்று தகவலை உறுதிப் படுத்தி சுகாதார நிலையத்திற்கு தெரிவிப்பார்.

இந்த இரண்டு பதிவுகளில் இருந்தும் வீட்டில் பிரசவம் பார்க்க முடிவு எடுத்ததால் தான் அந்தக் குடும்பம் தப்பியிருக்கிறார்கள். எனவே, இது அனைவரின் சம்மதத்தின் அடிப்படையில் முன்பே எடுக்கப்பட்ட முடிவாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த முடிவை திருப்பூரில் இருந்த இந்தக் குடும்பம் மட்டும்தான் எடுத்திருக்கிறதா. . .? என்றால் இல்லை. அதே திருப்பூரில் சென்ற ஆண்டு ஒரு குழந்தை வீட்டிலேயே பிரசவமாகி நல்ல முறையில் பிறந்தது. செவிலியரோ, மருத்துவரோ . . யாருடைய உதவியும் இன்றி சுகப்பிரசவம் நடந்தது. அப்போதும், நகராட்சி அதிகாரிகள் வீட்டிற்குச் சென்று தாயையும்குழந்தையையும் கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இதே போல, தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பிரசவங்கள் வீடுகளில் நடைபெற்றிருக்கின்றன. ஆங்கில மருத்துவத்தின் பரிந்துரையோ, பரிசோதனைகளோ, உதவியோ இல்லாமல் ஆயிரம் குழந்தைகள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வீட்டில் பிறந்தது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா. . ? அரசு பிறப்பு பதிவேடுகளிலேயே இந்தக் குறிப்புகளை நாம் பார்க்க முடியும்.

பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் படிவத்திலேயே தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. “குழந்தை மருத்துவ மனையில் பிறந்தால் மருத்துவரும், வீட்டில் பிறந்தால் உறவினரும் 21 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்என்று. அப்படியானால், வீட்டில் பிரசவம் நடப்பது என்பது தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக யூ ட்யூபில் பார்த்து பிரசவம் பார்ப்பதெல்லாம் கூடுதல். . . என்ற உங்கள் குரல் கேட்கிறது. ஆமாம் . . .நீங்கள் நினைப்பது சரிதான். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் பிரசவம் பார்ப்பது தவறானது தான்.

ஆனால், இப்படியான வீட்டுப் பிரசவ முயற்சிகள் அதிகரித்திருப்பதற்கான காரணம் என்ன? என்று கண்டுபிடிப்பதுதான் மிக மிக முக்கியமானது.

இப்படியான வீட்டுப் பிரசவங்களை விரும்புகிறவர்கள் படிக்காத பாமரர்களோ, பொருளாதார வசதியற்ற ஏழைகளோ அல்ல. அப்படியானால், அவர்கள் எந்த ,மருத்துவ வசதியும் இல்லாமல் வீட்டுப் பிரசவத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் தான் என்ன . . .?

சர்வதேச மருத்துவ ஆய்விதழ்தி லான்செட்”. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி இதழ் இது. ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹானிமென் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், கிருமிகளைக் கண்டுபிடித்த டாக்டர் லூயிஸ் பாஸ்டர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்த சர்வதேசப் புகழ் பெற்ற ஆய்விதழ்தான் இந்த லான்செட்.

2016 ஆம் ஆண்டு தாய் சேய் மருத்துவம் தொடர்பான உலக நிலையைக் கணக்கெடுத்து, இந்த இதழ் ஒரு ஆய்வினை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா குறித்து வெளியான தகவல் நமக்குத் தெரிந்ததாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சிசேரியன் செய்யப்படும் சதவிகிதம் – 5%. இந்த நிலை சுமார் முப்பது ஆண்டுகளாக பெரிய மாற்றமின்றி அப்படியே இருக்கிறது. ஆனால், பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு சிசேரியன் செய்யப்படும் சதவீதம் – 10 - 30%. இது சுமார் இருபத்தைத்து சதவீதம் கூடுதலாகி இருக்கிறது என்பது தான் இந்த ஆய்வு முடிவு.

இது அநேகமாக தனியார் மருத்துவமனைகளைக் கணக்கில் கொண்ட ஆய்வாக இருக்கும். ஏனெனில், தனியார் மருத்துவமனைகள் தான் பொருளாதாரத்தைப் பொறுத்து சிசேரியனை மேற்கொள்கின்றன என்படு வெளிப்படையான விஷயம்.

அப்படியானால், அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் நிலை என்ன. . ? ஒரு சிறிய கிராம மருத்துவமனைக்கு சிசேரியன் செய்வதற்கான உபகரணங்களை அரசு வழங்குகிறது. ஓராண்டாக அதனைப் பயன்படுத்தவில்லை என்றால், அந்த கிராம மருத்துவமனை கேட்கும் பிற வசதிகளை அரசு செய்து தராது. ஏனெனில், ஏற்கனவே கொடுக்கப்பட்ட வசதிகளையே மருத்துவமனை பயன்படுத்திக் கொள்ளாத போது எதற்காக புதிய வசதிகள். . ? எனவே, சிறிய மருத்துவமனைகள் முதல் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகள் வரை அரசு வழங்கியுள்ள உபகரணங்களை பயன்படுத்திய கணக்கு தேவைப்படுகிறது. இந்த கணக்கிற்காக கிராமம் முதல் நகரம் வரையுள்ள அத்தனை அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

இந்திய மாநிலங்களில் பிரசவகால இறப்புகள் மிகக் குறைந்த மாநிலம் எது தெரியுமா?– அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளதாக நம்பப் படுகிற, 99.99% பிரசவங்களை மருத்துவமனைகளில் நடத்தும் தமிழ்நாடு அல்ல. மருத்துவமனைகளுக்கு வராமல் அதிகமான பிரசவங்கள் நடக்கும் மாநிலமான நாகலாந்து தான் பிரசவ கால இறப்புகள் மிகக் குறைந்த மாநிலம். பிரசவம் ஆரோக்கியமாக நடப்பதற்கு மருத்துவமனை மட்டுமே சரியான இடம் என்பது வெறும் நம்பிக்கைதான்.

