Saturday, February 28, 2026

இயற்கைப் பிரசவங்கள் - ஹீலர் பாஸ்கர்

 

ஹீலர் பாஸ்கர் விடுவிக்கப்பட வேண்டும்
இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்
!

.செந்தமிழன்
 





நண்பர்களே,

வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில் நிகழும் தவறுகளைப் போகிறபோக்கில் கடந்து செல்வது மன்னிக்க இயலாத செயல். பேறுகாலம், பிரசவ நேரம், குழந்தை வளர்ப்பு ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கல்விமுறை, அலோபதி மருத்துவத்தின் கீழ் இல்லாமல், மரபு வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இதுவே என் கருத்து.

 

நவீன மருத்துவத்திற்கெதிராக விழிப்புணர்வை உருவாக்கி வரும், ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அவரது எல்லாக் கொள்கைகளையும் நான் வழிமொழியவில்லை. எனக்கு மாற்றுக் கருத்துகள் பல உள்ளன. அதைப் பற்றிப் பொதுவெளியில் பேசியதும், எழுதியதும் இல்லை. இனியும் அவ்வாறு செய்யமாட்டேன். ஏனெனில், எவருடைய தனித்தன்மையையும் கேலி செய்யவோ, கேள்விக்குள்ளாக்கவோ கூடாது என்பது நான் கடைபிடிக்கும் கொள்கை.

 

வீட்டுப் பிரசவம் குறித்த அவரது கொள்கைகளிலும் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையைத் துளியும் ஒப்புக்கொள்ள இயலாது.

 

வீட்டுப் பிரசவம் குறித்த பயிற்சி நடத்துவதாக அவர் அறிவித்திருந்தார். இதை ஒட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி இந்த வழக்கினை எதிர்கொண்டு, மீண்டு வர முடியும்.

 

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தின் பொதுமனம் மாற்றம் பெற்றுள்ளது. மரபுகளை நோக்கிய சிந்தனை வெகுவாக வளர்ந்துள்ளது. இயற்கை வாழ்வியலை மக்கள் விரும்புகிறார்கள். ஏறுதழுவல் போராட்டத்தின்போது கோடிக்கணக்கானோர் ஆதரவளித்தது, இம்மாற்றத்தின் வெளிப்பாடுதான். நவீன வாழ்க்கை முறையின் குரூரத்தைச் சகிக்கவியலாமல் நிகழும் மாற்றம் இது.

 

சமூகத்தின் மிகச் சிறுபான்மையினராக உள்ள நவீனப் பகுத்தறிவாளர்களும் நாத்திகர்களும், இம்மாற்றத்தைக் கண்டு சினம் கொள்கின்றனர்.

 

அலோபதி மருத்துவமனைகளைத் தங்கள் ஆலயமாகக் கருதுவது பகுத்தறிவாளர்களின் குணம். உலகெங்கும் அலோபதி மருத்துவத்துறையின் சீர்கேடுகள் அம்பலமாகின்றன. முறையான தரவுகளோடும், சான்றுகளோடும் அலோபதியை அம்பலப்படுத்துபவர்களில் பெரும்பகுதியினர் நன்கு கற்றறிந்த அலோபதி மருத்துவர்கள்தான்.

 

சர்க்கரை ஒரு நோயல்ல, பற்றாக்குறை. வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் வழியாகவே இதைச் சீராக்கலாம்என்ற கருத்தினை பிரிட்டன் சுகாதார அமைப்பு, உலக சுகாதாரம் அமைப்பு, அமெரிக்க சுகாதார அமைப்பு ஆகியன வெளிப்படையாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில், எந்த மருத்துவமனையும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்துவதில்லை.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக சுகாதாரத் துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. ‘காய்ச்சலுடன் வரும் மக்களுக்கு உடனடியாக ஆண்டி பயாடிக் மருந்துகளை அளிக்காதீர்கள்என்பது அவ்வறிக்கையின் சாரம். இந்த மருந்துகள் உருவாக்கும் தீமைகள் கட்டுப்படுத்த முடியாதவை என்பதால் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது.

 

அலோபதி மருத்துவமுறையின் சிக்கல்களிலிருந்து தப்புவதற்காகத்தான், ஓகக் கலையை மக்கள் நாடிச் செல்கின்றனர். இந்திய அரசு கொள்கை அளவில் ஓகத்தை நோய்த் தடுப்பிற்கும், நோய் எதிர்ப்பிற்குமான வழிமுறையாக அறிவித்துள்ளது. இவை எல்லாம் எதைக் காட்டி நிற்கின்றன? நவீன மருத்துவத் துறையினால், சமூகத்தில் உருவாகும் சிக்கல்களைக் களைவதற்கான வழிமுறைகள் தேவை என்பதைத்தானே!

 

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின்படி, ‘ஒவ்வொரு குடிமகனுக்கும் / குடிமகளுக்கும் மரபுவழிப்பட்ட வாழ்வியலைக் கடைபிடிக்கவும், தமக்குத் தேவையான மருத்துவ வழிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு’.

 

எல்லோரும் அலோபதி மருத்துவமுறையில்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்என வாதிடுவது அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது.

 

பகுத்தறிவுவாதிகளுக்கும் வேறு சிலருக்கும் தேவை என்றால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லட்டும். அவர்களை எவரும் தடுக்கப் போவதில்லை. வீட்டுப் பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், கட்டாயப்படுத்தப்பட்டால் அது குற்றம். அவர்களே விரும்பி அவ்வழியைத் தேர்ந்தெடுத்தால், அதில் என்ன குற்றம் இருக்க முடியும்?

 

அரசு மருத்துவமனைகளில், மரபுவழி பிரசவத்திற்கான பயிற்றுனர்கள் வேண்டும். மருந்தில்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை அவர்கள் மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும். இதுதான் தீர்வாக அமையும்.

 

எனக்கு எந்த மருந்தும் வேண்டாம். அறுவை சிகிச்சை வேண்டாம்என ஒரு பெண் விரும்பினால், அது குற்றமா? மூடநம்பிக்கையா?

 

எந்த மருந்தும் இல்லாமல் நான் வாழ்வேன். குழந்தை பெற்றுக்கொள்வேன்என ஒரு பெண் சுயமாக முடிவெடுத்தால் அதுதான் உண்மையான விடுதலை. அவ்வாறு விடுதலை பெற்ற பெண்கள் இப்போது அதிகரிக்கிறார்கள். அவர்களுடைய இந்த விருப்பம் நிறைவேறுவதற்கான சூழல், அரசு மருத்துவமனைகளில் இல்லை. அங்கு அலோபதி மருந்துகள் மட்டும்தான் ஒரே தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. ஆகவே, சரி செய்யவேண்டியது அரசு மருத்துவத்துறையைத்தானே தவிர, பெண்களின் மனநிலையை அல்ல.

 

சிசேரியன் பிரசவத்திற்குப் பிந்தைய பெண்களின் வாழ்க்கை, வலிமிகுந்ததாக இருக்கிறது. சிசேரியனால் எந்தத் தீய விளைவும் இல்லை என அலோபதி மருத்துவமுறையும் கூறவில்லை. ‘எல்லா விளைவுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்  என கையொப்பம் வாங்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

 

குறிப்பிட்ட ஜாதக அமைப்பில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, நாள் நட்சத்திரம் பார்த்து சிசேரியன் செய்யும் மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதை, எந்தப் பகுத்தறிவாளரும் அறிந்ததில்லையோ! பேருந்துகளின் பின்புறம், ‘2 இலட்சம் ரூபாய் பிரசவகால பேக்கேஜ் (package)’ என்று விளம்பரம் செய்யும் மருத்துவமனைகளைப் பற்றிப் பேசுவோர் யார்?

 

மந்திரமாவது நீறுஎன்று தேவாரம் பாடி நோய் தீர்க்கும் முறை, இந்த நாட்டில் இன்னும் உள்ளது. இதை மூடநம்பிக்கை என்று தூற்றுவோரைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. பகுத்தறிவாளர்களிடம் சான்றிதழ் பெறுவதல்ல, வாழ்க்கையின் நோக்கம். அற்புத சுகமளிக்கும் கூட்டங்களில் பங்கேற்று, இறந்துபோனோர் பட்டியலை ஆய்வு செய்த வரலாறு உண்டா? இனியாவது செய்வார்களா? ஒருகாலத்திலும் அந்த நேர்மையும் துணிவும் அவர்களுக்கு வராது. ஏனெனில், பகுத்தறிவு என்றால், தமிழ் மரபுகளைக் கேலி செய்வது என்ற தெளிவில் இருக்கிறார்கள் அவர்கள்.

 

வீட்டுப் பிரசவம், இயற்கை வாழ்வியல், மரபு வாழ்வியல் ஆகிய சிந்தனைகளை எந்த நாத்திகவாதமும் அசைக்க முடியாது.