ஆக, பிரசவம் என்றாலே சிசேரியன் என்ற நிலையும், அதிலும் தனியார் மருத்துவமனைகளுக்குப் போனால் டீலக்ஸ் பேக்கேஜ், ஆர்டினரி பேக்கேஜ், பிரிமியம் பேக்கேஜ் என்று பிரசவங்களுக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டியதிருக்கும். சரி. . . பொருளாதார இழப்பு மட்டும் என்றால் கூட, கடன் வாங்கியாவது சிசேரியன் செய்து கொள்ளும் மனநிலைதான் மக்களுடையது. ஆனால், அதையும் கடந்து சிசேரியனுக்குப் பின்பான உடல் தொந்தரவுகள் மக்களை அச்சமூட்டும் காரணங்களில் ஒன்று.

பிரசவம் என்பதை ஒரு நோயாகக் கருதி, ஏராளமான ரசாயன மருந்துகளை தாயின் உடலுக்குள் கொட்டும் வேலை இன்னொரு புறம் நடக்கிறது. ஒவ்வொரு ரசாயனமும் ஏராளமான பக்க விளைவுகளைக் கொண்டவை என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்தானே? ரசாயன மருந்துகளின் பாதிப்பில்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள என்ன வழியை நாம் வைத்திருக்கிறோம்?

பொருளாதாரக் கொள்ளை ஒருபுறம் , பிரசவத்துக்குப் பிறகான உடல் ரீதியான தொந்தரவுகள் ஒருபுறமும் பயமுறுத்தும் போது சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் வீட்டுப் பிரசவ வாய்ப்பையே நாடுவார்கள்.

அதெல்லாம் சரி .  அலோபதி ஹாஸ்பிட்டல் போனாலோ, அரசு மருத்துவமனைக்குப் போனாலோ இப்படி நடக்கும் என வைத்துக் கொள்ளலாம். ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா இதிலாவது பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் தானே?

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஆங்கிலம் மருத்துவம் போன்றே, ஐந்தரை வருடங்கள் படித்து விட்டுத்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் ஆகிய துறை சார்ந்த மருத்துவர்களும் வருகிறார்கள். ஆங்கில மருத்துவத்தை கற்றுத்தரும் அதே எம்.ஜி.ஆர். மருத்துவப்  பல்கலைக்கழகம் தான் இந்த மருத்துவங்களையும் கற்றுத்தந்து பட்டம் வழங்குகிறது.

ஆனால், பிரசவம் பார்க்கும் உரிமை ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் நம் நாட்டுச் சட்டம். எனவே, மருத்துவக் கல்லூரியில் மரபு வழி மருத்துவங்களில் எம்.டி. போன்று பட்ட மேற்படிப்பு படித்திருந்தாலும் பிரசவம் செய்யும் உரிமை எந்த மருத்துவத்துக்கும் வழங்கப்படவில்லை. அதனால் தான் எந்த ஹோமியோபதி மருத்துவரும்.,  சித்த மருத்துவரும், ஆயுர்வேத மருத்துவரும், யுனானி மருத்துவரும், இயற்கை மருத்துவரும் பிரசவம் பார்ப்பதில்லை.

இப்போது மருத்துவம் குறித்து ஓரளவு விழிப்புணர்வு பெற்ற ஒருவர், மருத்துவ கொள்ளைகள் பற்றிய அறிவு பெற்ற ஒருவர் என்னதான் செய்ய முடியும். . .? எனவேதான் ஆபத்து எனத் தெரிந்தும் யூ டியூபிலாவது பார்த்து பிரசவம் பார்க்கும் முடிவுக்கு தள்ளப்படுகிறார்.

நம் நாட்டின் மருத்துவச் சூழலை எளிதாக கடந்து போய் விட முடியாது. இப்படியான பல்வேறு காரணிகளின் விளைவுதான் தமிழகத்தில் வீட்டுப் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு இந்தியக்குடிமகன் தான் எந்த மருத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தேர்வு செய்யும் உரிமை அரசியல் சாசனம் மக்களுக்குத் தந்தது. இதனை கோரும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு.

இதற்கான தீர்வு தான் என்ன?

1. பிரசவம் என்பது ஆங்கில மருத்துவத்தின் சொத்து அல்ல. எல்லா மரபு வழி மருத்துவர்களுக்கும் பிரசவம் பார்க்கும் உரிமை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மருத்துவத்தை தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கிடைக்கும்.

 

2. சில ஆண்டுகளுக்கு முன்னால தமிழக ..எஸ். அதிகாரிகளில் ஒருவரான் ஷீலா ராணி சுங்கத் பிரசவம் குறித்த கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்தார். அதில் அவர் முன்வைத்த தீர்வே பொருத்தமானது. மரபு வழி தாதியர்களை மறுபடியும் உருவாக்க வேண்டும். போதிய பயிற்சிகள் கொடுத்து பிரசவம் பார்ப்பதற்கான மரபு வழி அறிவையும்நவீன புரிதல்களையும் கொண்ட புதிய தாதிகளை உருவாக்க வேண்டும். மருத்துவர்களின் குறுக்கீடு பிரசவங்களில் குறைக்கப்பட வேண்டும். மிக அவசியமான தேவை ஏற்பட்டால் ஒழிய எந்த மருத்துவரும் பிரசவத்தில் தலையிடக் கூடாது.

 இதை நோக்கிய மாற்றம் ஏற்பட்டால் தவிர, வீட்டுப் பிரசவங்களை சட்டத்தினால் மட்டும் கட்டுப்படுத்த இயலாது.

 முறையான உடல் பற்றிய அறிவும், புரிதலும், ஒழுங்கான இயற்கை வாழ்வியலும் இல்லாமல் திடீர் வீட்டுப் பிரசவங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் வீட்டுப் பிரசவ முயற்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில மருத்துவத்தை தவிர்க்க வேண்டும் என்றால், கர்ப்ப காலத்தில் மரபு வழி மருத்துவர் ஒருவரின் வழிகாட்டுதலும், சிகிச்சையும் பிரசவ சமயத்தில் மரபுவழி செவிலியர் ஒருவரின் உதவியும் அடிப்படையான தேவைகள்.

 சமீபத்தில் நடந்த ஒரு அமெரிக்க சம்பவத்தோடு இந்தக் கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

 அமெரிக்காவின் நேஷ்வில் பகுதியைச் சேர்ந்த டியா ஃப்ரீமேன் விடுமுறைக்காக துருக்கிக்கு சுற்றுலா சென்றார். இவர் கர்ப்பமாக இருந்த போதும், பிரசவம் ஆக இன்னும் தேதி இருப்பதால் சுற்றுலா சென்றிருக்கிறார். இஸ்தான்புல் நகரத்தில் விடுதியில் தங்கியிருந்த டியாவுக்கு திடீரென பிரசவ வலி ஆரம்பித்தது. பிரசவ அறிகுறிகள் குறித்து கூகுளில் தேடி, தனக்கு வந்திருப்பது பிரசவ வலிதான் என்பதை உறுதி செய்து கொண்டார். குழந்தை பிறக்க நேரம் குறைவாக இருப்பதை இணையதளம் மூலம் கணித்த டியா யாருடைய உதவியும் இன்றி, தானே பிரசவம் பார்த்துக் கொள்ள தீர்மானித்தார். யூ டியுபின் உதவியோடு சில நிமிடங்களில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

 பிரசவத்தின் போது என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது மனிதனோ, மருத்துவனோ அல்ல. பிரசவத்துக்கும் முன்பு அவர்கள் வாழ்ந்த வாழ்வியலும், ஆரோக்கியமான உடல்நிலையும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

 

ஹீலர் பாஸ்கர் கைது ஏன் ?

தமிழர்களின் பரம்பரை அறிவு உலகத்தில் ஈடு இணை இல்லாதது என்பது நம்மவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் கற்று கொண்டு நம்மை அடிமை படுத்தி வைத்துஇருக்கும் இல்லுமினாட்டி யூத ரத்த வாரிசுகளுக்கு கண்டிப்பாக தெரியும்.

பரம்பரையாக வழிவழியாக நம் பாட்டியிடம் இருந்து அம்மாவிற்கும், அம்மாவிடம் இருந்து பிள்ளைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பதிவுகள் அனைத்தும் குழந்தை பிறந்த சில நாட்களில் கொடுக்க படும் தாய்ப்பாலின் மூலம் வந்து சேரும். தடுப்பூசி போட்டால் அதில் உள்ள நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் உடல் மரபு ரீதியிலான அறிவை குழந்தைக்கு வர விடாமல் செய்கிறார்கள். அதனால் வீட்டில் பிரசவம் பாருங்கள் தடுப்பூசி போடாதீர்கள் என்று நல்லதை சொன்னவர் ஹீலர் பாஸ்கர்.

பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதால் பரம்பரை அறிவு வந்து விடாமல் தடுப்பது தான் முக்கிய நோக்கம் இந்த இல்லுமினாட்டி தடுப்பூசி மருந்து கம்பனிக்கு அவரை கைது செய்து தடுப்பூசி கார்பொரேட் கமபனிக்கு கழுவிவிடும் அரசு இது என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

வீட்டில் பிரசவம் பார்த்து எத்தனையோ பேருக்கு நல்லபடியாக குழந்தை ஆரோக்கியமாக பிறந்துந்துள்ளது. திட்டமிட்டு ஹீலர் பாஸ்கர் சிக்க வைக்க பட்டு இருக்கிறார், பாரி சாலன் போல.....இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆகா வேண்டும்....காலம் வரும்.

https://youtu.be/ZscvR-Mkdv4     https://www.youtube.com/watch?v=RBfkm3Kq2sA

இந்த கானொலியை அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்...

ஹீலர் பாஸ்கர்! நடந்தது என்ன?

தமிழகத்தில் வீட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

எந்த வித மருந்துகளோ, தடுப்பூசிகளோ இல்லாமல்  ஆரோக்கியமடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

இதனால் கார்ப்ரெட் மருத்துவமான ஆங்கில மருத்தும் பின்னடைவு ஏற்படும் சூழல் .

காத்திருந்தது  கார்ப்ரெட் !

திருப்பூரில் வீட்டில் பிரசவித்த பெண் கிருத்திகா இறந்தார்!

இது  அவர்களுக்கு  சாதகமாக போனது.

கிருத்திகா இறந்தது  ஞாயிறு அன்று(22.07.18)  ஆனால் ஊடகங்கள் இதை பெரிது படுத்தியது செவ்வாய் கிழமை(24.07.18)

இடை பட்ட காலத்தில் திட்டம் தீட்டப்பட்டது!

யூட்யூப்   மீது பழி சுமத்தப்பட்டது!( இது ஹீலர் பாஸ்கரின்  யூட்யூப்  வீடியோக்களை குறிவைத்து நடத்தப்பட்டது தானே தவிர, யூட்யூப் பார்த்து யாரும் பிரசவம் பார்க்கவில்லை)

வீட்டு பிரசவத்தில் தவறு வராமல் இருக்க, ஹீலர் பாஸ்கர் சிறப்பு வகுப்பு நடத்த அறிவிக்கிறார்! அதுவும் இலவசமாக!

பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் ஹீலர் பாஸ்கர் மீது புகார் தெரிவிக்கவில்லை!

இலவசம்   என்று அறிவித்துவிட்டு ரூ.5000/- கட்டணம் வசூலித்ததாக  வழக்கு!

விசாரனைக்கு  அழைக்கப்படுகிறார் ஹீலர் பாஸ்கர்!

ஆனால்  உண்மை!

சுகப்பிரசவம்  வகுப்பு இலவசம்  தான்!