 

இது மரபுகளுக்குத் திரும்பும் காலம். அரசு இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அலோபதியின் கொடுமைகளைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், வீட்டுப் பிரசவத்தின்போது நிகழும் மரணங்களும் தொடர் கதையாகிவிடும். அலோபதி மீதான அச்சமும் அருவெறுப்பும்தான் மக்களை பீதியடையச் செய்கின்றன. இதன் விளைவாகத்தான், முறையான வழிகாட்டுதல் இல்லாமல், பிரசவ மரணங்கள் நிகழ்கின்றன.

 

வீட்டுப் பிரசவம் குறித்துப் பேசுவோர், எழுதுவோரை எல்லாம் சிறையில் அடைக்கத் துடிக்கும் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருபுறம்இந்த அரசாங்கமே மோசமானது. இது பொம்மை அரசாங்கம்எனக் கேலி செய்கிறார்கள். மறுபக்கம், ‘மரபுகளைப் பற்றிப் பேசுவோரை எல்லாம் சிறையிலடைக்க வேண்டும்என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

 

இந்த நிலத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நிலத்தின் மரபுகளையும், வாழ்வியலையும், வழிபாட்டு முறைகளையும் இறுகப் பற்றிக்கொள்ளும் உரிமை உண்டு.

 

இறை, இயற்கை, மரபு ஆகிய சிந்தனைகளின் ஆயுள், நாத்திகம் எனும் பச்சிளம் குழந்தையைக் காட்டிலும் பல்லாயிரம் ஆண்டு தொன்மை மிக்கது.

 

ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது, ஒரு தனி மனிதருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. அலோபதி, நவீனம், பெருநிறுவனங்கள், பகுத்தறிவுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுவோருக்கான எச்சரிக்கை. தமிழக அரசுக்கு இந்த உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அவர் கைதினைக் கொண்டாடுவோருக்கு இவைதான் உள்நோக்கங்கள்.

 

மீண்டும் கூறுகிறேன். இயற்கைப் பிரசவம் நம் உரிமை. அதைப் பற்றிய முறையான கல்வியை வழிகாட்டலை வழங்க வேண்டியது அரசின் கடமை. வீட்டுப் பிரசவங்களில் நிகழும் ஏராளமான தவறுகளை நான் தொடர்ந்து கண்டித்து வருகிறேன். முறையான வழிகாட்டல் இல்லாமல் வீட்டில் பிரசவம் பார்க்க நினைத்த பலரை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளேன்.

 

இயற்கைப் பிரசவங்களை அரசு முறைப்படுத்த வேண்டும். அலோபதி எனும் ஒற்றை முறையை நோக்கி எல்லா மனிதர்களையும் விரட்டுவது, அறமற்ற செயல். அரசுக்கு அறமே காவல்.

 

எனது இந்தப் பதிவிற்கு எதிராகவும் அவர்கள் இழிவாக, கண்ணியமற்றவகையில் செயலாற்றுவார்கள். மரபுவழிகளில் பிடிப்புகொண்டோர் அவர்களிடம் விவாதம் செய்து நேரத்தை விரயமாக்காதிருங்கள். நமது கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். நமது நியாயங்களை அரசுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

 

உண்மையில் நமது எண்ணிக்கை மிகவும் பெரிது. நமக்கெதிராக வசைபாடுவோர் மிகச் சிறுபான்மையினர். அவர்களுக்கு ஊடகங்களைக் கையாளும் கலை தெரிகிறது. அவ்வளவுதான். நமது எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்க மாட்டார்கள். எந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகவும் பரப்புரை செய்ய மாட்டார்கள். எந்த அற்புதச் சுகமளிக்கும் கூட்டத்திற்கும் சென்று கேள்விகேட்க மாட்டார்கள். பகுத்தறிவின் பலவீனங்கள் இவை.

 

நாம் மரபுகளின் செழுமையில் வாழ்கிறோம். தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், வேர்களிலிருந்து வலிமை பெறவும் நம்மால் மட்டுமே முடியும்.

 

ஹீலர் பாஸ்கர் கைதினை ஆதரிப்பவர்களிடம் ஒரு நொடியைக்கூட வீணடிக்காதீர்கள். அவர்களது சொற்களிலிருந்து பகுத்தறிவின் கண்ணியக்குறைபாட்டினை நீங்கள் கண்டுகொள்ளலாம். ஒரே ஒரு விவாதத்தைக்கூட கண்ணியமாக நடத்த முடியாதவர்கள் அவர்கள். நீங்கள் இந்தச் சகதிக்குள் இறங்காதீர்கள்.

 

ஹீலர் பாஸ்கர் விடுவிக்கப்பட வேண்டும்.

இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்.

 

இந்த இரண்டு செய்திகளை மட்டும் இயன்றவரை எடுத்துச் செல்லுங்கள்.

 

 

 ஹீலர் பாஸ்கர் என்ற சாதனையாளர்               August 5, 2018 -  நாகூர் ரூமி

ஹீலர் பாஸ்கர் அவர்கள் என் நண்பர். ஆங்கிலத்தில் eye-opener என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவர். மிகமிக எளிமையானவர். திறந்த மனதுக்குச் சொந்தக்காரர். மனித உடலின் மகத்துவம் பற்றி அனாடமிக் தெரபி என்ற பெயரில் பல உண்மைகளை எளிமையாகப் புரிய வைத்தவர். (இந்த பெயரில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறுவிஷயம். இதற்குசெவி வழி தொடு சிகிச்சைஎன்று சொதப்பலான  தமிழாக்கம் வேறு!).

 

ஆண்டவன் படைத்த உடல் எவ்வளவு அறிவுப்பூர்வமாகச் செயல்படுகிறது, எப்படி  ஒரு நோயை அதுவே தீர்த்துக்கொள்கிறது, அதற்கு உதவி செய்யும் பொருட்டு நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மருந்துகள் மாத்திரைகள், உடல் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்குதல் போன்ற செயல்கள் நம் உடலுக்கு எப்படி எந்த அளவுக்கு ஊறு விளைவிக்கும், உடலே உடலை  எப்படி குணப்படுத்திக்கொள்கிறதுஇப்படிப் பல விஷயங்களை அவர் தனது ஆடியோ வீடியோக்கள் மூலம் உலக மக்களுக்கு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

 

எல்லாமே அவரது அனுபவம் சார்ந்தவையாகவும் இருப்பது அவற்றின் சிறப்பு. அவரது எல்லாக் கருத்துக்களையும், எல்லாச் செயல்பாடுகளையும் நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேபோல என் கருத்துக்களிலும் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

 

ஆனால் நாங்கள் அனைவருமே உண்மை என்று உணர்ந்து கொண்டதைத்தான் எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் மக்கள் மத்தியில் பகிர்ந்துவருகிறோம்.

 

சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்துக்கொள்வது எப்படி என்று ஒரு நிகழ்வை அவர் நிறைவேற்ற இருந்ததை அறிந்துகொண்ட அலோபதி உலகம் தொடர்ந்து அப்படி நடக்குமானால் அது தங்களது வணிகத்தை பாதிக்கும் என்பதால் முறையான தகுதி இல்லாமல் அவர் அக்காரியத்தில் இறங்கியுள்ளதாகச் சொல்லி அவரைக் கைது செய்ய வைத்துள்ளனர்.

 

கைது செய்யப்படுபவர்களெல்லாம் தவறு செய்தவர்களுமல்ல. சுதந்திரமாக உலவிக்கொண்டு இருப்பவர்களெல்லாம் உத்தமர்களும் அல்ல என்பது நமக்குத் தெரியும்.

 

அதோடு தடுப்பூசி போடுவதைத் தடுக்கிறார்கள் என்ற குரலும் எழுந்துள்ளது. தடுப்பூசி கட்டாயமில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். தடுப்பூசி  கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு பிறந்த குழந்தைகளெல்லாம், நம் தாத்தா பாட்டிகளெல்லாம், நம்மைவிட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பதுதான் நிஜம். போகட்டும்.

 

கைது செய்யத் தூண்டியவர்கள் அல்லது அதன் பின்னால் இருந்தவர்கள் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்ததால் ஏற்பட்ட ஒரு சில மரணங்களைக் காரணம் / உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் எத்தனையோ பிரசவ மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. அதற்காக எந்த மருத்துவரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லையே?! ‘அம்மாவையோ அல்லது குழந்தையையோ, இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்என்று எத்தனை திரைப்படங்களில் சீரியல்களில் நாம்டயலாக்கைக் கேட்டிருக்கிறோம்!

 

வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் அதற்காக அப்படிச் செய்வது குற்றம் என்று என்னால் சொல்லமுடியவில்லை. அவசர காலத்தில் இன்றைய ஆங்கில மருத்துவ உலகத்தின் உதவி உயிரைக் காப்பாற்றக் கூடியதாக உள்ளதை  நான் மறுக்கவில்லை. எல்லா விஷயங்களைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே ஒருவர் ஆங்கில மருத்துவ உதவியை நாடாமல் இருக்க முடியும். ஒரு குழந்தை சீரியஸான நிலையில் இருக்கும்போது ஒரு ஹீலரை அழைத்துடச்கொடுக்கலாம் என்று எந்த தாயும் / தகப்பனும் நினைக்க முடியாது.

 

ஒரேயடியாக ஆங்கில மருத்துவ உலகின் உதவி தேவையே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் மாத்திரை மருந்துகள் ஊசிகள் அறுவை சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை என்பதுதான் என் கருத்தும்.

 

ஆங்கில மருத்துவம் தோன்றாத, வளராத ஒரு காலகட்டம் இருந்தது. அதில் வாழ்ந்தவர்களெல்லாம் நம்மை விட ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். மருந்து மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்கள் உடலுக்கு நன்மை செய்வதே இல்லை, மாறாகப் பெரும் தீங்கைத்தான் விளைவிக்கின்றன என்று உலகப்புகழ் பெற்ற மருத்துவர்களான டாக்டர் பி.எம்.ஹெக்டே, டாக்டர் தீபக் சோப்ரா போன்றவர்களே விலாவாரியாகப் பேசியும் எழுதியும் உள்ளனர்.

 

ஐந்து ஆண்டுகள் ஆங்கில மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு ஒரு ஆண்டு மருத்துவமனை அனுபவம் பெற்றுவிட்டால் மனித உடலை முற்றிலுமாக அறிந்துவிட்ட ஒரு மருத்துவ ஞானியாக, ஒரு ஹிப்பாக்கிரேடஸாக, ஒரு இப்னு சீனாவாக யாரும் மாறிவிடுவதில்லை. மாறாக நமக்கு மருந்துகளைக் கொடுத்து பரிசோதித்து பரிசோதித்துத்தான் அவர்கள் அனுபவம் பெறுகிறார்கள்! இதுதான் நிதர்சனம்.

 

எனவே ஹீலர் பாஸ்கரை கைது செய்ய வைத்தது தொழில் ரீதியான பொறாமையின் விளையேயன்றி வேறில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஹீலர்கள் வந்துவிட்டார்கள். டாக்டர் என்று சொல்லப்படுவதையே வெறுப்பதனால்தான் அவர்கள் தங்களை ஹீலர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்!

 

மனசாட்சியும் விபரமும் தெரிந்த மனிதர்கள் ஹீலர் பாஸ்கருக்கு உதவட்டும். அவர் விரைவில் வெளிவந்து தன் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

 

 

 

 

அதிகரிக்கும் வீட்டுப் பிரசவங்கள்   சிக்கல்களும்தீர்வுகளும்

- அக்கு ஹீலர்..உமர் பாரூக் -

 

கடந்த வாரத்தில் தமிழகத்தில் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது திருப்பூரில் நடந்த பிரசவ மரணம் பற்றிய செய்தி. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த, கல்வி அறிவு பெற்ற குடும்பத்தில் யூ டியூபைப் பார்த்து பிரசவ முயற்சி செய்த போது, கூடுதலான உதிரப் போக்கால் தாய் மரணமடைந்தார் என்று பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிந்திருப்போம்.

இப்படி செய்தது சரியா? தவறா? இது அறியாமையில் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்ட குற்றமா? இனி இப்படிப்பட்ட முயற்சிகளை நாம் அனுமதிக்கலாமா? என்பது போன்ற கேள்விகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, இதன் பின்புலத்தை புரிந்து கொள்ள முயல்வோம்.

இதைச் செய்தவர்கள் மருத்துவ வசதி கிடைக்காத தூரத்தில் இல்லை. அருகிலேயே அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் சூழ்ந்திருக்கும் நகரத்தில் இருப்பவர்கள் தான். அதே போல, அவர்கள் கல்வியறிவு பெறாதவர்களும் இல்லை. படித்த குடும்பம் தான். பிரசவத்தில் மரணமடைந்த தாய் ஆசிரியராகப் பணிபுரிபவர். அவருடைய உடன்பாடு இல்லாமல் இந்த முயற்சியே நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது வெளிப்படையானது.

அவர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளும் முடிவை வலி வந்த பிறகு எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், கர்ப்பம் தரித்த ஐந்து மாதத்திற்குள் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பத்தை பதிவு செய்து கர்ப்ப எண் (ஆதார் போல) பெற வேண்டும் என்பது கட்டாயச் சட்டம். கர்ப்பகாலப் பதிவு கட்டாயம் என்பது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்திதான். அப்படியே அவர்கள் பதிய தவறியிருந்தாலும், நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் அரசு மருத்துவப் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் யார் கர்ப்பமாக உள்ளதாகக் கேள்விப்பட்டாலும் உடனடியாக பணியாளர் அவர்கள் வீட்டிற்கே சென்று தகவலை உறுதிப் படுத்தி சுகாதார நிலையத்திற்கு தெரிவிப்பார்.

இந்த இரண்டு பதிவுகளில் இருந்தும் வீட்டில் பிரசவம் பார்க்க முடிவு எடுத்ததால் தான் அந்தக் குடும்பம் தப்பியிருக்கிறார்கள். எனவே, இது அனைவரின் சம்மதத்தின் அடிப்படையில் முன்பே எடுக்கப்பட்ட முடிவாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த முடிவை திருப்பூரில் இருந்த இந்தக் குடும்பம் மட்டும்தான் எடுத்திருக்கிறதா. . .? என்றால் இல்லை. அதே திருப்பூரில் சென்ற ஆண்டு ஒரு குழந்தை வீட்டிலேயே பிரசவமாகி நல்ல முறையில் பிறந்தது. செவிலியரோ, மருத்துவரோ . . யாருடைய உதவியும் இன்றி சுகப்பிரசவம் நடந்தது. அப்போதும், நகராட்சி அதிகாரிகள் வீட்டிற்குச் சென்று தாயையும்குழந்தையையும் கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இதே போல, தமிழகத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பிரசவங்கள் வீடுகளில் நடைபெற்றிருக்கின்றன. ஆங்கில மருத்துவத்தின் பரிந்துரையோ, பரிசோதனைகளோ, உதவியோ இல்லாமல் ஆயிரம் குழந்தைகள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வீட்டில் பிறந்தது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா. . ? அரசு பிறப்பு பதிவேடுகளிலேயே இந்தக் குறிப்புகளை நாம் பார்க்க முடியும்.

பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் படிவத்திலேயே தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. “குழந்தை மருத்துவ மனையில் பிறந்தால் மருத்துவரும், வீட்டில் பிறந்தால் உறவினரும் 21 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்என்று. அப்படியானால், வீட்டில் பிரசவம் நடப்பது என்பது தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக யூ ட்யூபில் பார்த்து பிரசவம் பார்ப்பதெல்லாம் கூடுதல். . . என்ற உங்கள் குரல் கேட்கிறது. ஆமாம் . . .நீங்கள் நினைப்பது சரிதான். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் பிரசவம் பார்ப்பது தவறானது தான்.

ஆனால், இப்படியான வீட்டுப் பிரசவ முயற்சிகள் அதிகரித்திருப்பதற்கான காரணம் என்ன? என்று கண்டுபிடிப்பதுதான் மிக மிக முக்கியமானது.

இப்படியான வீட்டுப் பிரசவங்களை விரும்புகிறவர்கள் படிக்காத பாமரர்களோ, பொருளாதார வசதியற்ற ஏழைகளோ அல்ல. அப்படியானால், அவர்கள் எந்த ,மருத்துவ வசதியும் இல்லாமல் வீட்டுப் பிரசவத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் தான் என்ன . . .?

சர்வதேச மருத்துவ ஆய்விதழ்தி லான்செட்”. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி இதழ் இது. ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹானிமென் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், கிருமிகளைக் கண்டுபிடித்த டாக்டர் லூயிஸ் பாஸ்டர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்த சர்வதேசப் புகழ் பெற்ற ஆய்விதழ்தான் இந்த லான்செட்.

2016 ஆம் ஆண்டு தாய் சேய் மருத்துவம் தொடர்பான உலக நிலையைக் கணக்கெடுத்து, இந்த இதழ் ஒரு ஆய்வினை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியா குறித்து வெளியான தகவல் நமக்குத் தெரிந்ததாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சிசேரியன் செய்யப்படும் சதவிகிதம் – 5%. இந்த நிலை சுமார் முப்பது ஆண்டுகளாக பெரிய மாற்றமின்றி அப்படியே இருக்கிறது. ஆனால், பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு சிசேரியன் செய்யப்படும் சதவீதம் – 10 - 30%. இது சுமார் இருபத்தைத்து சதவீதம் கூடுதலாகி இருக்கிறது என்பது தான் இந்த ஆய்வு முடிவு.