மோசடி செய்யும் நபர்  இல்லை ஹீலர் பாஸ்கர்! அது அவருக்கு தேவையுமில்லை.

அவரது 5 நாள் பயிற்சி வகுப்புக்குத்தான் தங்கும் செலவு,உணவு கட்டணம் இதற்கான நன்கொடையே ரூ.5000/- அதுவும்  கூட  எல்லோருக்கும் கட்டாயம் இல்லை. விருப்பமிருந்தால் தான்.

இது எளிதான வழக்கு தான்!

அவரால் பயனடைந்தவர்கள்  ஏராளம்!

பயனடந்தவர்களின்  விருப்பம்  நிறைவேறும்!

பின்னடைவு   கார்ப்ரெட்களுக்குத்தான்.

 

கோவையில் ராயல் கேர் என்ற மருத்துவமனை ஆரம்பிச்சி 14 மாசம் தான் ஆகுது இது வரை 6032 பிரசவங்கள் நடந்துள்ளன, 5809 பிரசவங்கள் சிசேரியன்!! 152 பிரசவங்களில் குழந்தைகள் மரணம், 3 கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சையின் போது மரணம்!! சிசேரியன் க்கு 100000 ₹, முடியாதவர்கள் மாத தவனையில் பணம் கட்டலாம்!! கோவையின் எந்த ஆம்புலன்ஸ்ல பிரசவத்துக்காக ஏறினாலும் ராயல் கேர் மருத்துவமனைக்கு மட்டுமே செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் ராயல் கேர் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படுவர்..!! கடந்த ஓராண்டில் ராயல் கேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 12091.கலெக்ஷன் ஏஜென்ட்களை நியமித்து கடன் பாக்கியை வசூல் செய்கிறார்கள்!! அந்த மருத்துவமனைக்கு வெகு அருகில் தான் ஹீலர் பாஸ்கரின் நிஷ்டை மையம்

இப்போ புரியுதா?? ஹீலர் பாஸ்கர் ஏன் கைது ன்னு.....

ராயல் கேர் மருத்துவமனையின் உரிமையாளர் அமைச்சர் வேலுமணி, பங்குதாரர்கள் விஜயபாஸ்கர் வானதி மற்றும் சிபி ராதா கிருஷ்ணன்....!!  Gokul Kannan Shanthalinga Kumar Aiadmk

 

(சவுக்கு சங்கரின் ஒரு பதிவின்கீழுள்ள கமெண்ட் இது....  உண்மை - பொய் தெரியவில்லை. சமூக நலன் கருதியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது)

*********""*************  *********""*************  *********""*************  *********""*************

ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களின் கைது நடவடிக்கையின் உண்மை காரணம்.!

ஐயா ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அவர் சுகப்பிரசவம் குறித்த வகுப்பு நடத்த விளம்பரம் கொடுத்து இருந்தார், அதனால் கைது செய்கிறோம் என காரணம் கூறுகிறார்கள்...

ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல. இது ஒன்றும் முதல் வகுப்பல்ல. சுகப்பிரசவம் குறித்து ஏற்கனவே பல வகுப்புகள் - மருட்டி பிரசவம் -  நடத்தி உள்ளார். அப்போது கைது செய்யவில்லை. மேலும் 8 வருடங்களாக  நோயில்லாமல் வாழ கற்று கொடுத்து வருகிறார்... 

இப்போது இரண்டு வருடங்களாக தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களையும் கற்று கொடுத்து வருகிறார்.  தேங்காய் எண்ணெய்  சோப்பு , செக்கு நல்லெண்ணெய் , செக்கு கடலை எண்ணெய், தூய தேங்காய் எண்ணெய், இயற்கை அரிசி, இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள், இயற்கை உணவு பொருட்கள், இன்னும் பல...

மேலும் தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான பயிற்சியை அளிக்கவும் உள்ளார். இதற்கான வகுப்பு வரும் "ஆகஸ்ட் 15"  அன்று சென்னையில் நடக்க உள்ளது. இதில் நம் வீட்டில் பயன்படுத்தும் "42" வகையான பொருட்களை நாமே குறைந்த செலவில், தரமாக தயாரிப்பது எப்படி என ஹீலர் பாஸ்கர் பயிற்சி தர உள்ளார். மேலும் பன்னாட்டு நிறுவன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த வீடியோவில் கூறி உள்ளார்...

ஏற்கனவே குளியல் சோப்பு , கலப்பட எண்ணெய் மார்க்கெட் இவரால் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது . பலரும் தூய தேங்காய் எண்ணெய் சோப்பு, செக்கு எண்ணெய்க்கு மாறி வருகின்றனர்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இதில் பலத்த அடி. "வருமானம் இழப்பு"... 

இதில் மேலும் 42 பொருட்கள் குறித்த பயிற்சி என்றால் சும்மா விடுவார்களா கார்ப்பரேட் முதலாளிகள்..! எதாவது காரணம் கிடைக்குமா என்று காத்திருந்து. இந்த சுகப்பிரசவ பயிற்சியை காரணமாக வைத்து  கைது செய்து விட்டார்கள்...

 

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இயற்கை மருத்துவம்  பற்றி கூறினால் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆங்கில மருத்துவத்தை பற்றி குறை கூறினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் பெரும்பாலும் மீடியாக்கள் மூலமாக பிரச்சாரம் செய்து , பயம் காட்டி ஆங்கில மருத்துவத்தை நடத்தி விடலாம். முட்டாள் மக்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என அவர்களுக்கு தெரியும்.

ஆனால் தற்சார்பு வாழ்கை என்று பேசினால் போதும். உங்களை கைது செய்து விடுவார்கள். ஏனென்றால் கார்ப்பரேட்டுகள், இல்லுமினாட்டிகளுக்கு அவர்கள் வியாபாரம் முக்கியம். அதை இழக்க ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அதற்காக எதையும் செய்வார்கள்...