இது அநேகமாக தனியார் மருத்துவமனைகளைக் கணக்கில் கொண்ட ஆய்வாக இருக்கும். ஏனெனில், தனியார் மருத்துவமனைகள் தான் பொருளாதாரத்தைப் பொறுத்து சிசேரியனை மேற்கொள்கின்றன என்படு வெளிப்படையான விஷயம்.

அப்படியானால், அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் நிலை என்ன. . ? ஒரு சிறிய கிராம மருத்துவமனைக்கு சிசேரியன் செய்வதற்கான உபகரணங்களை அரசு வழங்குகிறது. ஓராண்டாக அதனைப் பயன்படுத்தவில்லை என்றால், அந்த கிராம மருத்துவமனை கேட்கும் பிற வசதிகளை அரசு செய்து தராது. ஏனெனில், ஏற்கனவே கொடுக்கப்பட்ட வசதிகளையே மருத்துவமனை பயன்படுத்திக் கொள்ளாத போது எதற்காக புதிய வசதிகள். . ? எனவே, சிறிய மருத்துவமனைகள் முதல் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகள் வரை அரசு வழங்கியுள்ள உபகரணங்களை பயன்படுத்திய கணக்கு தேவைப்படுகிறது. இந்த கணக்கிற்காக கிராமம் முதல் நகரம் வரையுள்ள அத்தனை அரசு மருத்துவமனைகளிலும் சிசேரியன் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

இந்திய மாநிலங்களில் பிரசவகால இறப்புகள் மிகக் குறைந்த மாநிலம் எது தெரியுமா?– அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளதாக நம்பப் படுகிற, 99.99% பிரசவங்களை மருத்துவமனைகளில் நடத்தும் தமிழ்நாடு அல்ல. மருத்துவமனைகளுக்கு வராமல் அதிகமான பிரசவங்கள் நடக்கும் மாநிலமான நாகலாந்து தான் பிரசவ கால இறப்புகள் மிகக் குறைந்த மாநிலம். பிரசவம் ஆரோக்கியமாக நடப்பதற்கு மருத்துவமனை மட்டுமே சரியான இடம் என்பது வெறும் நம்பிக்கைதான்.

ஆக, பிரசவம் என்றாலே சிசேரியன் என்ற நிலையும், அதிலும் தனியார் மருத்துவமனைகளுக்குப் போனால் டீலக்ஸ் பேக்கேஜ், ஆர்டினரி பேக்கேஜ், பிரிமியம் பேக்கேஜ் என்று பிரசவங்களுக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டியதிருக்கும். சரி. . . பொருளாதார இழப்பு மட்டும் என்றால் கூட, கடன் வாங்கியாவது சிசேரியன் செய்து கொள்ளும் மனநிலைதான் மக்களுடையது. ஆனால், அதையும் கடந்து சிசேரியனுக்குப் பின்பான உடல் தொந்தரவுகள் மக்களை அச்சமூட்டும் காரணங்களில் ஒன்று.

பிரசவம் என்பதை ஒரு நோயாகக் கருதி, ஏராளமான ரசாயன மருந்துகளை தாயின் உடலுக்குள் கொட்டும் வேலை இன்னொரு புறம் நடக்கிறது. ஒவ்வொரு ரசாயனமும் ஏராளமான பக்க விளைவுகளைக் கொண்டவை என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்தானே? ரசாயன மருந்துகளின் பாதிப்பில்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள என்ன வழியை நாம் வைத்திருக்கிறோம்?

பொருளாதாரக் கொள்ளை ஒருபுறம் , பிரசவத்துக்குப் பிறகான உடல் ரீதியான தொந்தரவுகள் ஒருபுறமும் பயமுறுத்தும் போது சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் வீட்டுப் பிரசவ வாய்ப்பையே நாடுவார்கள்.

அதெல்லாம் சரி .  அலோபதி ஹாஸ்பிட்டல் போனாலோ, அரசு மருத்துவமனைக்குப் போனாலோ இப்படி நடக்கும் என வைத்துக் கொள்ளலாம். ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா இதிலாவது பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் தானே?

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஆங்கிலம் மருத்துவம் போன்றே, ஐந்தரை வருடங்கள் படித்து விட்டுத்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் ஆகிய துறை சார்ந்த மருத்துவர்களும் வருகிறார்கள். ஆங்கில மருத்துவத்தை கற்றுத்தரும் அதே எம்.ஜி.ஆர். மருத்துவப்  பல்கலைக்கழகம் தான் இந்த மருத்துவங்களையும் கற்றுத்தந்து பட்டம் வழங்குகிறது.

ஆனால், பிரசவம் பார்க்கும் உரிமை ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் நம் நாட்டுச் சட்டம். எனவே, மருத்துவக் கல்லூரியில் மரபு வழி மருத்துவங்களில் எம்.டி. போன்று பட்ட மேற்படிப்பு படித்திருந்தாலும் பிரசவம் செய்யும் உரிமை எந்த மருத்துவத்துக்கும் வழங்கப்படவில்லை. அதனால் தான் எந்த ஹோமியோபதி மருத்துவரும்.,  சித்த மருத்துவரும், ஆயுர்வேத மருத்துவரும், யுனானி மருத்துவரும், இயற்கை மருத்துவரும் பிரசவம் பார்ப்பதில்லை.

இப்போது மருத்துவம் குறித்து ஓரளவு விழிப்புணர்வு பெற்ற ஒருவர், மருத்துவ கொள்ளைகள் பற்றிய அறிவு பெற்ற ஒருவர் என்னதான் செய்ய முடியும். . .? எனவேதான் ஆபத்து எனத் தெரிந்தும் யூ டியூபிலாவது பார்த்து பிரசவம் பார்க்கும் முடிவுக்கு தள்ளப்படுகிறார்.

நம் நாட்டின் மருத்துவச் சூழலை எளிதாக கடந்து போய் விட முடியாது. இப்படியான பல்வேறு காரணிகளின் விளைவுதான் தமிழகத்தில் வீட்டுப் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு இந்தியக்குடிமகன் தான் எந்த மருத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தேர்வு செய்யும் உரிமை அரசியல் சாசனம் மக்களுக்குத் தந்தது. இதனை கோரும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு.

இதற்கான தீர்வு தான் என்ன?

1. பிரசவம் என்பது ஆங்கில மருத்துவத்தின் சொத்து அல்ல. எல்லா மரபு வழி மருத்துவர்களுக்கும் பிரசவம் பார்க்கும் உரிமை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மருத்துவத்தை தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கிடைக்கும்.

 

2. சில ஆண்டுகளுக்கு முன்னால தமிழக ..எஸ். அதிகாரிகளில் ஒருவரான் ஷீலா ராணி சுங்கத் பிரசவம் குறித்த கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்தார். அதில் அவர் முன்வைத்த தீர்வே பொருத்தமானது. மரபு வழி தாதியர்களை மறுபடியும் உருவாக்க வேண்டும். போதிய பயிற்சிகள் கொடுத்து பிரசவம் பார்ப்பதற்கான மரபு வழி அறிவையும்நவீன புரிதல்களையும் கொண்ட புதிய தாதிகளை உருவாக்க வேண்டும். மருத்துவர்களின் குறுக்கீடு பிரசவங்களில் குறைக்கப்பட வேண்டும். மிக அவசியமான தேவை ஏற்பட்டால் ஒழிய எந்த மருத்துவரும் பிரசவத்தில் தலையிடக் கூடாது.

 இதை நோக்கிய மாற்றம் ஏற்பட்டால் தவிர, வீட்டுப் பிரசவங்களை சட்டத்தினால் மட்டும் கட்டுப்படுத்த இயலாது.

 முறையான உடல் பற்றிய அறிவும், புரிதலும், ஒழுங்கான இயற்கை வாழ்வியலும் இல்லாமல் திடீர் வீட்டுப் பிரசவங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் வீட்டுப் பிரசவ முயற்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில மருத்துவத்தை தவிர்க்க வேண்டும் என்றால், கர்ப்ப காலத்தில் மரபு வழி மருத்துவர் ஒருவரின் வழிகாட்டுதலும், சிகிச்சையும் பிரசவ சமயத்தில் மரபுவழி செவிலியர் ஒருவரின் உதவியும் அடிப்படையான தேவைகள்.