 

தற்சார்பு பேசுபவன் கார்ப்பரேட் கம்பெனிகளின் முதல் எதிரி. சுதந்திர தினத்தன்று , கார்பொரேட் கம்பெனி பொருள்களில் இருந்து விடுதலை தர நமக்கு பயிற்சி தர இருந்தார் ஹீலர் பாஸ்கர்... 

அவர்களது வியாபாரத்தில் கை வைத்தால் கார்ப்பரேட் அலறுவான். அதிகாரத்தை பாய்ச்சுவான். இதுதான் ஹீலர் பாஸ்கருக்கும் நடந்தது...

 

************************************************************************************************************

பாஸ்கர் ஐயா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் பின்னணியில் மருத்துவக் கவுன்சில் மட்டுமில்லை.

 

அலோபதி மருத்துவர்கள் , மருத்துவமனைகள், மருந்துக் கம்பெனிகள்,  அரசு சுகாதார அமைப்புக்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், இவை அனைத்தையும் இயக்கும் கார்பரேட்கள் என பெரிய டீமே பின்னணியில் உள்ளன.

 

அதே போல் இது ஒரு தனிப்பட்ட பாஸ்கர் மீது மட்டும் தொடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

 

மரபுவழி மருத்துவம், மாற்று முறை மருத்துவம், - மருத்துவர்கள், - இவற்றை  வாழ்வியலாய் கொண்டவர்கள், - இவற்றால் பயனடைந்தவர்கள், அலோபதி போன்றவற்றிற்கு எதிர் கருத்து கொண்டவர்கள்,  - செயலாற்றுபவர்கள், கார்பரேட் கம்பெனி தயாரிப்புக்களை புறக்கணிப்பவர்கள் என அனைவர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை

புரிந்து கொண்டு செயல்படுவோம்.

 

********************************************************************************************************************************************************

*மரபுவழி மருத்துவத்தைத் தடுப்பதா? - ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய சீமான் வலியுறுத்தல்*

-  கார்த்திக்.சி

 

நமது பாரம்பர்ய மரபுவழி மருத்துவம் குறித்தும், இயற்கை முறையில் மகப்பேறு பெறுதல் குறித்தும் போதிய விழிப்பு உணர்வையும், வழிகாட்டுதலையும் அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹீலர் பாஸ்கர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,``மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும்.

 நிஷ்டை எனும் அமைப்பின் மூலமாக, ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி' எனும் பெயரில் மகப்பேறு குறித்தப் பரப்புரை நிகழ்வொன்றை வரும் ஆகஸ்ட் 26-ம் தேதியன்று கோவையில் நடத்துவதற்கு ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அந்நிகழ்வுக்கெதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது மோசடி செய்யும் நோக்கத்துடன் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அப்படியே அது குற்றமென்றால் பயிற்சி வகுப்பை தடை செய்திருந்தாலே போதுமானது. மரபுவழி மருத்துவத்தையே மடமைத்தனம் என்பதுபோல ஒரு மாயையை ஏற்படுத்துவதைத் தாண்டி வேறு எதையும் இக்கைது நடவடிக்கை சாதிக்கப் போவதில்லை.

 

திருப்பூரில் கிருத்திகா எனும் பெண்மணிக்கு அவரின் கணவர் காணொளியைப் பார்த்து மகப்பேறு பார்க்க முயன்று அப்பெண்மணி இறந்துபோனது பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். முறையான வழிகாட்டுதலோ, மகப்பேறு பயிற்சியோ, முன் அனுபவமோ, அதுகுறித்தான எந்தவொரு அடிப்படை அறிவுமின்றி மகப்பேறு செய்ய முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

அதேநேரத்தில், இதனை வைத்து மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் கட்டமைக்க முயல்வதும், அதுகுறித்தான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவோரை சிறைப்படுத்துவதும் மிகத் தவறானப் போக்காகும். இது தமிழர்களின் மரபுவழி மருத்துவத்துக்கும், பாரம்பர்யமான இயற்கை வாழ்வியலுக்கும் திரும்புவோரைத் திட்டமிட்டுக் குழப்பி திசைதிருப்பும் துரோகச்செயலாகும்.

 

 முடி உதிர்தல், ஆண்மைக்குறைவு போன்றவைகளுக்குத் தீர்வெனக் கூறி பலதரப்பட்ட விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. அவ்விளம்பரங்கள் வாயிலாகக் காட்டப்படும் மருத்துவமானது உயிருக்குத் தீங்கு விளைவிக்காது, பக்கவிளைவும் எதுவுமற்ற தீர்வினைத் தரும் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடுமில்லை. அவ்வாறு காட்டப்பட்ட மருத்துவத்தின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன.

 

இவ்வாறு தனிப்பெரும் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக மக்களின் அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உயிரும், உடலும் வணிகமாக்கப்பட்டு மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் இப்பெரும் மோசடி ஆளும் வர்க்கத்தின் கண்பார்வையில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எவரையும் மோசடி வழக்கின் கைது செய்ததுமில்லை; அவர்களது பரப்புரைக்கு எவ்விதத் தடை உத்தரவை இடவுமில்லை.

 

மேலும், மதங்களின் பெயராலும், ‘நோயைக் குணப்படுத்துகிறேன்எனும் பொய்யுரையும், ‘இறந்தவரை உயிர்ப்பிக்க எம்மிடம் வாருங்கள்' எனும் மத அடிப்படைவாதப் பரப்புரையும் இங்கு செய்யப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியே எடுக்க நல்ல நேரம் பார்க்கும் மூட நம்பிக்கை கொடுமைகளும்கூட தழைத்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கெதிராக சட்டமும், அரசும் இதுவரை எவ்விதத் துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை கண்முன்னே பார்த்து வருகிறோம். மகப்பேறின்போது தாய் இறந்துபோவதை மோசமானச் சுகாதார குறியீடாக உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் செய்யும்போது நிகழும் மரணங்களை வைத்து எவரும் ஆங்கில மருத்துவமே தவறென வாதிட முன்வருவதில்லை.

 

இன்னும் சொல்லப் போனால், விபத்து எனக் கூறி அதை எளிதாக மூடி மறைத்து விடுகின்றனர். அதேசமயம், இயற்கையாகக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மரபுவழி மருத்துவத்தையே பயிலாத ஒருவர் சுகப்பிரசவம் எனும் பெயரில் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க முயன்று அதில் அந்தக் கர்ப்பிணிப் பெண் இறந்து போனதை தனி மனிதத் தவறு என்பதனைக் கணக்கிடாமல் ஒட்டுமொத்த மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் குற்றம்சாட்ட முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது. இதை அடிப்படையாக வைத்து மரபுவழி மருத்துவத்தையே அடிப்படைவாதமாகவும், அறிவற்றச் செயலாகவும் நிறுவ முற்படுவோரின் செயலானது மகப்பேறினை பெரும் வணிகமாக்கி அதன்மூலம் லாபமீட்டத் துடிக்கும் தனியார் முதலாளிகளின் லாபவேட்டைக்குத் துணைபோகிற கொடுஞ்செயலாகும்.

 

 மரபுவழி மருத்துவத்தின் வாயிலாகவோ, ஆங்கில மருத்துவத்தின் வாயிலாகவோ எதன் வாயிலாகக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதை எவரும் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. அது உரிமையையும், விருப்பத்தையும் சார்ந்தது. அதேநேரத்தில், நமது பாரம்பர்ய மரபுவழி மருத்துவம் குறித்தும், இயற்கை முறையில் மகப்பேறு பெறுதல் குறித்தும் போதிய விழிப்பு உணர்வையும், வழிகாட்டுதலையும் செய்யலாம். அவ்வாறு செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அந்த அடிப்படையில் மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை மேற்கொள்ளவிருந்த ஹீலர் பாஸ்கர் கைது நடவடிக்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். ஆகவே, ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரின் மேலாளர் சீனிவாசன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Thanks to Vikatan

********************************************************************************************************************************************************

யாரையெல்லாம் கைது செய்வீர்கள்?

ஹீலர் பாஸ்கரின் கைது நமக்கு- மரபுவழியை பின்பற்ற வேண்டும் என்போருக்கு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

ஆயிரமாண்டுகால மரபு வழி சுகப்பிரசவ முறையை, வெறும் மிரட்டல்கள் மூலம் முடக்கிப்போட பார்க்கிறார்கள். முன்பை போல் அல்ல. இன்றைய இளைய தலைமுறை தன் வேர்களை தேடிப் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. அந்த பயணம் நீடிக்கக்கூடாது. நீடித்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின்-முதலாளிகளின் வாழ்வாதாரம் கெட்டுவிடும்.

எனவே இதைத் தடுத்தாக வேண்டும். அப்படி தடுக்கும் நோக்கில்தான் இந்தவித மிரட்டல்கள்.

 

மரபுவழி மருத்துவத்திற்கு பயிற்சி கொடுக்கப்போகிறேன் என்பதற்கு கைது.!அதாவது சுகப்பிரசவத்திற்கு பயிற்சி கொடுக்கப் போகிறேன் என்றார். இது குற்றம் என்கிறார்கள்.

அப்படிப்பார்த்தால் அரசையும், அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளையும்தான் கைது செய்யவேண்டும்.! எப்படி?   விஷயத்திற்கு வருகிறேன்.

 

கிராம அல்லது பேரூராட்சி அளவிளான பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றது. அங்கு கற்பினிகளுக்கு பிரசவம் பார்ப்பதற்கு என்று மகப்பேரு உதவியாளர் ஒருவர் இருப்பார். ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஒரு கிட்டை கையில் வைத்துக்கொண்டு வலம் வருவார்.

 

எந்த வீட்டில் கற்பினி பெண் இருக்கின்றாரோ அவரைப் பார்த்து ஆலோசனைகளைக் கூறுவார். தேவைப்பட்டால் மருந்து மாத்திரைகளை வழங்குவார். நிறை மாதத்தை நெருங்கும்போது அடிக்கடி வந்து கவனிப்பார். தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு முன்கூட்டியே வரப்சொல்லிவிடுவார்.

 

அப்படியான அந்த மகப்பேர் உதவியாளருக்கு உதவியாக உள்ளூர்- அந்த பகுதியிலேயே பல சுகப்பிரசவங்களை பார்த்த, முதிர்ந்த அனுபவசாலி ஒருவர் உடனிருப்பார். பெரும்பாலும் இவர் சுகப்பிரசவங்களை பார்த்த அனுபஸ்த்தராகவே இருப்பார். இந்த அம்மையார்தான் அரசு ஊழியரானமகப்பேர் உதவியாளருக்குஆல் இன் ஆல்.

இன்னும் சொல்லனும் என்றால் அந்த படிக்காத மரபுவழி சுகப்பிரசவம் பார்த்த அம்மையார்தான் பிரசவமே பார்ப்பார். அரசு உதவியாளர் உதவியாகவே இருப்பார்!

ஆச்சா.

 

சமையத்தில் என்ன நடக்கும் என்றால் கிராமப்பகுதிகளில் உள்ள கற்பினிகளுக்கு திடீர் பிரசவ வலி வந்துவிடும். அந்த சமையங்களில் அந்த படிக்காத உள்ளூர் அனுபவக்கார அம்மாதான் ஓடோடி வரும். உடனிருக்கும். அப்படி இப்படி என்று போராடி சுகப்பிரசவம் பார்த்து பிள்ளையை கையில் எடுத்துக் கொடுப்பார்.

 

இதற்குள் சைக்கிளிலோ அல்லது நடையும் ஓட்டமுமாக ஓடி ஆரம்ப சுகதார மருத்துவமனையில் இருக்கும் மகப்பேர் உதவியாளரை அழைத்து வருவார்கள். மருத்துவமனையில் இல்லை என்றால் அவர் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை நோக்கி ஓடுவார்கள். சில நேரங்களில் அந்த மகப்பேர் உதவியாளர் குடும்பத்தோடு சினிமா கொட்டைக்கு (டூரிங் டாக்கீஸ்) சென்றிருந்தால் அங்கு ஓடியும் தேடி அழைத்து வருவார்கள். இதற்குள் குழந்தை நல்லபடியாக பிறந்து முடிந்திருக்கும்.