 சமீபத்தில் நடந்த ஒரு அமெரிக்க சம்பவத்தோடு இந்தக் கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

 அமெரிக்காவின் நேஷ்வில் பகுதியைச் சேர்ந்த டியா ஃப்ரீமேன் விடுமுறைக்காக துருக்கிக்கு சுற்றுலா சென்றார். இவர் கர்ப்பமாக இருந்த போதும், பிரசவம் ஆக இன்னும் தேதி இருப்பதால் சுற்றுலா சென்றிருக்கிறார். இஸ்தான்புல் நகரத்தில் விடுதியில் தங்கியிருந்த டியாவுக்கு திடீரென பிரசவ வலி ஆரம்பித்தது. பிரசவ அறிகுறிகள் குறித்து கூகுளில் தேடி, தனக்கு வந்திருப்பது பிரசவ வலிதான் என்பதை உறுதி செய்து கொண்டார். குழந்தை பிறக்க நேரம் குறைவாக இருப்பதை இணையதளம் மூலம் கணித்த டியா யாருடைய உதவியும் இன்றி, தானே பிரசவம் பார்த்துக் கொள்ள தீர்மானித்தார். யூ டியுபின் உதவியோடு சில நிமிடங்களில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

 பிரசவத்தின் போது என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது மனிதனோ, மருத்துவனோ அல்ல. பிரசவத்துக்கும் முன்பு அவர்கள் வாழ்ந்த வாழ்வியலும், ஆரோக்கியமான உடல்நிலையும் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

 

ஹீலர் பாஸ்கர் கைது ஏன் ?

தமிழர்களின் பரம்பரை அறிவு உலகத்தில் ஈடு இணை இல்லாதது என்பது நம்மவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் கற்று கொண்டு நம்மை அடிமை படுத்தி வைத்துஇருக்கும் இல்லுமினாட்டி யூத ரத்த வாரிசுகளுக்கு கண்டிப்பாக தெரியும்.

பரம்பரையாக வழிவழியாக நம் பாட்டியிடம் இருந்து அம்மாவிற்கும், அம்மாவிடம் இருந்து பிள்ளைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பதிவுகள் அனைத்தும் குழந்தை பிறந்த சில நாட்களில் கொடுக்க படும் தாய்ப்பாலின் மூலம் வந்து சேரும். தடுப்பூசி போட்டால் அதில் உள்ள நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் உடல் மரபு ரீதியிலான அறிவை குழந்தைக்கு வர விடாமல் செய்கிறார்கள். அதனால் வீட்டில் பிரசவம் பாருங்கள் தடுப்பூசி போடாதீர்கள் என்று நல்லதை சொன்னவர் ஹீலர் பாஸ்கர்.

பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடுவதால் பரம்பரை அறிவு வந்து விடாமல் தடுப்பது தான் முக்கிய நோக்கம் இந்த இல்லுமினாட்டி தடுப்பூசி மருந்து கம்பனிக்கு அவரை கைது செய்து தடுப்பூசி கார்பொரேட் கமபனிக்கு கழுவிவிடும் அரசு இது என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

வீட்டில் பிரசவம் பார்த்து எத்தனையோ பேருக்கு நல்லபடியாக குழந்தை ஆரோக்கியமாக பிறந்துந்துள்ளது. திட்டமிட்டு ஹீலர் பாஸ்கர் சிக்க வைக்க பட்டு இருக்கிறார், பாரி சாலன் போல.....இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியே ஆகா வேண்டும்....காலம் வரும்.

https://youtu.be/ZscvR-Mkdv4     https://www.youtube.com/watch?v=RBfkm3Kq2sA

இந்த கானொலியை அனைவரும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்...

ஹீலர் பாஸ்கர்! நடந்தது என்ன?

தமிழகத்தில் வீட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

எந்த வித மருந்துகளோ, தடுப்பூசிகளோ இல்லாமல்  ஆரோக்கியமடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.

இதனால் கார்ப்ரெட் மருத்துவமான ஆங்கில மருத்தும் பின்னடைவு ஏற்படும் சூழல் .

காத்திருந்தது  கார்ப்ரெட் !

திருப்பூரில் வீட்டில் பிரசவித்த பெண் கிருத்திகா இறந்தார்!

இது  அவர்களுக்கு  சாதகமாக போனது.

கிருத்திகா இறந்தது  ஞாயிறு அன்று(22.07.18)  ஆனால் ஊடகங்கள் இதை பெரிது படுத்தியது செவ்வாய் கிழமை(24.07.18)

இடை பட்ட காலத்தில் திட்டம் தீட்டப்பட்டது!

யூட்யூப்   மீது பழி சுமத்தப்பட்டது!( இது ஹீலர் பாஸ்கரின்  யூட்யூப்  வீடியோக்களை குறிவைத்து நடத்தப்பட்டது தானே தவிர, யூட்யூப் பார்த்து யாரும் பிரசவம் பார்க்கவில்லை)

வீட்டு பிரசவத்தில் தவறு வராமல் இருக்க, ஹீலர் பாஸ்கர் சிறப்பு வகுப்பு நடத்த அறிவிக்கிறார்! அதுவும் இலவசமாக!

பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் ஹீலர் பாஸ்கர் மீது புகார் தெரிவிக்கவில்லை!

இலவசம்   என்று அறிவித்துவிட்டு ரூ.5000/- கட்டணம் வசூலித்ததாக  வழக்கு!

விசாரனைக்கு  அழைக்கப்படுகிறார் ஹீலர் பாஸ்கர்!

ஆனால்  உண்மை!

சுகப்பிரசவம்  வகுப்பு இலவசம்  தான்!

மோசடி செய்யும் நபர்  இல்லை ஹீலர் பாஸ்கர்! அது அவருக்கு தேவையுமில்லை.

அவரது 5 நாள் பயிற்சி வகுப்புக்குத்தான் தங்கும் செலவு,உணவு கட்டணம் இதற்கான நன்கொடையே ரூ.5000/- அதுவும்  கூட  எல்லோருக்கும் கட்டாயம் இல்லை. விருப்பமிருந்தால் தான்.

இது எளிதான வழக்கு தான்!

அவரால் பயனடைந்தவர்கள்  ஏராளம்!

பயனடந்தவர்களின்  விருப்பம்  நிறைவேறும்!

பின்னடைவு   கார்ப்ரெட்களுக்குத்தான்.

 

கோவையில் ராயல் கேர் என்ற மருத்துவமனை ஆரம்பிச்சி 14 மாசம் தான் ஆகுது இது வரை 6032 பிரசவங்கள் நடந்துள்ளன, 5809 பிரசவங்கள் சிசேரியன்!! 152 பிரசவங்களில் குழந்தைகள் மரணம், 3 கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சையின் போது மரணம்!! சிசேரியன் க்கு 100000 ₹, முடியாதவர்கள் மாத தவனையில் பணம் கட்டலாம்!! கோவையின் எந்த ஆம்புலன்ஸ்ல பிரசவத்துக்காக ஏறினாலும் ராயல் கேர் மருத்துவமனைக்கு மட்டுமே செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் ராயல் கேர் மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படுவர்..!! கடந்த ஓராண்டில் ராயல் கேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 12091.கலெக்ஷன் ஏஜென்ட்களை நியமித்து கடன் பாக்கியை வசூல் செய்கிறார்கள்!! அந்த மருத்துவமனைக்கு வெகு அருகில் தான் ஹீலர் பாஸ்கரின் நிஷ்டை மையம்

இப்போ புரியுதா?? ஹீலர் பாஸ்கர் ஏன் கைது ன்னு.....

ராயல் கேர் மருத்துவமனையின் உரிமையாளர் அமைச்சர் வேலுமணி, பங்குதாரர்கள் விஜயபாஸ்கர் வானதி மற்றும் சிபி ராதா கிருஷ்ணன்....!!  Gokul Kannan Shanthalinga Kumar Aiadmk

 

(சவுக்கு சங்கரின் ஒரு பதிவின்கீழுள்ள கமெண்ட் இது....  உண்மை - பொய் தெரியவில்லை. சமூக நலன் கருதியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது)

*********""*************  *********""*************  *********""*************  *********""*************

ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களின் கைது நடவடிக்கையின் உண்மை காரணம்.!

ஐயா ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அவர் சுகப்பிரசவம் குறித்த வகுப்பு நடத்த விளம்பரம் கொடுத்து இருந்தார், அதனால் கைது செய்கிறோம் என காரணம் கூறுகிறார்கள்...

ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல. இது ஒன்றும் முதல் வகுப்பல்ல. சுகப்பிரசவம் குறித்து ஏற்கனவே பல வகுப்புகள் - மருட்டி பிரசவம் -  நடத்தி உள்ளார். அப்போது கைது செய்யவில்லை. மேலும் 8 வருடங்களாக  நோயில்லாமல் வாழ கற்று கொடுத்து வருகிறார்... 