 

ஆக சுகப்பிரசவம் பார்ப்பதில் அனுபவம் பெற்ற அந்த உள்ளூர் அம்மையாரைபயிற்சியாளர்’!!!- ‘உதவியாளர்’!!! என்றுகூறி வருகிறார்கள். இப்போதும் பல ஊர்களில் இத வழக்கத்தில் இருக்கிறது என நினைக்கின்றேன்.

 

ஆக அவர்கள் மரபுவழி சுகப்பிரசவம் பார்ப்பதில் அனுபவம் பெற்றிருந்தாலும்பயிற்சி அளிக்கப்பட்டவராகவைத்திருக்கிறார்கள். அவருக்கு என்ன சம்பளம் என்று தெரியாது. ஆனால் அப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

அப்படியே ஹீலர் பாஸ்கர் சொன்ன விஷயத்திற்கு வருவோம். மரபுவழி சுகப்பிரசவத்திற்கு பயிற்சி அளிக்கப்படும் என்றுதான் கூறினார். அப்படி பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் பிரசவம் பார்ப்பதில் என்ன தவறு? இப்படி சொன்னவரை கைது செய்ய வேண்டும் என்றால், இன்றைக்கும் பல கிராமங்களில்பயிற்சி பெற்ற உதவியாளர்பிரசவம் பார்த்துக்கொண்ருக்கின்றார்களே. அதற்காக யாரை கைது செய்வது?

 

சரி, வேண்டாம். இன்றைக்கும் பல கிராமங்களில் சுகப்பிரசவம் நடந்துகொண்டுதானே இருக்கிறது. பல மலை கிராமங்களில் இன்றும் தொடர்கிறதே. அவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் அனுபவசாலிகளை எல்லாம்பயிற்சி பெறாதவர்கள்என கைது செய்யப்போகிறீர்களா?

 

இதுதான் நம் கேள்வி.

 

பா.ஏகலைவன்.

 

********************************************************************************************************************************************************

05/08/2018

பாஸ்கர் ஐயா மற்றும் வீட்டுப் பிரசவம் குறித்த தவறான தகவல்களே பத்திரிக்கைகள், TV போன்ற மீடியாக்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக பரப்பப்பட்டுப் கொண்டே இருக்கின்றன.

அவற்றைப் பார்க்கும் / படிக்கும் ஜனங்கள் ஒற்றைப் புரிதலோடு தவறான கண்ணோட்டத்தில் பலரும் இருக்கின்றனர்.

விபரம் முழுவதும் தெரிந்து கொள்ளாமலே மேலோட்டமாக தெரிந்தவற்றைக் கொண்டு மேலும் தவறான செய்திகளை, வதந்திகளை பரப்புகின்றனர்.

 

யாராவது அவ்விதம் நம்மிடம் பேசிக் கொண்டு வந்தால் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் :

 

1. ஹீலர் பாஸ்கர் நடத்தும் ஒரு நாள் இலவச வகுப்பில் கலந்து கொண்டிக்கிறீர்களா?

 

2. அவரின் ஒரு நாள் வகுப்பின் வீடியோவை முழுவதுமாக பார்த்திருக்கிறீர்களா?

 

3.அவர் எழுதியிருக்கும் புத்தகங்களில் ஏதாவது ஒன்றையாவது முழுவதுமாக வாசித்திருக்கிறீர்களா?

 

4.அவர் சொல்லியதை பின்பற்றி உணவு, தண்ணீர், காற்று, தூக்கம் போன்றவற்றை பழக்கத்துக்கு கொண்டு வந்து அதனால் பயனுண்டா இல்லையா என்ற ஏதாவது அனுபவம் உங்களுக்கு உண்டா?

 

இவைகளுக்கு பெரும்பாலான கருத்துக் கந்தசாமிகளின் பதில் 'இல்லை' என்பதாகவே இருக்கும்,

 

இவர்களிடம் முடிந்தால் விளக்கலாம் இல்லையேல் இவர்களிடம் பேசுவதிலிருந்து விலகலாம்

 

இதே யோக்யதைதான் பெரும்பாலான தொ.காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் (?) அனைவரிடமும் இருக்கிறது.

 

அவர்களிடம் ஹீ்லர் உமர் பாரூக், ஏங்கல்ஸ் ராஜா, புகழேந்தி போன்றோர் பேசுவது விழலுக்கிறைத்த நீர் போன்றது.

 

 

மரபுக்குத் திரும்புங்கள். அதுவே புவி முழுமைக்குமான தீர்வு

.செந்தமிழன்

 

''வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது குற்றம் இல்லை. ஆனால் அரசின் பதிவு பெறாத நபர்கள் பிரசவம் பார்ப்பது குற்றம். பயிற்சியில்லாத நபர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை மருத்துவம் என்று கூறி பிரசாரம் செய்வது குற்றம்

- தமிழக சுகாதாரத் துறைச் செயலர், மரு.இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.

 

பி.பி.சி தமிழ் இணையச் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் இந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

எனது கருத்துகளையும், செம்மைச் செயற்பாட்டாளர் கலாநிதியின் கருத்துகளையும் கூட இதே கட்டுரையில் பதிவு செய்துள்ளார் அவர்.‘வீட்டுப் பிரசவமே குற்ற நடவடிக்கை. இதைப் பற்றிப் பேசுவோரைக் கைது செய்ய வேண்டும்என்ற பொய் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

 

பகுத்தறிவின் ஊனப் பார்வைக்குச் சட்டமும், நடைமுறையும் தெரியாது.

 

எல்லாப் பிரசவங்களும் அலோபதி முறைப்படி, மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்பது மேற்கத்திய நிறுவனமயப்பட்ட அடிமைகளின் பேராசை.