இப்போது இரண்டு வருடங்களாக தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களையும் கற்று கொடுத்து வருகிறார்.  தேங்காய் எண்ணெய்  சோப்பு , செக்கு நல்லெண்ணெய் , செக்கு கடலை எண்ணெய், தூய தேங்காய் எண்ணெய், இயற்கை அரிசி, இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள், இயற்கை உணவு பொருட்கள், இன்னும் பல...

மேலும் தற்சார்பு வாழ்க்கைக்கு தேவையான பயிற்சியை அளிக்கவும் உள்ளார். இதற்கான வகுப்பு வரும் "ஆகஸ்ட் 15"  அன்று சென்னையில் நடக்க உள்ளது. இதில் நம் வீட்டில் பயன்படுத்தும் "42" வகையான பொருட்களை நாமே குறைந்த செலவில், தரமாக தயாரிப்பது எப்படி என ஹீலர் பாஸ்கர் பயிற்சி தர உள்ளார். மேலும் பன்னாட்டு நிறுவன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அந்த வீடியோவில் கூறி உள்ளார்...

ஏற்கனவே குளியல் சோப்பு , கலப்பட எண்ணெய் மார்க்கெட் இவரால் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது . பலரும் தூய தேங்காய் எண்ணெய் சோப்பு, செக்கு எண்ணெய்க்கு மாறி வருகின்றனர்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இதில் பலத்த அடி. "வருமானம் இழப்பு"... 

இதில் மேலும் 42 பொருட்கள் குறித்த பயிற்சி என்றால் சும்மா விடுவார்களா கார்ப்பரேட் முதலாளிகள்..! எதாவது காரணம் கிடைக்குமா என்று காத்திருந்து. இந்த சுகப்பிரசவ பயிற்சியை காரணமாக வைத்து  கைது செய்து விட்டார்கள்...

 

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இயற்கை மருத்துவம்  பற்றி கூறினால் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆங்கில மருத்துவத்தை பற்றி குறை கூறினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் பெரும்பாலும் மீடியாக்கள் மூலமாக பிரச்சாரம் செய்து , பயம் காட்டி ஆங்கில மருத்துவத்தை நடத்தி விடலாம். முட்டாள் மக்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என அவர்களுக்கு தெரியும்.

ஆனால் தற்சார்பு வாழ்கை என்று பேசினால் போதும். உங்களை கைது செய்து விடுவார்கள். ஏனென்றால் கார்ப்பரேட்டுகள், இல்லுமினாட்டிகளுக்கு அவர்கள் வியாபாரம் முக்கியம். அதை இழக்க ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அதற்காக எதையும் செய்வார்கள்...

 

தற்சார்பு பேசுபவன் கார்ப்பரேட் கம்பெனிகளின் முதல் எதிரி. சுதந்திர தினத்தன்று , கார்பொரேட் கம்பெனி பொருள்களில் இருந்து விடுதலை தர நமக்கு பயிற்சி தர இருந்தார் ஹீலர் பாஸ்கர்... 

அவர்களது வியாபாரத்தில் கை வைத்தால் கார்ப்பரேட் அலறுவான். அதிகாரத்தை பாய்ச்சுவான். இதுதான் ஹீலர் பாஸ்கருக்கும் நடந்தது...

 

************************************************************************************************************

பாஸ்கர் ஐயா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் பின்னணியில் மருத்துவக் கவுன்சில் மட்டுமில்லை.

 

அலோபதி மருத்துவர்கள் , மருத்துவமனைகள், மருந்துக் கம்பெனிகள்,  அரசு சுகாதார அமைப்புக்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், இவை அனைத்தையும் இயக்கும் கார்பரேட்கள் என பெரிய டீமே பின்னணியில் உள்ளன.

 

அதே போல் இது ஒரு தனிப்பட்ட பாஸ்கர் மீது மட்டும் தொடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

 

மரபுவழி மருத்துவம், மாற்று முறை மருத்துவம், - மருத்துவர்கள், - இவற்றை  வாழ்வியலாய் கொண்டவர்கள், - இவற்றால் பயனடைந்தவர்கள், அலோபதி போன்றவற்றிற்கு எதிர் கருத்து கொண்டவர்கள்,  - செயலாற்றுபவர்கள், கார்பரேட் கம்பெனி தயாரிப்புக்களை புறக்கணிப்பவர்கள் என அனைவர் மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை

புரிந்து கொண்டு செயல்படுவோம்.

 

********************************************************************************************************************************************************

*மரபுவழி மருத்துவத்தைத் தடுப்பதா? - ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய சீமான் வலியுறுத்தல்*

-  கார்த்திக்.சி

 

நமது பாரம்பர்ய மரபுவழி மருத்துவம் குறித்தும், இயற்கை முறையில் மகப்பேறு பெறுதல் குறித்தும் போதிய விழிப்பு உணர்வையும், வழிகாட்டுதலையும் அரசு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹீலர் பாஸ்கர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,``மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும்.

 நிஷ்டை எனும் அமைப்பின் மூலமாக, ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி' எனும் பெயரில் மகப்பேறு குறித்தப் பரப்புரை நிகழ்வொன்றை வரும் ஆகஸ்ட் 26-ம் தேதியன்று கோவையில் நடத்துவதற்கு ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அந்நிகழ்வுக்கெதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது மோசடி செய்யும் நோக்கத்துடன் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. அப்படியே அது குற்றமென்றால் பயிற்சி வகுப்பை தடை செய்திருந்தாலே போதுமானது. மரபுவழி மருத்துவத்தையே மடமைத்தனம் என்பதுபோல ஒரு மாயையை ஏற்படுத்துவதைத் தாண்டி வேறு எதையும் இக்கைது நடவடிக்கை சாதிக்கப் போவதில்லை.

 

திருப்பூரில் கிருத்திகா எனும் பெண்மணிக்கு அவரின் கணவர் காணொளியைப் பார்த்து மகப்பேறு பார்க்க முயன்று அப்பெண்மணி இறந்துபோனது பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். முறையான வழிகாட்டுதலோ, மகப்பேறு பயிற்சியோ, முன் அனுபவமோ, அதுகுறித்தான எந்தவொரு அடிப்படை அறிவுமின்றி மகப்பேறு செய்ய முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

அதேநேரத்தில், இதனை வைத்து மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் கட்டமைக்க முயல்வதும், அதுகுறித்தான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவோரை சிறைப்படுத்துவதும் மிகத் தவறானப் போக்காகும். இது தமிழர்களின் மரபுவழி மருத்துவத்துக்கும், பாரம்பர்யமான இயற்கை வாழ்வியலுக்கும் திரும்புவோரைத் திட்டமிட்டுக் குழப்பி திசைதிருப்பும் துரோகச்செயலாகும்.

 

 முடி உதிர்தல், ஆண்மைக்குறைவு போன்றவைகளுக்குத் தீர்வெனக் கூறி பலதரப்பட்ட விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. அவ்விளம்பரங்கள் வாயிலாகக் காட்டப்படும் மருத்துவமானது உயிருக்குத் தீங்கு விளைவிக்காது, பக்கவிளைவும் எதுவுமற்ற தீர்வினைத் தரும் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடுமில்லை. அவ்வாறு காட்டப்பட்ட மருத்துவத்தின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன.

 

இவ்வாறு தனிப்பெரும் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக மக்களின் அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உயிரும், உடலும் வணிகமாக்கப்பட்டு மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் இப்பெரும் மோசடி ஆளும் வர்க்கத்தின் கண்பார்வையில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எவரையும் மோசடி வழக்கின் கைது செய்ததுமில்லை; அவர்களது பரப்புரைக்கு எவ்விதத் தடை உத்தரவை இடவுமில்லை.

 

மேலும், மதங்களின் பெயராலும், ‘நோயைக் குணப்படுத்துகிறேன்எனும் பொய்யுரையும், ‘இறந்தவரை உயிர்ப்பிக்க எம்மிடம் வாருங்கள்' எனும் மத அடிப்படைவாதப் பரப்புரையும் இங்கு செய்யப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியே எடுக்க நல்ல நேரம் பார்க்கும் மூட நம்பிக்கை கொடுமைகளும்கூட தழைத்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கெதிராக சட்டமும், அரசும் இதுவரை எவ்விதத் துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை கண்முன்னே பார்த்து வருகிறோம். மகப்பேறின்போது தாய் இறந்துபோவதை மோசமானச் சுகாதார குறியீடாக உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் செய்யும்போது நிகழும் மரணங்களை வைத்து எவரும் ஆங்கில மருத்துவமே தவறென வாதிட முன்வருவதில்லை.

 

இன்னும் சொல்லப் போனால், விபத்து எனக் கூறி அதை எளிதாக மூடி மறைத்து விடுகின்றனர். அதேசமயம், இயற்கையாகக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மரபுவழி மருத்துவத்தையே பயிலாத ஒருவர் சுகப்பிரசவம் எனும் பெயரில் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க முயன்று அதில் அந்தக் கர்ப்பிணிப் பெண் இறந்து போனதை தனி மனிதத் தவறு என்பதனைக் கணக்கிடாமல் ஒட்டுமொத்த மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் குற்றம்சாட்ட முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது. இதை அடிப்படையாக வைத்து மரபுவழி மருத்துவத்தையே அடிப்படைவாதமாகவும், அறிவற்றச் செயலாகவும் நிறுவ முற்படுவோரின் செயலானது மகப்பேறினை பெரும் வணிகமாக்கி அதன்மூலம் லாபமீட்டத் துடிக்கும் தனியார் முதலாளிகளின் லாபவேட்டைக்குத் துணைபோகிற கொடுஞ்செயலாகும்.

 

 மரபுவழி மருத்துவத்தின் வாயிலாகவோ, ஆங்கில மருத்துவத்தின் வாயிலாகவோ எதன் வாயிலாகக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதை எவரும் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. அது உரிமையையும், விருப்பத்தையும் சார்ந்தது. அதேநேரத்தில், நமது பாரம்பர்ய மரபுவழி மருத்துவம் குறித்தும், இயற்கை முறையில் மகப்பேறு பெறுதல் குறித்தும் போதிய விழிப்பு உணர்வையும், வழிகாட்டுதலையும் செய்யலாம். அவ்வாறு செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அந்த அடிப்படையில் மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை மேற்கொள்ளவிருந்த ஹீலர் பாஸ்கர் கைது நடவடிக்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். ஆகவே, ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரின் மேலாளர் சீனிவாசன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Thanks to Vikatan

********************************************************************************************************************************************************

யாரையெல்லாம் கைது செய்வீர்கள்?

ஹீலர் பாஸ்கரின் கைது நமக்கு- மரபுவழியை பின்பற்ற வேண்டும் என்போருக்கு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

ஆயிரமாண்டுகால மரபு வழி சுகப்பிரசவ முறையை, வெறும் மிரட்டல்கள் மூலம் முடக்கிப்போட பார்க்கிறார்கள். முன்பை போல் அல்ல. இன்றைய இளைய தலைமுறை தன் வேர்களை தேடிப் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றது. அந்த பயணம் நீடிக்கக்கூடாது. நீடித்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின்-முதலாளிகளின் வாழ்வாதாரம் கெட்டுவிடும்.

எனவே இதைத் தடுத்தாக வேண்டும். அப்படி தடுக்கும் நோக்கில்தான் இந்தவித மிரட்டல்கள்.

 

மரபுவழி மருத்துவத்திற்கு பயிற்சி கொடுக்கப்போகிறேன் என்பதற்கு கைது.!அதாவது சுகப்பிரசவத்திற்கு பயிற்சி கொடுக்கப் போகிறேன் என்றார். இது குற்றம் என்கிறார்கள்.

அப்படிப்பார்த்தால் அரசையும், அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளையும்தான் கைது செய்யவேண்டும்.! எப்படி?   விஷயத்திற்கு வருகிறேன்.

 

கிராம அல்லது பேரூராட்சி அளவிளான பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றது. அங்கு கற்பினிகளுக்கு பிரசவம் பார்ப்பதற்கு என்று மகப்பேரு உதவியாளர் ஒருவர் இருப்பார். ஒயிட் அண்ட் ஒயிட்டில் ஒரு கிட்டை கையில் வைத்துக்கொண்டு வலம் வருவார்.

 

எந்த வீட்டில் கற்பினி பெண் இருக்கின்றாரோ அவரைப் பார்த்து ஆலோசனைகளைக் கூறுவார். தேவைப்பட்டால் மருந்து மாத்திரைகளை வழங்குவார். நிறை மாதத்தை நெருங்கும்போது அடிக்கடி வந்து கவனிப்பார். தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு முன்கூட்டியே வரப்சொல்லிவிடுவார்.

 

அப்படியான அந்த மகப்பேர் உதவியாளருக்கு உதவியாக உள்ளூர்- அந்த பகுதியிலேயே பல சுகப்பிரசவங்களை பார்த்த, முதிர்ந்த அனுபவசாலி ஒருவர் உடனிருப்பார். பெரும்பாலும் இவர் சுகப்பிரசவங்களை பார்த்த அனுபஸ்த்தராகவே இருப்பார். இந்த அம்மையார்தான் அரசு ஊழியரானமகப்பேர் உதவியாளருக்குஆல் இன் ஆல்.

இன்னும் சொல்லனும் என்றால் அந்த படிக்காத மரபுவழி சுகப்பிரசவம் பார்த்த அம்மையார்தான் பிரசவமே பார்ப்பார். அரசு உதவியாளர் உதவியாகவே இருப்பார்!

ஆச்சா.

 

சமையத்தில் என்ன நடக்கும் என்றால் கிராமப்பகுதிகளில் உள்ள கற்பினிகளுக்கு திடீர் பிரசவ வலி வந்துவிடும். அந்த சமையங்களில் அந்த படிக்காத உள்ளூர் அனுபவக்கார அம்மாதான் ஓடோடி வரும். உடனிருக்கும். அப்படி இப்படி என்று போராடி சுகப்பிரசவம் பார்த்து பிள்ளையை கையில் எடுத்துக் கொடுப்பார்.

 

இதற்குள் சைக்கிளிலோ அல்லது நடையும் ஓட்டமுமாக ஓடி ஆரம்ப சுகதார மருத்துவமனையில் இருக்கும் மகப்பேர் உதவியாளரை அழைத்து வருவார்கள். மருத்துவமனையில் இல்லை என்றால் அவர் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை நோக்கி ஓடுவார்கள். சில நேரங்களில் அந்த மகப்பேர் உதவியாளர் குடும்பத்தோடு சினிமா கொட்டைக்கு (டூரிங் டாக்கீஸ்) சென்றிருந்தால் அங்கு ஓடியும் தேடி அழைத்து வருவார்கள். இதற்குள் குழந்தை நல்லபடியாக பிறந்து முடிந்திருக்கும்.

 

ஆக சுகப்பிரசவம் பார்ப்பதில் அனுபவம் பெற்ற அந்த உள்ளூர் அம்மையாரைபயிற்சியாளர்’!!!- ‘உதவியாளர்’!!! என்றுகூறி வருகிறார்கள். இப்போதும் பல ஊர்களில் இத வழக்கத்தில் இருக்கிறது என நினைக்கின்றேன்.

 

ஆக அவர்கள் மரபுவழி சுகப்பிரசவம் பார்ப்பதில் அனுபவம் பெற்றிருந்தாலும்பயிற்சி அளிக்கப்பட்டவராகவைத்திருக்கிறார்கள். அவருக்கு என்ன சம்பளம் என்று தெரியாது. ஆனால் அப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

அப்படியே ஹீலர் பாஸ்கர் சொன்ன விஷயத்திற்கு வருவோம். மரபுவழி சுகப்பிரசவத்திற்கு பயிற்சி அளிக்கப்படும் என்றுதான் கூறினார். அப்படி பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் பிரசவம் பார்ப்பதில் என்ன தவறு? இப்படி சொன்னவரை கைது செய்ய வேண்டும் என்றால், இன்றைக்கும் பல கிராமங்களில்பயிற்சி பெற்ற உதவியாளர்பிரசவம் பார்த்துக்கொண்ருக்கின்றார்களே. அதற்காக யாரை கைது செய்வது?

 

சரி, வேண்டாம். இன்றைக்கும் பல கிராமங்களில் சுகப்பிரசவம் நடந்துகொண்டுதானே இருக்கிறது. பல மலை கிராமங்களில் இன்றும் தொடர்கிறதே. அவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் அனுபவசாலிகளை எல்லாம்பயிற்சி பெறாதவர்கள்என கைது செய்யப்போகிறீர்களா?

 

இதுதான் நம் கேள்வி.

 

பா.ஏகலைவன்.

 

********************************************************************************************************************************************************

05/08/2018

பாஸ்கர் ஐயா மற்றும் வீட்டுப் பிரசவம் குறித்த தவறான தகவல்களே பத்திரிக்கைகள், TV போன்ற மீடியாக்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக பரப்பப்பட்டுப் கொண்டே இருக்கின்றன.

அவற்றைப் பார்க்கும் / படிக்கும் ஜனங்கள் ஒற்றைப் புரிதலோடு தவறான கண்ணோட்டத்தில் பலரும் இருக்கின்றனர்.

விபரம் முழுவதும் தெரிந்து கொள்ளாமலே மேலோட்டமாக தெரிந்தவற்றைக் கொண்டு மேலும் தவறான செய்திகளை, வதந்திகளை பரப்புகின்றனர்.