 

மரபுவழியில் பயணிப்போருக்கு பேராசை இல்லை. விருப்பம் உள்ளது. நாம் நம் விருப்பத்தில் நிலைக்கிறோம். ஆழ்ந்த வேண்டுதலுடன் உள்ளோம். மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன.

 

மரபுவழிகளில் பிள்ளைப் பேறு எட்டும், கல்வி முறை வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்துகிறேன். இக்கல்வி ஏட்டுக் கல்வியாக மட்டுமில்லாமல், மரபு நுட்பங்களின் நடைமுறைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்.

 

நகரமயப்பட்ட புதிய தலைமுறையினருக்கு இக்கல்வி எளிதில் கிடைக்க வேண்டும். அவர்கள் விரும்பினால், இக்கல்வி வழிகாட்டலோடு வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை வேண்டும். இதைச் செய்வதும் அரசின் கடமைதான்.

 

இந்த நிலத்தில் வாழும் அனைவருக்கும் இந்த நிலத்தின் மரபுகளைப் போற்றவும், பற்றவும் உரிமை உண்டு. இவ்வுரிமையைச் செயலாக்குவதில் சிக்கல் நேர்ந்தால், அச்சிக்கலைச் சரி செய்ய வேண்டுமே தவிர, உரிமையைப் பறிக்கக் கூடாது.

 

போலி வாக்குறுதி அளிப்போரும், பழமைவாதிகளும், வணிக மருத்துவ நிறுவனங்களும் சமூகத்தின் கேடுகள். இக்கேடுகளைக் களையும் தீர்வு, தற்சார்பான வாழ்வியலில் மட்டுமே உள்ளது. மரபுதான் தற்சார்பின் தாய். ஆகவே, மரபுக்குத் திரும்புங்கள்.

 

ஹீலர் பாஸ்கர், வீட்டுப் பிரசவத்திற்காக எவ்வித வாக்குறுதியும் அளித்து, அதற்கான பணம் பெறவில்லை. நான் புரிந்துகொண்டவரை, அவர் அவ்வாறான மனிதர் அல்ல. அவர் மீது, புகார் அளித்தவர்கள் பகுத்தறிவுவாதத்தின் பித்துப் பிடித்த நிலையில் உள்ளோர். அவரைப் புரிந்துகொள்ளாமல் செய்திருக்கிறார்கள்.

 

சட்டப்படி அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நியாயப்படி அவர் நன்மைகள் பல செய்துள்ளார். அவரை விடுவிக்க வேண்டும். மரபுச் சமூகத்திற்கு வருகை தரும் நம் மக்கள் அனைவரும் தொடர்ந்து செயல்படுங்கள். அவர் விடுதலை நம் விருப்பம்.

 

இச்செய்திக் கட்டுரையை, இதில் உள்ள உண்மைகளைப் பரவலாக எடுத்துச் செல்லுங்கள். பகுத்தறிவாளர்களுக்குப் பதில் கூறாதீர்கள். அவர்கள் அடுத்த பொய்களை உருவாக்க உழைப்பார்களே தவிர, சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள், நியாயத்தையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

 

ஆங்கிலமே அறிவு மொழி, அறிவியல் என்றாலே மேற்கிலிருந்து வருவதுதான் என்பவை எல்லாம் பகுத்தறிவின் மூடநம்பிக்க்கைகள். நாம் ஆங்கிலமும் அறிவோம் தமிழும் அறிவோம் ஆரியமும் அறிவோம். நமக்கு எம்மொழி மீதும் வெறுப்பில்லை. மேலை நாட்டு நுட்பங்களை நாம் வெறுப்பதில்லை. நம் நாட்டு நுட்பங்களை விட்டுக்கொடுப்பதுமில்லை.

 

நாம் பழமைவாதிகள் அல்ல, மரபுவாதிகள். மரபு என்பது காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்துகொண்டு, தொன்மையின் மெய்மையில் நிலைத்து வளர்வதாகும்.

 

நமக்குக் கருவிகளைப் பயன்படுத்தவும் தெரியும், அக்கருவிகள் இல்லாமல் வாழவும் தெரியும்.

 

நாம் பகுத்தறிவாளர்களை விட மேலான தகுதி பெற்றோர். அவர்களுக்கு இருப்பது ஒற்றைத் தன்மை. நம்மிடம் இருப்பது பன்மயம். தமிழ் போற்றிய அப்பாத்துரையார் 18 மொழிகள் அறிந்தவர். ’பன்மொழிப்புலவர்என்று அவருக்கு அடைமொழி உண்டு.

 

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் அவர் இயற்றிய, ‘குமரிக்கண்டம்எனும் நூலில் டைனோசரஸ் எனும் விலங்கு குறித்த தகவல்களை, மேலை நாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்தவர் அவர். இந்த பகுத்தறிவாளர்களுக்கு அந்தக் காலத்தில் இவ்வாறான கல்வியே கிடையாது. ஆங்கிலத் திரைப்படம் பார்த்த பிறகுதான், டைனோசரஸ் எனும் விலங்கை இவர்கள் அறிந்துகொண்டார்கள்.

 

நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்லர். நாம் எந்தக் கண்டுபிடிப்பிற்கும் எதிரிகள் அல்லர். மாற்றங்களை நிராகரிப்பவர்கள் அல்லர்.

 

இயற்கைக்கும், பல்லுயிர் வாழ்க்கைக்கும் பொருந்தாதவற்றை நிராகரிக்கிறோம். இந்த மெய்யறிவை நமக்கு நம் மரபு வழங்கியுள்ளது.

 

மரபுக்கொள்கையில் நிலைப்பதே இறை அருள்தான்.

மரபு வாழ்வியலே புவிமுழுமைக்குமான தீர்வு. நாம் நம் மரபில் வாழத் துவங்குவோம்!

 

பி.பி.சி கட்டுரைச் சுட்டி:

https://www.bbc.com/tamil/india-45074210