 

யாராவது அவ்விதம் நம்மிடம் பேசிக் கொண்டு வந்தால் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் :

 

1. ஹீலர் பாஸ்கர் நடத்தும் ஒரு நாள் இலவச வகுப்பில் கலந்து கொண்டிக்கிறீர்களா?

 

2. அவரின் ஒரு நாள் வகுப்பின் வீடியோவை முழுவதுமாக பார்த்திருக்கிறீர்களா?

 

3.அவர் எழுதியிருக்கும் புத்தகங்களில் ஏதாவது ஒன்றையாவது முழுவதுமாக வாசித்திருக்கிறீர்களா?

 

4.அவர் சொல்லியதை பின்பற்றி உணவு, தண்ணீர், காற்று, தூக்கம் போன்றவற்றை பழக்கத்துக்கு கொண்டு வந்து அதனால் பயனுண்டா இல்லையா என்ற ஏதாவது அனுபவம் உங்களுக்கு உண்டா?

 

இவைகளுக்கு பெரும்பாலான கருத்துக் கந்தசாமிகளின் பதில் 'இல்லை' என்பதாகவே இருக்கும்,

 

இவர்களிடம் முடிந்தால் விளக்கலாம் இல்லையேல் இவர்களிடம் பேசுவதிலிருந்து விலகலாம்

 

இதே யோக்யதைதான் பெரும்பாலான தொ.காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் (?) அனைவரிடமும் இருக்கிறது.

 

அவர்களிடம் ஹீ்லர் உமர் பாரூக், ஏங்கல்ஸ் ராஜா, புகழேந்தி போன்றோர் பேசுவது விழலுக்கிறைத்த நீர் போன்றது.

 

 

மரபுக்குத் திரும்புங்கள். அதுவே புவி முழுமைக்குமான தீர்வு

.செந்தமிழன்

 

''வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது குற்றம் இல்லை. ஆனால் அரசின் பதிவு பெறாத நபர்கள் பிரசவம் பார்ப்பது குற்றம். பயிற்சியில்லாத நபர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை மருத்துவம் என்று கூறி பிரசாரம் செய்வது குற்றம்

- தமிழக சுகாதாரத் துறைச் செயலர், மரு.இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.

 

பி.பி.சி தமிழ் இணையச் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் இந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

எனது கருத்துகளையும், செம்மைச் செயற்பாட்டாளர் கலாநிதியின் கருத்துகளையும் கூட இதே கட்டுரையில் பதிவு செய்துள்ளார் அவர்.‘வீட்டுப் பிரசவமே குற்ற நடவடிக்கை. இதைப் பற்றிப் பேசுவோரைக் கைது செய்ய வேண்டும்என்ற பொய் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

 

பகுத்தறிவின் ஊனப் பார்வைக்குச் சட்டமும், நடைமுறையும் தெரியாது.

 

எல்லாப் பிரசவங்களும் அலோபதி முறைப்படி, மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்பது மேற்கத்திய நிறுவனமயப்பட்ட அடிமைகளின் பேராசை.

 

மரபுவழியில் பயணிப்போருக்கு பேராசை இல்லை. விருப்பம் உள்ளது. நாம் நம் விருப்பத்தில் நிலைக்கிறோம். ஆழ்ந்த வேண்டுதலுடன் உள்ளோம். மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன.

 

மரபுவழிகளில் பிள்ளைப் பேறு எட்டும், கல்வி முறை வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்துகிறேன். இக்கல்வி ஏட்டுக் கல்வியாக மட்டுமில்லாமல், மரபு நுட்பங்களின் நடைமுறைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்.

 

நகரமயப்பட்ட புதிய தலைமுறையினருக்கு இக்கல்வி எளிதில் கிடைக்க வேண்டும். அவர்கள் விரும்பினால், இக்கல்வி வழிகாட்டலோடு வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை வேண்டும். இதைச் செய்வதும் அரசின் கடமைதான்.

 

இந்த நிலத்தில் வாழும் அனைவருக்கும் இந்த நிலத்தின் மரபுகளைப் போற்றவும், பற்றவும் உரிமை உண்டு. இவ்வுரிமையைச் செயலாக்குவதில் சிக்கல் நேர்ந்தால், அச்சிக்கலைச் சரி செய்ய வேண்டுமே தவிர, உரிமையைப் பறிக்கக் கூடாது.

 

போலி வாக்குறுதி அளிப்போரும், பழமைவாதிகளும், வணிக மருத்துவ நிறுவனங்களும் சமூகத்தின் கேடுகள். இக்கேடுகளைக் களையும் தீர்வு, தற்சார்பான வாழ்வியலில் மட்டுமே உள்ளது. மரபுதான் தற்சார்பின் தாய். ஆகவே, மரபுக்குத் திரும்புங்கள்.

 

ஹீலர் பாஸ்கர், வீட்டுப் பிரசவத்திற்காக எவ்வித வாக்குறுதியும் அளித்து, அதற்கான பணம் பெறவில்லை. நான் புரிந்துகொண்டவரை, அவர் அவ்வாறான மனிதர் அல்ல. அவர் மீது, புகார் அளித்தவர்கள் பகுத்தறிவுவாதத்தின் பித்துப் பிடித்த நிலையில் உள்ளோர். அவரைப் புரிந்துகொள்ளாமல் செய்திருக்கிறார்கள்.

 

சட்டப்படி அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நியாயப்படி அவர் நன்மைகள் பல செய்துள்ளார். அவரை விடுவிக்க வேண்டும். மரபுச் சமூகத்திற்கு வருகை தரும் நம் மக்கள் அனைவரும் தொடர்ந்து செயல்படுங்கள். அவர் விடுதலை நம் விருப்பம்.

 

இச்செய்திக் கட்டுரையை, இதில் உள்ள உண்மைகளைப் பரவலாக எடுத்துச் செல்லுங்கள். பகுத்தறிவாளர்களுக்குப் பதில் கூறாதீர்கள். அவர்கள் அடுத்த பொய்களை உருவாக்க உழைப்பார்களே தவிர, சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள், நியாயத்தையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

 

ஆங்கிலமே அறிவு மொழி, அறிவியல் என்றாலே மேற்கிலிருந்து வருவதுதான் என்பவை எல்லாம் பகுத்தறிவின் மூடநம்பிக்க்கைகள். நாம் ஆங்கிலமும் அறிவோம் தமிழும் அறிவோம் ஆரியமும் அறிவோம். நமக்கு எம்மொழி மீதும் வெறுப்பில்லை. மேலை நாட்டு நுட்பங்களை நாம் வெறுப்பதில்லை. நம் நாட்டு நுட்பங்களை விட்டுக்கொடுப்பதுமில்லை.

 

நாம் பழமைவாதிகள் அல்ல, மரபுவாதிகள். மரபு என்பது காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்துகொண்டு, தொன்மையின் மெய்மையில் நிலைத்து வளர்வதாகும்.

 

நமக்குக் கருவிகளைப் பயன்படுத்தவும் தெரியும், அக்கருவிகள் இல்லாமல் வாழவும் தெரியும்.

 

நாம் பகுத்தறிவாளர்களை விட மேலான தகுதி பெற்றோர். அவர்களுக்கு இருப்பது ஒற்றைத் தன்மை. நம்மிடம் இருப்பது பன்மயம். தமிழ் போற்றிய அப்பாத்துரையார் 18 மொழிகள் அறிந்தவர். ’பன்மொழிப்புலவர்என்று அவருக்கு அடைமொழி உண்டு.

 

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் அவர் இயற்றிய, ‘குமரிக்கண்டம்எனும் நூலில் டைனோசரஸ் எனும் விலங்கு குறித்த தகவல்களை, மேலை நாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்தவர் அவர். இந்த பகுத்தறிவாளர்களுக்கு அந்தக் காலத்தில் இவ்வாறான கல்வியே கிடையாது. ஆங்கிலத் திரைப்படம் பார்த்த பிறகுதான், டைனோசரஸ் எனும் விலங்கை இவர்கள் அறிந்துகொண்டார்கள்.

 

நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்லர். நாம் எந்தக் கண்டுபிடிப்பிற்கும் எதிரிகள் அல்லர். மாற்றங்களை நிராகரிப்பவர்கள் அல்லர்.

 

இயற்கைக்கும், பல்லுயிர் வாழ்க்கைக்கும் பொருந்தாதவற்றை நிராகரிக்கிறோம். இந்த மெய்யறிவை நமக்கு நம் மரபு வழங்கியுள்ளது.

 

மரபுக்கொள்கையில் நிலைப்பதே இறை அருள்தான்.

மரபு வாழ்வியலே புவிமுழுமைக்குமான தீர்வு. நாம் நம் மரபில் வாழத் துவங்குவோம்!

 

பி.பி.சி கட்டுரைச் சுட்டி:

https://www.bbc.com/tamil/india-45074210

 

No comments:

Post a Comment